ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றதும்.. பொள்ளாச்சி வழக்கில் கடும் நடவடிக்கை... உதயநிதி உறுதி
சென்னை: தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் சென்னை சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.
அவர் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியிலுள்ள புதுப்பேட்டையில் பொது மக்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார்.

ஸ்டாலினுடைய வெற்றி
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, "இங்கு எனக்கு மிகப் பெரிய வெற்றியைக் கொடுத்த மக்களுக்கு நன்றி. எனது வெற்றிக்காகத் தேர்தல் பணிகளைச் செய்த தொண்டர்களுக்கும் நன்றி. இந்த வெற்றி என்பது கருணாநிதிக்கான வெற்றி, தலைவர் ஸ்டாலினுடைய வெற்றி.

அடுத்து அமைச்சர்?
இங்கு தொகுதி மக்கள் என்னிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தனர். வரும் 7ஆம் தேதி முதல் தொகுதிகளுக்குத் தேவையானதைச் செய்யத் தொடங்கிவிடுவேன். அதை நீங்களே பார்ப்பீர்கள்" என்றார். மேலும், ஸ்டாலின் தலைமையில் அமையும் அமைச்சரவையில் இடம் பெறுவீர்களா என்று கேட்ட கேள்விக்கு, வரும் 7ஆம் இதற்கான பதில் கிடைத்துவிடும் பொறுத்திருங்கள் எனச் சூசகமாகப் பதிலளித்தார்.

பொள்ளாச்சி வழக்கு
தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். பொள்ளாச்சியில் பல பெண்களிடம் நடந்த பாலியல் துன்புறுத்தல் சம்பவம் தொடர்பாக, அப்பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு (25), சபரி ராஜன் (25), வசந்தகுமார் (27), சதீஷ் (28), மணிவண்ணன் (25) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிபிஐ விசாரணை
மேலும், புகார் அளித்த பெண்ணின் சகோதரரைத் தாக்கிய வழக்கிலும் 'பார்' நாகராஜ் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இந்த இரு வழக்குகளை முதலில் சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வந்தனர். பின்னர், இந்த வழக்கு கடந்தாண்டு ஏப்ரல் மாதம் சிபிஐக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications