2015 நினைவிருக்கா? எல் நினோ செய்ய போகும் சம்பவம்.. தமிழகத்தில் வெடித்து கொட்ட போகுது பருவமழை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: எல் நினோ காரணமாக உலகெங்கும் பல நாடுகளில் வானிலை மிக மோசமாகவே பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மழையின் அளவும் கூட பல நாடுகளில் கணிசமாக குறைந்துள்ளது. இந்தியாவிலும் தென்மேற்கு பருவமழை இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வடமேற்கு பருவமழை என்னவாகும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் இது என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதே பிரதான கேள்வியாக இருக்கிறது.

பசிபிக் பெருங்கடலில் வலுவடைந்து வரும் எல் நினோ நிகழ்வு, உலகின் பல்வேறு பகுதிகளின் வானிலையை பாதித்து வருகிறது. இந்தியாவிலும் இதனால் தென்மேற்கு பருவமழை மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இது மழை பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அடுத்ததாக தொடங்கவுள்ள வடகிழக்கு பருவமழையிலும் எல் நினோவின் தாக்கம் இருக்கும் என அஞ்சப்படுகிறது.

Strong El Nino India weather

குறிப்பாக தமிழகத்தின் ஆண்டு மழை பொழிவில் முக்கிய பங்கு வகிக்கும் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான வடகிழக்கு பருவமழை, இந்த முறை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

எல் நினோ

மத்திய மற்றும் கிழக்கு பூமத்திய ரேகை பசிபிக் கடல் பகுதியில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பைவிட தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வலுவான எல் நினோ நிலவுவதையே இது குறிக்கிறது.

பொதுவாக எல் நினோவை கண்காணிக்க பயன்படுத்தப்படும் நினோ 3.4 மாடல், தற்போது சராசரியாக +2.51 டிகிரி செல்சியஸ்அளவுக்கு உயர்ந்துள்ளது. +0.80 டிகிரி செல்சியஸ் உயர்ந்தால் அது எல் நினோவாக கருதப்படும் நிலையில், அப்போது அதை விட கிட்டத்தட்ட 4 மடங்கு வெப்பம் அதிகரித்துள்ளது. வரும் மாதங்களில் நிலைமை மோசமாகி +3 டிகிரி செல்சியஸ் வரை கூட வெப்பம் அதிகரிக்கலாம் என கணிக்கின்றன. இந்தாண்டு மட்டுமின்றி 2027 மே அல்லது ஜூன் வரை கூட எல் நினோ நீடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

2015 நினைவிருக்கா?

வலுவான எல் நினோ என்பது தென் தீபகற்ப பகுதியில் வடகிழக்கு பருவமழை அதிகமாக பெய்வதற்கு சாதகமான காரணமாக கருதப்படும். இதற்கு முன்பும் இதுபோல வலிமையான எல் நினோ உருவானது போது மழையின் அளவு அதிகரித்தே இருக்கிறது.

இது தொடர்பாக வானிலை ஆய்வாளர் ஒய்.இ.ஏ. ராஜ் கூறுகையில், "1997, 2009, 2015 மற்றும் 2023 ஆகிய எல் நினோ ஆண்டுகளில் தமிழகத்தில் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான வடகிழக்கு பருவமழை சிறப்பாக இருந்துள்ளது. இயல்பை விட அதிகமாகவே இருந்துள்ளது. குறிப்பாக 2015ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளமும் இதே காலகட்டத்தில் நிகழ்ந்தது.

அதேநேரம் இரண்டு முறை மட்டும் எல் நினோ இருந்தும் தமிழகத்தில் மழை குறைந்திருந்தது. 2002ம் ஆண்டு எல் நினோ நிலவியபோதும் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மோசமாக இருந்தது. 1982ம் ஆண்டில் எல் நினோ காரணமாக தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை இரண்டுமே பாதிக்கப்பட்டது. நாடு முழுக்க போதிய பருவமழை பதிவாகவில்லை" என்றார்.

மழையை எல் நினோ மட்டுமே தீர்மானிக்குமா?

இல்லை. தென்மேற்கு பருவமழை உடன் ஒப்பிடும்போது வடகிழக்கு பருவமழை மிகவும் மாறுபட்ட தன்மை கொண்டது. எல் நினோவுடன் இந்திய பெருங்கடல் இருமுனை நிலை, இந்திய மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களின் நிலை உள்ளிட்ட பல காரணங்கள் மழையை தீர்மானிக்கின்றன. எல் நினோ ஆண்டுகளில் வங்கக்கடலில் உருவாகும் காற்றதழுதக்த தாழ்வு பகுதி, புயல் போன்ற வானிலை அமைப்புகளின் எண்ணிக்கை குறையக்கூடும். உருவாகும் சில அமைப்புகளும் கூட குறைந்த தீவிரத்துடன் மேற்கு நோக்கி நகர்ந்து தமிழக- ஆந்திர கடற்கரையை நோக்கி செல்லும் வாய்ப்பும் உள்ளது.

அதே நேரத்தில் நகரமயமாக்கல் மற்றும் உலக வெப்பநிலை உயர்வு போன்ற காரணங்களால் எல் நினோ ஆண்டுகளில் ஒன்று மிக மோசமான நீண்ட வறட்சி ஏற்படுகிறது. அப்படி இல்லை என்றால் குறுகிய காலத்தில் அதிதீவிர கனமழை கொட்டி தீர்த்து தீவிர வானிலை நிகழ்வுகளின் தாக்கத்தை அதிகரிக்கிறது.

தமிழகத்துக்கு ஏன் இந்த மழை முக்கியம்?

தமிழ்நாட்டில் ஏற்கனவே தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யாததால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதை ஈடுகட்டவும், வறண்டு வரும் நீர்நிலைகளை நிரப்பவும் வடகிழக்கு பருவமழை தமிழகத்துக்கு மிகவும் அவசியமானது. எல் நினோ காரணமாக அதிக மழைக்கு வாய்ப்பு இருக்கலாம் என வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இருப்பினும், அது நடக்குமா என்பதை பார்க்க நாம் சில மாதங்கள் காத்திருக்க வேண்டும். எதிர்பார்த்த அளவை காட்டிலும் குறைவாக மழை பெய்தாலும் சிக்கல். குறுகிய நேரத்தில் மழை கொட்டி தீர்த்து வெள்ளத்தை ஏற்படுத்தினாலும் சிக்கல் என்று குழப்பமான ஒரு சூழலே உருவாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+