ரொம்ப கவனமா இருங்க.. பள்ளிகளுக்கு போன எச்சரிக்கை.. ஸ்கூல் திறக்கும் முதல் நாள்.. கல்வித்துறை ஆர்டர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் நாளை பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் முக்கியமான அறிவிப்பு ஒன்றை பள்ளிகளுக்கு பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் பள்ளி திறப்பு தேதிகள் மீண்டும் தள்ளி வைக்கப்பட்டு உள்ளன. 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 12ம் தேதியும், 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 14ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

Strict orders to the school ahead of class re-opening in Tamil Nadu?

காரணம் என்ன? : தமிழ்நாட்டில் வெயில் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. எதிர்பார்க்காத அளவிற்கு வெயில் உச்சம் அடைந்து உள்ளது. தினசரி வெப்பநிலை முதல்நாளை விட அதிகமாக உள்ளது. கோடையில் நிலவும் கடும் வெயில் காரணமாகவும், வெப்ப அலை காரணமாகவும் மாணவர்கள் நலன் கருதி பள்ளிகள் திறப்பை தள்ளிப்போட வேண்டும் என்று பெற்றோர்கள் பலரும் கோரிக்கை வைத்தனர்.

பொதுவாக ஜூன் முதல்வாரம் தமிழ்நாட்டில் லேசாக மழை தொடங்கும். மழை இல்லை என்றாலும் வெயில் குறையும். இதனால் மாணவர்கள் பள்ளிகள் செல்ல வசதியாக இருக்கும். ஆனால் தமிழ்நாட்டில் இந்த முறை வெயில் குறையவில்லை. மாறாக வெயில் அதிகரித்து வருகிறது. முக்கியமாக வட தமிழ்நாட்டில் வெப்பநிலை 43 டிகிரி செல்ஸியஸ் வரை கூட உயர்ந்து உள்ளது.

இதனால் மாணவ மாணவியர் பள்ளிகளுக்கு செல்வது சிரமம் ஆகும். இதை கருத்தில் கொண்டே தமிழ்நாட்டில் பள்ளி திறப்பு முன்னதாக 7ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. ஆனால் வெயில் குறையாத காரணத்தால் தற்போது இரண்டாவது முறையாக தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

அதன்படி 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 12ம் தேதியும், 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 14ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை முடிவில் இந்த தேதிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

என்ன உத்தரவு? : தமிழ்நாட்டில் நாளை பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் முக்கியமான அறிவிப்பு ஒன்றை பள்ளிகளுக்கு பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதன்படி நாளை எக்காரணம் கொண்டு 6ம் வகுப்பிற்கு கீழ் உள்ளவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட கூடாது.

மாவட்ட கல்வி அலுவலர்கள் இதை கண்காணிக்க வேண்டும். எந்த பள்ளியிலும் முன்கூட்டியே 6ம் வகுப்பிற்கு கீழ் உள்ளவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட கூடாது. மீறி திறக்கப்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இரண்டு தேதிகள் ஏன்? : முதல்வர் ஸ்டாலின் நடத்திய ஆலோசனையில் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சிலபஸ் முடிக்க வேண்டும். அதனால் கொஞ்சம் முன்கூட்டியே திறக்க வேண்டும் என்று முடிவு எடுத்துள்ளார்.

அதனால் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 12ம் தேதி திறக்கலாம் என்று முடிவெடுத்துள்ளார். அதே சமயம் சிறு குழந்தைகள் வெயிலில் பள்ளிக்கு செல்ல முடியாது என்பதால் அவர்களுக்கு இன்னும் கொஞ்சம் தாமதமாக திறக்கலாம் என்று முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இதனால் , 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 14ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் முடிவெடுத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+