காலை உணவாக 10 கிலோ காய்ந்த மிளகாய்.. மிளகாய் தூள் டீ, மிளகாய் பவுடர் குளியல்! யாரிந்த விசித்திர நபர்
சென்னை: எத்தனையோ விதமான தொழில்நுட்பங்கள் பெருகிய போதிலும், ஒவ்வொரு அறிவியல் கண்டுபிடிப்புகளும், தொழில் நுட்பங்களும் மேலும் பெருகி உலக மக்களை நாளுக்கு நாள் வியப்பில் ஆழ்த்தி வருகின்றன... அதேபோல நம்முடைய உலகில் எங்காவது ஒரு அதிசயமும், ஆச்சரியமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.. குறிப்பாக, அறிவியலுக்கு அப்பாற்பட்ட விஷயங்களும் இதில் அடக்கமாகும். சிலசமயம் இவையெல்லாம் உண்மைதானா? என்றுகூட மனிதகுலத்துக்கு சந்தேகம் வந்துவிடுகிறது.. அந்தவகையில், இப்போதும் ஒரு சந்தேகம் எழுந்துள்ளது..
மேகாலயாவை சேர்ந்த நபரின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. இந்த நபர், மேகாலயா மாநிலத்தின் அடர்ந்த காடுகளிலும், மலைப்பகுதியிலும் வசிப்பவராம்.

விசித்திர மனிதனின் விநோத பழக்கம்
அதாவது, கிழக்கு ஜெயின்டியா ஹில்ஸ் மாவட்டத்தில் படாவ் என்ற கிராமத்தை சேர்ந்த இந்த நபரின்பெயர் ராம் பிர்து.. வனப்பகுதியிலேயே வாழ்வதால், விவசாயத்தையே பிரதான தொழிலாக கொண்டிருக்கிறார்.
இவருக்கு காலை உணவு, வெறும் 10 கிலோ காய்ந்த மிளகாய்தானாம். இது வெறும் பேச்சில்லை.. ராம் நிஜமாகவே காய்ந்த மிளகாயை ஆர்வத்துடன் சாப்பிடும் வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாகியுள்ளது...
மிளகாயை எடுத்து வாயில் வைத்து கடித்ததுமே, அவரது கண்ணில் இருந்து தாரை தாரையாக தண்ணீர் கொட்டும் என்றுதானே நினைக்கிறீர்கள்.. அதுதான் இல்லை..அவர் முகத்தில் எந்த ரியாக்ஷனும் இல்லை.. குறைந்தபட்சம் கண்கள் கூட கலங்கவில்லை.. ருசி மிகுதியில் கடித்து மென்று சாப்பிடுகிறார்.. ஒரே நேரத்தில் 10 கிலோ காரமான காய்ந்த மிளகாயை சாப்பிடுபவராம்..
மிளகாய் சோப்பு, மிளகாய் டீ
இவருக்கு சாப்பிடுவதற்கு மட்டும் மிளகாய் பயன்படவில்லை.. அவர் முகம் முழுவதும் மிளகாயை அரைத்து விழுதாக பூசியிருக்கிறார். இவர் குளிப்பதுகூட இந்த மிளகாயில்தான்.. அதாவது மிளகாய் சோப்பு உடலுக்கு தேய்த்து பயன்படுத்துகிறாராம்.
காலையில் இவருக்கு மிளகாய் டீ தந்தால்தான் படுக்கையிலிருந்து எழுந்து கொள்வாராம்..மதியம் மிளகாய்-மட்டன் கறி சாப்பிடுவார், மாலையில் பச்சை மிளகாய்தான் ஸ்நாக்ஸ் ஆகும்..
இந்த வீடியோவை பார்த்ததுமே பலருக்கும் தூக்கி வாரிப்போட்டுள்ளது.. இப்படி ஒருவர் நிஜமாகவே இருக்க முடியுமா? மிளகாயை சாப்பிடும் வீடியோ உண்மைதானா? என்பது தெளிவாக தெரியவில்லை.
மிளகாய் பொடியில் குளியல்
ஆனால், இந்த மிளகாயை சாப்பிடும் வீடியோவை கடந்த 2021ல் ராம் பிர்து எடுத்துள்ளார்.. அதுதான் தற்போது வைரலாகி வருகிறது.
இந்த செய்தி பரவியதுமே, சிலர் ராம் பிர்துவை பரிசோதிக்க விரும்பினார்கள்.. இதற்காக ஒரு நிகழ்ச்சியின்போது, மிளகாய் பொடியில் அவரை குளிக்குமாறு சொன்னார்கள்.. உடனே மிளகாய் பொடியில் கூலாக குளித்து முடித்தார் ராம் பிர்து.. இவர் உண்மையிலேயே காய்ந்த மிளகாயை காலை டிபனாக சாப்பிடக்கூடியவர் என்று படாவ் கிராம மக்களும் சொல்கிறார்கள்.
ஒரு பாதிப்பும் இல்லை
இது குறித்து ராம் பிர்து சொல்லும்போது, "மிளகாய்தான் எனக்கு எல்லாமே,.. மிளகாயை சாப்பிட்டால் எனக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை" என்று கேஷூவலாக சொல்கிறார்.ராம் பிர்து காய்ந்த மிளகாயை கிலோ கணக்கில் ரசித்து ருசித்து சாப்பிடும் வீடியோதான் இணையத்தில் வைரலாகி, அதை ஆயிரக்கணக்கில் இணையவாசிகள் ஷேர் செய்து வருகிறார்கள்..
நம்மளால 2 மிளகாய்கூட கடிக்க முடியாது, இவர் மட்டும் எப்படி அசால்ட்டாக சாப்பிடுகிறார் என்று இணையவாசிகள் ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications