ஆளுநர் தலையிடனும்.. மாநில மனித உரிமை உறுப்பினர் கண்ணதாசன் யாரு தெரியுமா? அதிமுக இன்பதுரை கொந்தளிப்பு
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் கொடுக்கும் அறிக்கை போலியானதாக இருக்கும் எனவும் இந்த விவகாரத்தில் ஆளுநர் தலையிட வேண்டும் எனவும் அதிமுக வலியுறுத்தியுள்ளது.
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, நெஞ்சு வலி காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி தொடர்ந்து மருத்துவமனை சிகிச்சையில் உள்ளார்.

இந்த நிலையில், செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட போது மனித உரிமை மீறல்கள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்த நிலையில், இன்று மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் நேரில் சென்று செந்தில் பாலாஜியை பார்த்தார். பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கண்ணதாசன் கூறியதாவது:- அதிகாரிகள் தன்னை இழுத்ததால் தலையில் காயம் ஏற்பட்டதாக செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
செந்தில் பாலாஜி சோர்வாக காணப்பட்டார். தன்னை தாக்கியதாக சில அதிகாரிகளின் பெயர்களையும் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளர். பெறப்பட்ட புகார்கள் அடிப்படையில் நேரில் விசாரித்தேன். அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் மனித உரிமை ஆணையம் நாளை முடிவெடுக்கும். மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து இதனை விசாரித்துள்ளது' என்றார்.
இந்த நிலையில், மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் கொடுக்கும் அறிக்கை போலியானது என்று அதிமுக விமர்சித்துள்ளது. இது குறித்து அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- தமிழகத்தில் தற்போது நடக்கும் விஷயங்களை பார்க்கும் போது சட்டத்தின் ஆட்சிதான் நடக்கிறதா என்று சந்தேகமாக உள்ளது.
மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் மோதல் போக்கை ஏற்படுத்தும் நோக்கில் மாநில அரசு நிர்வாகம் செயல்பட்டு கொண்டு இருக்கிறது. நீதிமன்றத்தில் செய்தி பார்த்துக் கொண்டு இருந்தேன். மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் கண்ணதாசன் மருத்துவமனையில் இருக்கும் செந்தில் பாலாஜியை சந்திக்க போவதாக செய்தி வந்துள்ளது. இது எப்படி நியாயம்.
திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் கண்ணதாசன். பல வருடங்களாக ஊடகங்கள் முன்பாக திமுக செய்தி தொடர்பாளராக இருந்தவர். அப்படிப்பட்டவரை நியமித்ததே முதலில் தவறு. அதற்கு ஓய்வு பெற்ற நீதிபதிகளையும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும் நியமிக்கும் வழக்கம் தான் உண்டு. ஆனால், வழக்கறிஞராக மட்டும் இன்றி திமுகவிற்காக வாதாடும் செய்தி தொடர்பாளராக இருந்தவர் கண்ணதாசன்.
செந்தில்பாலாஜியை இவர் பார்க்க போகிறாராம்.. இங்கு எங்கே சட்டத்தின் ஆட்சி இருக்கிறது. சாதாரண ஏழைக்கு இந்த நியாயம் கிடைக்குமா? தமிழ்நாட்டில் இருக்கும் மாநில மனித உரிமை ஆணையம் என்பது இயங்காத ஒரு அமைப்பாக இருக்கிறது. அதில் உறுப்பினராக யாரை போட்டு இருக்காங்க பாருங்க.. திமுகவிற்காக டிவி விவாதங்களில் பங்கேற்று இருந்த வழக்கறிஞர் தான் கண்ணதாசன்.
அவரை மாநில உரிமை ஆணையத்தின் உறுப்பினராக போட்டதே தவறு. உங்க வழக்கிற்கு நீங்களே நீதிபதியாக இருக்க முடியுமா? எனவே இதை வன்மையாக கண்டிக்கிறேன். கண்ணதாசன் கொடுக்கும் அறிக்கை போலியானதாகத்தான் இருக்கும். அது சட்டத்திற்கு விரோதமானதாக இருக்கும். இந்த விவகாரத்தில் கவர்னர் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போலீஸ் துறையை கையில் வைத்து இருக்கும் முதல்வர் ஸ்டாலின், செந்தில் பாலாஜியை நேரில் போய் சந்தித்து இருக்கிறார். பிறகு எப்படி நியாயம் கிடைக்கும். உடனடியாக கவர்னர் தலையிட்டு மத்திய அரசு தலையிட வேண்டும். நீதிமன்றம் இதை ஏற்றுக்கொள்ளாது. நீதிபதிகளும் டிவியை பார்த்துக் கொண்டுதானே இருக்கிறார்கள். எனவே இதை வன்மையாக கண்டிக்கிறேன். கண்ணதாசன் நியமனமே தவறு.
அது குறித்து பிறகு கேள்வி எழுப்புவோம். கண்ணதாசன் கொடுக்கும் அறிக்கையை ஏற்றுக்கொள்ளக் கூடாது என மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன். அதுபோல இதில் உடனடியாக ஆளுநர் தலையிட வேண்டும். இதில் மாநில மனித உரிமை ஆணையம் தலையிடுவதில் தவறு இல்லை. ஆனால் கண்ணதாசன் நியமனம் தவறு. கண்ணதாசன் பார்ப்பது தனது வழக்கில் தானே நீதிபதியாக இருப்பதற்கு சமம். இவ்வாறு அவர் கூறினார்.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications