சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புயல்ங்க.. வங்க கடலில் உருவான சின்னம்.. சூறாவளியால் கடல் சீற்றம்.. பாம்பனில் புயல் கூண்டு ஏற்றம்

பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, அடுத்த சில நாட்களில் தாழ்வு மண்டலமாக மாறி புயலாக உருவாக வாய்ப்புள்ள நிலையில், ராமேஸ்வரம் அருகே பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது... அத்துடன் நாளை முதல் 4 நாட்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்பு என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அந்தவகையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசராத எடப்பாடி.. சளைக்காத ஓபிஎஸ்.. அதிமுக பொதுக்குழு வழக்கு ஹைகோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைஅசராத எடப்பாடி.. சளைக்காத ஓபிஎஸ்.. அதிமுக பொதுக்குழு வழக்கு ஹைகோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணை

செந்தாமரை கண்ணன்

செந்தாமரை கண்ணன்

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா. செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் உள்ளதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதை ஒட்டிய மாவட்டங்கள், வட தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்றைய தினம் (ஆகஸ்ட் 10) இடியுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

காரைக்கால்

காரைக்கால்

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் ஆகஸ்ட் 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் நேற்று (ஆக.9) காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் மேல் பவானியில்22 செ.மீ., அவலாஞ்சியில் 19 செ.மீ., கூடலூர் பஜாரில் 17 செ.மீ., கோயம்புத்தூர் மாவட்டம் சோலையாறில் 12 செ.மீ., சின்னக்கல்லாரில் 11 செ.மீ., வால்பாறையில் 10 செ.மீ.மழை பதிவாகியுள்ளது" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் புயல்

வங்கக்கடலில் புயல்

இதனிடையே, வங்கக்கடலில் புயல் உருவாகி உள்ளது.. வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, அடுத்த சில நாட்களில் தாழ்வு மண்டலமாக மாறி புயலாக உருவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்த புயல் சின்னம் ஆந்திரா வடக்கு கடலோர பகுதியிலும், ஒடிசா புவனேஸ்வர் துறைமுகத்தில் இருந்து வடமேற்கில் 100 கி.மீயில் மையம் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.. வங்கக்கடலில் உருவான புயல் காரணமாக, தமிழக கடலோர மாவட்டத்தில் சூறாவளி காற்று வீசி கடலில் கொந்தளிப்பு ஏற்படும் என்று ஏற்கனவே வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சீற்றம் - புயல்கூண்டு

சீற்றம் - புயல்கூண்டு

இதையடுத்து, பாம்பன் துறைமுக அலுவலகத்தில் தொலைதூர புயல் எச்சரிக்கையாக 1ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.. இதனால் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க மீன்துறையினர் தடை விதிக்கப்பட்டுள்ளது.. 7-வது நாளாக விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படகுகள் கரையோரத்தில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், ராமேஸ்வரம், பாம்பன், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசி வருவதுடன் கடல் சீற்றமாகவே காணப்படுகிறது.

புது அறிவிப்பு

புது அறிவிப்பு

இதனிடையே, தமிழகத்தில் நாளை முதல் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளது. நாளை ஆகஸ்ட் 11 முதல் 14ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும். தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, நெல்லை, குமரி, மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது...

பலத்த காற்று வீசும்

பலத்த காற்று வீசும்

குறிப்பாக, இன்று ஆந்திர கடலோரப் பகுதி, மத்திய மேற்கு வங்கக்கடலில் பலத்த சூறாவளி வீச வாய்ப்பு உள்ளது என்றும், குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென் தமிழக கரையோரம், தென் மேற்கு வங்கக்கடலில் பலத்த காற்று வீசும் என்றும், லட்சத்தீவு, வட கேரளா, கர்நாடகா கடல் பகுதி, தென் கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக்கடலில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

English summary
storm warning cage hoisted at pampan port office due to storm symbol and heavy rain chance in tamilnadu பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X