மனசெல்லாம் குளிர கல் சட்டிகள்.. லைப்ஸ்டைலை மாத்துங்கப்பா.. வாழ்க்கை ஜில்லுன்னு இருக்கும்!
சென்னை: அவசரம் அவசரமாக சமைத்து அவதி அவதியாக சாப்பிட்டு ஓடிக் கொண்டிருக்கும் மக்களாகிப் போய் விட்டோம் நாம்.. என்ன செய்வது நம்மோட வாழ்க்கை முறை அப்படியாகி விட்டது.
Recommended Video
ஆனாலும் அதில் லேசா மாற்றம் செய்யலாம்.. அதைப் பற்றிய செய்திதான் இது. எதை வேண்டுமானாலும் எளிதாக மாற்றி விடலாம். ஆனால் வாழ்க்கை முறையை மட்டும் டக்குன்னு மொத்தமா மாத்திட முடியாது.
சின்னச் சின்னதாகத்தான் மாற முடியும். அந்த வகையில் இதை மாற்றத்திற்கான முதல் படிக்கல்லாக நினைத்துக் கொள்ளலாம். வாங்க படிக்கலாம்.

அப்பத்தாக்கள் ஸ்டைல்
மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்று சொல்வார்கள்.. அந்தக் காலத்து அப்பத்தாக்கள் சமைத்த ஸ்டைலே வேற.. பின்னால் வந்த பேத்தி மார்கள் டோட்டலாக மாறிப் போய் விட்டார்கள். இன்று அதே அப்பத்தாக்கள் காலத்து ஸ்டைலுக்கு நாம் மாற வேண்டிய சூழலும், கட்டாயமும் நம்மை வந்து நெருக்க ஆரம்பித்துள்ளது.

சுண்டி இழுத்த மீன் குழம்பு
முன்பெல்லாம் வீடுகளில் கல்லும் மண்ணும்தான் கோலோச்சிக் கொண்டிருக்கும். கல் சட்டிகள், மண் சட்டிகள்தான் அந்தக்காலத்து பாத்திரங்கள். மண் சட்டியில் வைக்கும் மீன் குழம்பு பத்து வீட்டை சுண்டி இழுக்கும் என்பார்கள்.. அப்படிப்பட்ட வாசனையான சமையலை இன்றெல்லாம் எதிர்பார்க்கவே முடியாது. பக்கத்து வீட்டுக்கு கூட வாசனை தெரியாத அளவுக்குத்தான் நம்முடைய சமையல் சுருங்கிப் போய் விட்டது, சுணங்கிக் கிடக்கிறது.

உடம்புக்கு நல்லது
ஆனால் இப்போது மீண்டும் பலரது வீடுகளை கல் சட்டிகளும், மண் சட்டிகளும் அலங்கரிக்கத் தொடங்கியுள்ளன. இந்த மண் சட்டிகளுக்கும், கல் சட்டிகளுக்கும் நிறைய மகத்துவம் உண்டு. கல் சட்டிகளில் வைக்கும் எந்தப் பொருளும் அவ்வளவு சீக்கிரம் கெட்டுப் போகாது, சூடும் சீக்கிரம் குறையாது. மண் சட்டியில் சமைக்கும்போது வாசனை அதிகமாக இருக்கும். உடம்புக்கும் ஆரோக்கியம்.

ஜில் ஜில் மண்பானை
மண்பானையில் தண்ணீரை ஊற்றி வைத்து அதைக் குடித்தால் ஃபிரிஜ் கூல்னஸ் எல்லாம் ஜுஜுபின்னு சொல்வீங்க. அப்படி ஒரு ஜில் ஜில்லாக இருக்கும். வெயில் காலங்களில் மட்டும்தான் மண்பாண்டங்கள் சமீப காலமாக பிரபலமாக ஆரம்பித்தது. ஆனால் இன்று பலர் வீட்டு கிச்சன்களை மண் சட்டிகளும், கல் சட்டிகளும் அலங்கரிக்க ஆரம்பித்துள்ளன.

அவசரம் கூடாது
கல் சட்டியில் உள்ள ஒரே ஒரு குறை என்னவென்றால் சூடாக ரொம்ப நேரம் பிடிக்கும். நிதானமான சமையலுக்குத்தான் கல் சட்டிகள் பொருத்தமாக இருக்கும். அவதி அவதியாக இதில் சமைக்க முடியாது. பொறுமையாக சமைத்து சாப்பிட கல் சட்டிகள் பொருத்தமானவை. இல்லை எனக்கு வேகமாக சமைக்க வேண்டும் என்றால் நீங்க பழைய குக்கரை கையில் எடுத்து.. அடுப்பில் வைத்து .. சோறு பொங்கிக் கொள்வது சாலச் சிறந்தது!

வாங்கி மகிழுங்கள்
இந்த கல் சட்டிகளின் மகத்துவம் குறித்து நம்மளோட நீண்ட நாள் வாசகர், எழுத்தாளர் சுசரிதா வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளார். அதை இங்கு நாம் பகிர்ந்து பெருமைப்படுகிறோம்.. நீங்களும் பார்த்து மகிழுங்கள்.. கல் சட்டிகள், மண் பாண்டங்களை வாங்கி பயன்படுத்துங்கள். சாலையோரங்களில்தான் நிறையப் பேர் இதை தற்போது விற்பனை செய்கிறார்கள். அவர்களிடம் சென்று வாங்குவதன் மூலம் அந்த ஏழைத் தொழிலாளர்களின் பொருளாதாரம் சற்று மேம்படும். அவர்களுக்கு நல்லது செய்தது போலிருக்கும்..

நிதானமா சமைச்சு நிதானமா சாப்பிடுங்க
நம்ம தாத்தா பாட்டிகளோட அறிவோ அறிவுங்க.. பாருங்களேன்.. நிதானமா சமைச்சு, நிதானமா பொறுமையா சாப்பிட்டு நல்லா ஆரோக்கியமாக வாழுங்கடான்னு சொல்லாம சொல்லிட்டுப் போயிருக்காங்க இந்த கல் சட்டிகள், மண் பாண்டங்கள் மூலமா.. நாமதான் அதைப் புரிஞ்சுக்காம "யோ யோ" வாழ்க்கை வாழ்ந்திட்டிருக்கோம். கொஞ்சம் மாறிப் பாருங்களேன்.. வாழ்க்கை கொஞ்சம் மாறும்.. மனசும் கொஞ்சம் நல்லாருக்கும்.. அதை விட முக்கியமாக உடம்புக்கும் சிறிது ஆரோக்கியம் கூடும்.. நமக்கான வாழ்க்கையோடு, எக்ஸ்ட்ராவா 2 வருஷம் வாழ்ந்தால் கூட லாபம் தானே மக்களே.. !
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications