கடைசி நேரத்தில் ட்விஸ்ட் கொடுத்த விஜய்.. பனையூர் அலுவலகத்தில் தவெக ஆலோசனை கூட்டம்! அடுத்து என்ன
சென்னை: இன்று காலை 10 மணியளவில் விஜய்யின் தவெக கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. காலை 10 மணிக்குத் தொடங்கிய இந்தக் கூட்டத்தில் பனையூரில் உள்ள கட்சி தலைமையகத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் பல்வேறு அணித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்தக் கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்தவர் விஜய்.. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான தி கோட் படம் ஹிட் அடித்தது. இப்போது ஹெச் வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்துடன் சினிமாவுக்கு குட்பை சொல்லிவிட்டு விஜய் முழு நேர அரசியலில் குதிக்கப் போகிறார். இதற்காகத் தான் அவர் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கினார்.
தவெக ஆலோசனைக் கூட்டம்:
கடந்த அக்டோபர் 27ம் தேதி தவெக மாநாடு கூட மிகப் பிரம்மாண்டமாக விழுப்புரம் விக்கிரவாண்டியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முழுக்க இருந்த பல லட்சம் தொண்டர்கள் பங்கேற்றனர். அந்த மாநாட்டில் அவர் நேரடியாகப் பல அரசியல் கருத்துகளைத் தெரிவித்திருந்தர். பாஜக மற்றும் திமுகவை கடுமையாக விமர்சித்துப் பேசினார். அதன் பிறகு அம்பேத்கர் புத்தக விழாவில் மட்டுமே அவர் கலந்து கொண்டார்.
பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவில்லை என்றாலும் கூட தொடர்ந்து ஆலோசனைக் கூட்டங்களை அவர் நடத்தியே வருகிறார். பொறுப்பாளர்களுடன் தொடர்ச்சியாக ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. அடுத்த கட்ட நடவடிக்கையாக மாநிலம் முழுக்க மாவட்டச் செயலாளர்களை நியமிக்க விஜய் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இதற்காக அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கடந்த 3 மாதங்களாக மாவட்ட வாரியாக சென்று ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வந்தார்.
கடைசி நேரத்தில் ட்விஸ்ட்:
அதன்படி 2 அல்லது 3 தொகுதிகளுக்கு ஒரு மாசெ விகிதம் மொத்தம் 100- 105 மாவட்டச் செயலாளர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்தச் சூழலில் தான் இன்று பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.. விஜய் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறும் எனக் கூறப்பட்டது. இருப்பினும், கடைசி நேரத்தில் சில காரணங்களால் இந்தக் கூட்டத்தில் விஜய் பங்கேற்கவில்லை.
மேஜர் முடிவு:
மாவட்டச் செயலாளர்கள் நியமனம், கழகத்தின் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் தேர்வு குறித்தும் ஆலோசனை நடைபெறலாம் என்று சொல்லப்படுகிறது. மேலும், விஜய் மக்கள் மன்றத்தில் நீண்ட காலமாக இருப்போருக்கும் மாற்றுக் கட்சியில் இருந்து வருவோருக்கும் உரசல் ஏற்படும் நிலையில், அது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த கூட்டம் பனையூரில் உள்ள கட்சி தலைமையகத்தில் நடைபெறும் நிலையில், இதில் ஆலோசிக்கப்பட்ட விஷயங்கள், எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக விஜய்க்கு தகவல் தெரிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
-
115 ஆக உயரும் திமுக மா.செ-க்கள் எண்ணிக்கை.. கட்சிக்குள் ‘இளம் ரத்தம்’ பாய்ச்ச ஸ்டாலின் விதித்த கெடு! -
“கூட்டணி கட்சிகள் இல்லைனா திமுக 10 தொகுதிகளில் கூட வெற்றி பெற்றிருக்காது”.. ஆதவ் அர்ஜுனா தாக்கு! -
ராஜினாமா செய்து தவெகவில் சேர்ந்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சிக்கல்.. நோட்டீஸ் அனுப்பியது ஏன்? சபாநாயகர் விளக்கம் -
தவெக ஆட்சி அருமையாக இருக்கு.. குற்றங்கள் எல்லா ஆட்சியிலும் நடக்கிறது! விஜய்க்கு ஆதரவாக பேசிய வைகோ -
கமலாலயம் டூ பனையூர்.. பாஜகவுக்கு அடுத்த அடி! தவெகவில் ஐக்கியமான முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி -
”ஆபரேசன் கமலாலயம்” அண்ணாமலையால் ஆட்டம் காணும் பாஜக! பேராசிரியருக்கு பெரிய லக்! அமித் ஷாவின் ப்ளான்? -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
அடுத்த 20 ஆண்டுகளுக்கு விஜய் தான் முதல்வர்.. தமிழ்நாட்டில் தவெக ஆட்சி மட்டும்தான்.. அமைச்சர் ஆனந்த்! -
அரசியல் சதுரங்கத்தில் சறுக்கிய விஜயதாரணி! ‘அமைச்சர்’ வாய்ப்பை கோட்டை விட்டாரா விளவங்கோடு சிங்கப்பெண் -
"ஜோசியக்காரர் சொன்னாரே" விஜயின் கயிறும் ராகுலின் கேக்கும்! விடியல் பயணம் மட்டும் இல்லேனா? லியோனி நச் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங்












Click it and Unblock the Notifications