மகளை பக்கோடா விற்று படிக்க வைத்த அப்பா.. UPSC தேர்வில் சாதித்த IAS ஆபீசர்.. ராஜஸ்தானில் சிறப்பு
சென்னை: குடும்ப பின்னணி எவ்வளவு மோசமாக இருந்தாலும், கை தூக்கிவிட ஒருவரும் இல்லையென்றாலும், விடாமுயற்சியும், கடின உழைப்பும், லட்சியத்தில் உறுதியும் இருந்தால், எப்பேர்ப்பட்ட உயரத்தையும் அடையலாம் என்பதற்கு தீபேஷ் குமாரி ஒரு உதாரணமாக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.. வாழ்க்கையில் சாதிக்க துடிக்கும் ஆயிரக்கணக்கான இளைய சமுதாயத்தினருக்கு, ஒரு ரோல் மாடலாகவும் திகழ்ந்து கொண்டிரக்கிறார் தீபேஷ் குமாரி.. இந்தியாவே வியந்து பேசும் பெண் யாரிவர்?
ராஜஸ்தானின் பரத்பூரை சேர்ந்தவர் தீபேஷ் குமாரி.. இவர் UPSC தேர்வில் 93வது இடத்தை பிடித்து ஐஏஎஸ் அதிகாரியாகியிருக்கிறார்.. இந்த இடத்தை பிடிக்க தீபேஷ் குமாரி பட்ட பாடு எளிதில்லை.. போராட்டமே வாழ்க்கையாகிவிட்ட தன்னுடைய வறுமையான குடும்ப சூழலுக்கு மத்தியில் படித்து முன்னேறியிருக்கிறார் தீபேஷ் குமாரி.

தள்ளுவண்டி பக்கோடா
தீபேஷ் குமாரியின் குடும்பத்துக்கென்று எந்த பின்னணி வரலாறும் கிடையாது.. ராஜஸ்தானின் பரத்பூரை சேர்ந்த தீபேஷ்குமாரியின் அப்பா பெயர் கோவிந்த்.. இவர் தள்ளுவண்டியில் பக்கோடா விற்று வருகிறார்.. மனைவி உஷா, 3 மகன்கள் மற்றும் 2 மகள்கள் என 6 பேர் கொண்ட குடும்பத்தை சமாளிக்க முடியாமல் விழிபிதுங்கி தவித்து வந்தார் கோவிந்த்.. கடந்த 25 வருடங்களாகவே, இந்த தள்ளுவண்டி பக்கோடா விற்பனை மட்டுமே, ஒட்டுமொத்த குடும்பத்துக்கான ஒரே நிதி ஆதாரம்.
இந்த 5 பிள்ளைகளில் மூத்தவர்தான் தீபேஷ் குமாரி.. காலம் காலமாகவே வறுமையில் சிக்கிவரும் தன்னுடைய குடும்ப சூழ்நிலையை மாற்ற நினைத்தார் தீபேஷ் குமாரி.. இதற்கு கல்வி ஒன்றே சிறந்த ஆயுதம் என்பதையும் புரிந்து கொண்டு, படிப்பில் கவனம் செலுத்தினார்.
சிவில் சர்வீஸ் தேர்வு
10ம் வகுப்பில் 98 சதவீத மதிப்பெண்களும், 12ம் வகுப்பில் 89 சதவீத மதிப்பெண்களும் பெற்றார். ஜோத்பூரில் உள்ள எம்பிபி பொறியியல் கல்லூரியில் பி.டெக். பட்டமும், ஐஐடி பாம்பேயில் எம்.டெக். பட்டமும் பெற்று தனது மேற்படிப்பை முடித்தார். பின்னர் தீபேஷ் ஒரு வருடம் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார், எனினும், UPSC தேர்வை தொடர வேண்டும் என்ற தன்னுடைய நீண்டகால கனவுக்காக, தன்னுடைய வேலையையும் கைவிட்டு, சிவில் சர்வீஸுக்குத் தயாராகத் தொடங்கினார்.
கடந்த 2019லிருந்து UPSC தேர்வுக்கான தயாரிப்புகளில் இறங்கினார்.. தான் அதுவரை வேலையில் பணிபுரிந்து சேமித்து வைத்திருந்த பணத்தைப் பயன்படுத்தி, டெல்லியில் UPSC சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாரானார்.
உச்சக்கட்ட உயரம்
2020ல் திபேஷ் முதல் முறையாக UPSC தேர்வை எழுதியும், அவரால் வெற்றி பெற முடியவில்லை.. எனினும், மனம் தளராமல் பயிற்சியில் இறங்கினார்.. கடந்த 2021ல் UPSC-யில் அகில இந்திய அளவில் 93வது இடத்தைப் பிடித்தார் மற்றும் EWS பிரிவில் 4வது இடத்தை பிடித்தார்.. பிறகு ஜார்க்கண்ட் கேடரை பெற்று 2022-ல் அதே தொகுதியில் ஐஏஎஸ் அதிகாரியானார். இப்போது சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையில் உதவிச் செயலாளராகப் பணியாற்றி வருகிறார் தீபேஷ் குமாரி.
திபேஷ் குமாரியின் இந்த உயரம்தான், அவரது மொத்த குடும்பத்தின் உயரத்தையும் தூக்கி பிடித்திருக்கிறது.. கடந்த 2021ல் UPSC சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றதுமே, தன்னுடைய சகோதர சகோதரிகளின் வாழ்விலும் அக்கறையை செலுத்தினார்.. அவர்களுக்கு தானே ஒரு முன்மாதிரியாக மாறி, லட்சிய வாழ்க்கையைத் தொடர தூண்டுகோலாக இருந்தார்.
உழைப்பும், அர்ப்பணிப்பும்
அன்று தீபேஷ் எடுத்த ரிஸ்க்தான், அவரது குடும்பத்துக்கே முன்னுதாரணமாக பாதை போட்டு திகழ்கிறது.. ஆம், தீபேஷின் ஒரு சகோதரர், குவஹாத்தி எய்ம்ஸில் எம்பிபிஎஸ் படித்து வருகிறாராம்.. தீபேஷின் சகோதரி டெல்லியில் உள்ள சஃப்தர்ஜங் மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்து வருகிறாராம். இன்னொரு சகோதரர் சகோதரர் லத்தூரில் படித்து வருகிறார்.
தீபேஷ் எப்போதுமே தன்னுடைய அப்பாவை பற்றியே நெகிழ்ந்து சொல்வார்.. என் அப்பாவின் தியாகமும், உழைப்பும்தான் எனக்கு உத்வேகத்தை தந்தது.. நான் சோர்வாக இருக்கும்போதெல்லாம் என்னுடைய அப்பாவின் போராட்டங்களை நினைத்து பார்ப்பேன்.. உடனே எனக்குள் ஒரு புதிய சக்தி கிடைத்துவிடும் என்று கண்கலங்கி சொல்கிறார் தீபேஷ்.
வலுவான மன உறுதியும், கடின உழைப்பும், போராட்ட குணமும் இருந்தால் எப்பேர்ப்பட்ட தடைகளையும் கடக்க முடியும் என்பதையே தீபேஷ் குமாரியின் மொத்த குடும்பமும் நிரூபித்துள்ளது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications