அம்பை இடைத்தேர்தல்.. விஜய்க்கு எதிராக சீமான்? நேரம் எடுத்து கொள்ளும் ஸ்டாலின், எடப்பாடி.. பின்னணி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அம்பாசமுத்திரம் தொகுதியில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை பொது வேட்பாளராக நிறுத்துவது குறித்து திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் உடனடியாக எந்த பதிலையும் அளிக்கவில்லை. அதேபோல் சீமானை ஆதரிக்க மாட்டோம் என்றும் பதில் அளிக்கவில்லை. இதுதொடர்பாக விரிவாக பார்க்கலாம்.

அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் களமிறங்குகிறார். சட்டசபைத் தேர்தலுக்கு முன் சீமானின் குரல் சட்டசபையில் ஒலிக்க வேண்டும் என்று பரவலாக மக்கள் மத்தியில் பேசப்பட்டது. ஆனால் காரைக்குடி தொகுதியில் சீமான் டெபாசிட் இழந்து தோல்வி அடைந்தார். தற்போது மீண்டும் அம்பாசமுத்திரம் தொகுதியில் களமிறங்குகிறார்.

Seeman DMK AIADMK By Election

இதனால் சீமானை பொது வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன. இதனிடையே தேவர் ஜெயந்தி விழாவுக்கு வந்த பசும்பொன் வந்த ஸ்டாலினிடம், சீமானை பொது வேட்பாளராக ஏற்று திமுக ஆதரிக்குமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஸ்டாலின், இடைத்தேர்தல் தேதி அறிவிக்கட்டும்.. பின்னர் சொல்வோம் என்று பதில் அளித்தார்.

அதேபோல் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின், கட்சிகளின் நிலைப்பாடு குறித்து முறையாக அறிவிப்போம் என்று பதில் அளித்தார். இதுகுறித்து சீமான், இடைத்தேர்தல் ஆதரவை கூட்டணியாக பார்க்க கூடாது. இந்த விவகாரம் தொடர்பாக திமுக, அதிமுக என்று யாரும் முடிவு எடுக்கவில்லை. ஆனால் திமுக, அதிமுக ஆதரவு தந்தால் ஏற்பேன் என்று பதில் அளித்தார்.

இதனால் அம்பாசமுத்திரம் இடைத்தேர்தல் விவகாரம் தமிழக அரசியலை சுவாரஸ்யமாக்கி இருக்கிறது. இதுதொடர்பாக அரசியல் விமர்சகர் விஎம் சுனில்குமார் பேசுகையில், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் சீமானை பொது வேட்பாளராக ஏற்று கொள்ளலாம். இரு திராவிட கட்சிகளும் அவ்வளவு எளிதாக சீமானுக்காக களத்தை விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.

ஸ்டாலினின் பதிலை இடைத்தேர்தலுக்கான வியூகமாக பார்க்கலாம். மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளில் திமுக 2வது இடம் பிடித்து தாங்கள் இன்னும் களத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கிறோம் என்பதை நிரூபித்து காட்டியுள்ளது. அந்த இடத்தை வேறு கட்சிக்கு எவ்வளவு எளிதாக திமுக விட்டுக் கொடுக்காது.

அதேபோல் அதிமுக சீமானை ஏற்க வாய்ப்புகள் குறைவு தான். ஏனென்றால் அம்பை தொகுதியில் அதிமுக வென்றுள்ளது. மீண்டும் தனித்து களமிறங்கவே நினைக்கும். ஏற்கனவே தென் மாவட்டங்களில் அதிமுகவின் கட்டமைப்பு வலுவிழந்து வருகிறது. இந்த இடைத்தேர்தலில் மீண்டும் கணிசமான வாக்குகளை கைப்பற்றினால், களத்தில் இன்னும் இருக்கிறோம் என்பதை அதிமுக நிரூபிக்க முடியும்.

முக்குலத்தோர் சமூக வாக்குகளை கைப்பற்ற அமமுக வேட்பாளரை கூட அங்கு களமிறக்கக் கூடும். அம்பை தொகுதியில் நாடார் சமூக வாக்குகள் 8% வரை உள்ளது. சீமான் அங்கு போட்டியிட இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் பதில்கள் சீமானுக்கு பேச்சுவார்த்தை நடத்துவதற்கான கதவுகளை திறந்துவிட்டுள்ளது.

ஆனால் தவெகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளுக்கு மத்தியில் ஒரு ஒருங்கிணைந்த உடன்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு தான். அதற்கான சாத்தியமோ, சூழலோ இப்போது இல்லை. ஒருவேளை அப்படியொரு கூட்டணி தேவை என்றாலும் கூட, அது 2031 சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக அமையுமே தவிர, அம்பை இடைத்தேர்தலில் உருவாக வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+