Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2கே கிட் காலத்திலும் தொடரும் ஸ்ட்ரீக்! 10ம் வகுப்பு தேர்வில்.. மாணவர்களை விட மாணவிகள் அதிக தேர்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் வெளியாகி உள்ள 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் மாணவர்களை விட மாணவியர் 6.50% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இணைய தளங்களில் வெளியானது. தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை இணையதளங்களில் மாணவர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள முடியும்.

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த ஏப்ரல் 6-ம் தேதி தொடங்கியது. இரண்டு வாரம் நடந்த தேர்வுகள் ஏப்ரல் 20ம் தேதி முடிவு பெற்றது. மொத்தம் இந்த தேர்வை 9, 38, 291 மாணவ, மாணவியர் எழுதினர்.

Streak continues, More girl students passed out than boys in Tamil Nadu 10th result

10 வகுப்பு தேர்ச்சி விவரங்கள்: தேர்வெழுதிய மொத்த மாணாக்கர்களின் எண்ணிக்கை: 9,14,320

  • மாணவியர்களின் எண்ணிக்கை :4,55,017
  • மாணவர்களின் எண்ணிக்கை :4,59,303
  • தேர்ச்சி பெற்றவர்கள்:8,35,614 (91.39%)
  • மாணவியர் 4,30,710 (94.66%) தேர்ச்சி அடைந்துள்ளனர்.
  • மாணவர்கள் 4,04,904 (88.16%) தேர்ச்சி அடைந்துள்ளனர்.
  • கடந்த மே-2022-ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்வில் தேர்வெழுதிய மாணாக்கர்கள் 9,12,620. தேர்ச்சி பெற்றோர் 8,21,994. தேர்ச்சி சதவிகிதம் 90.07% ஆகும்.
  • அரசு பள்ளிகள் - 87.45% தேர்ச்சி சதவிகிதம் ஆகும்.
  • அரசு உதவிப்பெறும் பள்ளிகள் - 92.24% தேர்ச்சி சதவிகிதம் ஆகும்.
  • 1,026 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சியை பதிவு செய்துள்ளன.
  • மாற்றுத்திறனாளிகள் - 89.77% தேர்ச்சி பெற்றுள்ளனர்.
  • சிறைவாசிகள் - 42.42% தேர்ச்சி பெற்றுள்ளனர்.
  • பத்தாம் வகுப்பு ரிசல்ட் பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.
  • பத்தாம் வகுப்பு ரிசல்ட் சிவகங்கை மாவட்டம் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.
  • பத்தாம் வகுப்பு ரிசல்ட் விருதுநகர் மாவட்டம் மூன்றாம் இடம் பிடித்துள்ளது.

http://tnresults.nic.in , http://dge.tn.nic.in ஆகிய இணையதளத்தில் மதிப்பெண் விபரங்களை தெரிந்துகொள்ளலாம். அதேபோல் மாணவர்கள் பதிவு செய்துள்ள அவர்களின் பெற்றோர்களின் போன் எண்ணுக்கும் ரிசல்ட் எஸ்எம்எஸ் மூலம் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசுத் தேர்வுத்துறையின் இணையதளத்தில் மாணவர்கள் ரிசல்ட்டை தெரிந்து கொள்ள முடியும். அவர்கள் தங்களின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி போன்ற விவரங்களை கொடுத்து, தேர்வு முடிவை தெரிந்து கொள்ள வேண்டும்.

Streak continues, More girl students passed out than boys in Tamil Nadu 10th result

12ம் வகுப்பு முடிவுகள் : சமீபத்தில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. பிளஸ் 2 பொதுத்தேர்வில் 92.67 சதவிகிதம் பேர் தேர்ச்சியடைந்தனர். 12ம் வகுப்பு பொதுத்தேர்விலும் எல்லா வருடம் போல இந்த வருடமும் மாணவர்களை விட மாணவிகள் இந்த ஆண்டும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பிளஸ் 2 பொதுத்தேர்வில் 94.03 சதவிகிதம் மாணவ - மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மொத்தம் தேர்வு எழுதியவர்களில் மாணவிகள் 96.38 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

மாணவர்கள் 91.45 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழ்நாட்டில் 326 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 100% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மொத்த தேர்ச்சியில் 97.85% பெற்று விருதுநகர் முதலிடம் பிடித்து உள்ளது.

அரசு பள்ளிகள் தேர்ச்சியில் 96.45% பெற்று திருப்பூர் முதலிடம் பிடித்து உள்ளது.

12ம் வகுப்பு தேர்வில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் 89.20% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த தேர்வு முடிவுகளை மாணவர்களின் செல்போன் எண்களுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த மே-2022 பொதுத்தேர்வில் ஏதேனும் ஒரு பாடத்தில் 100
மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை : 23,957.
இந்தாண்டு மார்ச் / ஏப்ரல் 2023 பொதுத்தேர்வில் ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை. 32,501.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+