விஜய் ஜெயிக்க காரணமான 'வாக்குகள்'.. பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் வெளியிட்ட புள்ளி விவரம்
சென்னை: 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த திமுக, ஏற்கனவே 10 வருடம் தொடர்ந்து ஆட்சியில் இருந்த அதிமுகவிற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்குமே அதிர்ச்சியை தந்துள்ளது. சுமார் 59 ஆண்டுகளுக்கு பிறகு திராவிட கட்சிகள் இல்லாத ஆட்சி அமைகிறது. இந்த மிகப்பெரிய மாற்றத்திற்கு இளைஞர்களின் வாக்குகளே மிக முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. தமிழகத்தின் மொத்த வாக்காளர்களில் 40% பேர் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவார். இவர்களின் பெரும் ஆதரவைப் பெற்று தமிழக வெற்றிக் கழகம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் த.வெ.க. 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து ஆளும் கட்சி மற்றும் ஆண்ட கட்சிகளின் கனவை காலி செய்திருக்கிறது. இதில் ஆளும் கட்சியான தி.மு.க. கூட்டணி 74 இடங்களை பெற்றது. அ.தி.மு.க. கூட்டணி 53 இடங்களை பெற்றது. தமிழகத்தில் 1967-ம் ஆண்டுக்கு பின் 59 ஆண்டுகளாக தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் மாறி, மாறி ஆட்சி செய்தார்கள். அவர்கள் இருவரும் வேறு யாருக்கும் வாய்ப்பு தராமல் இருந்தார்கள்.

ஆனால் முதல் முறையாக திராவிட கட்சிகளுக்கு மாற்றாக, போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே த.வெ.க. வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து இருக்கிறது. தி.மு.க. தனித்து 60 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்த்தை பெற்று உள்ளது. ஆனால் முதல்வர் மு.க.ஸ்டாலின் தோல்வி அடைந்து விட்டார். எனினும் துரைமுருகன், மா.சுப்பிரமணியன், மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன், தா.மோ.அன்பரசன், நாசர் உள்ளிட்ட பல அமைச்சர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.
அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தையும் எடப்பாடி பழனிசாமி இழந்துள்ளார். அவர் கட்சியும் எதிர்க்கட்சியாக முடியாது.திமுகவே எதிர்க்கட்சியாக இருக்க போகிறது. இதற்கு காரணம் 18 முதல் 40 வயதிற்கு உள்பட்டவர்கள் போட்ட ஓட்டு தான் காரணம்.. இவர்களில் பெரும்பாலானவர்கள் அப்படியே விஜய்யின் தவெகவிற்கு வாக்களித்துள்ளனர்.
பிரபல பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, தமிழக வெற்றிக் கழகம் 35 1.7 கோடி வாக்குகளை பிடித்துள்ளது. அடுத்ததாக திராவிட முன்னேற்றக் கழகம் 1.1 கோடி வாக்குகளை திமுக பெற்றுள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 1 கோடி வாக்குகளை பெற்றுள்ளது. நாம் தமிழர் கட்சி 19 லட்சம் வாக்குகளை பெற்றுள்ளது. இந்திய தேசிய காங்கிரஸ் 16 லட்சம் வாக்குகளை பெற்றுள்ளது. பாரதிய ஜனதா கட்சி வாக்குகளுடன் 14 லட்சம் வாக்குகள் பெற்றுள்ளது. தேமுதிக 5.8 லட்சம் வாக்குகளை பெற்றுள்ளது.
சதவீத அடிப்படையில் பார்த்தால், திராவிடக் கட்சிகளின் பலமான வாக்கு வங்கியைத் தகர்த்து, 1.7 கோடி வாக்குகளுடன் தவெக 35 சதவீதத்தைப் பெற்றுள்ளது. இது மற்ற அனைத்துக் கட்சிகளையும் விட மிக அதிகம் ஆகும். தமிழகத்தின் 40% வாக்காளர்கள் 40 வயதுக்குக் கீழ் இருப்பதே இந்தத் தேர்தலின் முடிவைத் தீர்மானித்திருக்கிறது. மாற்றத்தை விரும்பிய இளைஞர்களின் முதல் தேர்வாக விஜய் தலைமையிலான தவெக உருவெடுத்துள்ளது.
ஆளுங்கட்சியான திமுக 24 சதவீத வாக்குகளையும், எதிர்க்கட்சியான அதிமுக 21 சதவீத வாக்குகளையும் மட்டுமே பெற்றுள்ளன. இதனை பார்க்கும் போது, இக்கட்சிகளின் பாரம்பரிய வாக்கு வங்கியில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளதை இந்தப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
இதர கட்சிகளின் நிலையை பார்த்தால் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி 4% இருப்பைத் தக்கவைத்துள்ளது. தேசியக் கட்சிகளான காங்கிரஸும் (3%), பாஜகவும் (3%) ஏறத்தாழ சமமான வாக்குகளையே பெற்றுள்ளன. தமிழக அரசியலில் அரை நூற்றாண்டிற்கும் மேலாக நீடித்து வந்த இருமுனைப் போட்டி, தற்போது இளைஞர்களின் எழுச்சியால் புதிய பாதையை நோக்கித் திரும்பி இருக்கிறது. 1.7 கோடி வாக்காளர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ள விஜய், தமிழகத்தின் புதிய அரசியல் சக்தியாகத் தடம் பதித்து இருக்கிறார்.














Click it and Unblock the Notifications