தமிழகத்தில் காங்கிரஸை வலுப்படுத்துவதுதான் ஒரே குறிக்கோள்.. புதிய தலைவர் கே.எஸ். அழகிரி உறுதி!
தமிழகத்தில் காங்கிரஸை வலுப்படுத்துவதுதான் ஒரே குறிக்கோள் என்று புதிய காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்து இருக்கிறார்.
சென்னை: தமிழகத்தில் காங்கிரஸை வலுப்படுத்துவதுதான் ஒரே குறிக்கோள் என்று புதிய காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்து இருக்கிறார்.
தமிழக காங்கிரஸ் தலைவராக முன்னாள் எம்.பி. கே.எஸ். அழகிரி நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். நேற்று இரவு இதற்கான அறிவிப்பு வெளியானது.

அதேபோல் தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவர்களும் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராக வசந்தகுமார் நியமனம் மயூரா ஜெயக்குமார், விஷ்ணுப பிரசாத், ஜெயக்குமார் ஆகியோரும் செயல் தலைவர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த திருநாவுக்கரசர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். லோக் சபா தேர்தலை முன்னிட்டு நடந்து இருக்கும் இந்த அதிரடி மாற்றம் காங்கிரஸ் கட்சிக்கு வலுசேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து காங்கிரசின் புதிய தலைவர் கே.எஸ். அழகிரி அளித்துள்ள பேட்டியில், என்னுடைய நோக்கம் எல்லாம் காங்கிரஸ் கட்சியினர் உயர்ந்த கொள்கைகளான மதசார்பற்ற கொள்கை, மதங்களுக்கும் சாதிகளுக்கும் அப்பாற்பட்ட கொள்கை ஆகியவற்றை நிலைநிறுத்த பாடுபடுவேன்.
ஏழை எளிய மக்களின் வளர்ச்சிக்கு உதவும் காங்கிரஸ் கட்சியின் சோஷலிச கொள்கை. தீண்டாமைக்கு எதிரான கொள்கை, பிற்படுத்தப்பட்டவர்களை மேம்படுத்தும் ஜனநாயக கொள்கை ஆகிய கொள்கைகளை எப்போதும் காப்பேன். என் பதவிக்காலத்தில் இதற்காக குரல் கொடுப்பேன்.
காங்கிரஸ் கட்சியை அமைப்பு ரீதியிலான வலுவான கட்சியாக மாற்றுவேன். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வலுப்பெற பாடுபடுவேன், என்று கூறி இருக்கிறார்.
-
காங்கிரசுக்கு ராஜ்யசபா எம்பி சீட் காலி? மீனாட்சி நடராஜனின் மனு.. உச்ச நீதிமன்றம் நிராகரித்தது ஏன்? -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்!












Click it and Unblock the Notifications