முண்டியடித்த ரசிகர்களால்.. தடுமாறி கீழே விழுந்த விஜய்.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மலேசியாவில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த நடிகரும், தவெக தலைவருமான விஜய்க்கு வரவேற்பு அளிக்க ரசிகர்கள், தவெக தொண்டர்கள் முண்டியடித்தனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், விஜய் சற்று தடுமாறி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக விஜய்யை சுற்றி இருந்த காவலர்கள் அவரை மீட்டு, காரில் பத்திரமாக அனுப்பி வைத்தனர். உடனடியாக விஜய் காரில் ஏறி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றாலும் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Stir at Chennai Airport After Vijay Loses Balance Amid Overenthusiastic TVK Workers

தவெக தலைவரும், நடிகருமான விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நேற்று நடைபெற்றது. விஜய் அரசியல் பிரவேசம் கண்டுள்ள நிலையில் இதுவே விஜய்யின் கடைசி திரைப்படம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் நடந்த இந்த இசை வெளியீட்டு விழா முடிந்ததைத் தொடர்ந்து இன்று மலேசியாவில் இருந்து தனி விமானம் மூலமாக விஜய் சென்னை வந்தடைந்தார்.

சென்னை விமான நிலையத்தில் விஜய்யை ஏராளமான தவெக தொண்டர்களும், விஜய் ரசிகர்களும் குவிந்து உற்சாகமாக வரவேற்றனர். இதனால், விமான நிலையத்தின் வாசலில் கூட்டம் முண்டியடித்தது. கூட்டத்தின் நடுவே ரசிகர்களுக்கும், தொண்டர்களுக்கும் கை காட்டிக் கொண்டே வந்தார் விஜய்.

அப்போது கூடத்தில் திடீரென தள்ளூமுள்ளு ஏற்பட்டது. விஜய்யை அருகே பார்க்க ரசிகர்கள் முண்டியடித்ததால் விஜய் நிலை தடுமாறி காரின் முன்பு கீழே விழுந்தார். பின்னர் சுதாரித்து எழுந்தார். விஜய்யின் பாதுகாவலர்கள் உடனடியாகச் செயல்பட்டு அவரை பாதுகாப்பாக காரில் ஏற்றினர்.

இந்தச் சம்பவத்தால் விஜய் ரசிகர்களும், தவெக தொண்டர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிகழ்வால் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+