மதுராந்தகம் தவெக வேட்பாளருக்கு கடும் எதிர்ப்பு! கிராம மக்கள் கேள்வியால் திரும்பி சென்ற புஸ்சி ஆனந்த்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுராந்தகம் தொகுதியில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து அமைச்சரும், தவெக பொதுச்செயலாளருமான புஸ்சி ஆனந்த் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நிலையில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கேள்விகளை அடுக்கினர். அத்திவாக்கம் பகுதியில் வாக்கு சேகரித்த போது பணத்திற்காக கட்சி மாறியவர் மீண்டும் வாக்கு கேட்டு வருவது நியாயமா? என புஸ்சி ஆனந்திடம் கேள்வி எழுப்பியதை அடுத்து, வேறு வழியின்றி பிரசாரத்தை பாதியில் நிறுத்திவிட்டு திரும்பி சென்றார்.

தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுகவில் வென்று விட்டு எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த கையோடு தவெகவில் இணைந்த மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), சதயபாமா (தாராபுரம்) ஆகியோரே மீண்டும் தவெக சார்பில் போட்டியிடுகிறார்கள்.

TVK candidate in Madurantakam bussy anand turned back after facing questions from villagers

எதிர்ப்பு தெரிவித்து மக்கள் கேள்வி

இதனால், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் பகுதிகளில் இவர்களுக்கு கடுமையான எதிர்ப்பு நிலவுகிறது. சில இடங்களில் ஊர் மக்கள், ஓட்டு கேட்டு வரவேண்டாம் என்று தவெக வேட்பாளர்களை விரட்டி அடிக்கும் நிகழ்வையும் பார்க்க முடிகிறது. இதனால், போலீஸ் பாதுகாப்புடன் தவெக வேட்பாளர்கள் பிரசாரம் செய்யும் நிலை உள்ளது.

இந்த நிலையில், மதுராந்தகம் தொகுதியில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து அமைச்சரும், தவெக பொதுச்செயலாளருமான புஸ்சி ஆனந்த் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அத்திவாக்கம் என்ற இடத்திற்கு வாக்கு கேட்டு செல்லும் போது அங்குள்ள மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பணத்திற்காக கட்சி மாறியவர் மீண்டும் வாக்கு கேட்டு வருவது நியாயமா? என்று அமைச்சர் புஸ்சி ஆனந்தை பார்த்து மக்கள் கேள்வி எழுப்பினர்.

பாதி வழியில் நிறுத்தி சென்ற அமைச்சர்

அமைச்சர் புஸ்சி ஆனந்த் பிரசாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அத்திவாக்கம் பகுதி மக்கள் கருப்புக் கொடியினையும் காட்டினர். அப்போது பொதுமக்கள் - போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் வேறு வழியின்றி பிரசாரத்தை பாதியில் நிறுத்திவிட்டு திரும்பி சென்றார்.

மரகதம் குமரவேலுக்கு பிரசாரம் தொடங்கியதில் இருந்தே பல்வேறு கிராமங்களிலும் தொடர் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. வாக்காளர்களுக்கு நன்றி கூட தெரிவிக்காத நிலையில் மீண்டும் வாக்கு கேட்டு வருவதா? என பல இடங்களில் மக்கள் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்து வருகிறார்கள்.

அனல் பறக்கும் களம்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் ஐந்து முனை போட்டி நிலவுகிறது. தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர், கம்யூனிஸ்ட் கட்சிகள் வேட்பாளரை அறிவித்துள்ளன. இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டுமே ஆட்சியை தொடர்வதில் சிக்கல் இருக்காது என்பதால் தவெக எப்படியாவது வெற்றி பெற்றாக வேண்டும் என்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

அதேபோல, சட்டமன்ற பொதுத்தேர்தலில் பெற்ற தோல்விக்கு வட்டியும் முதலுமாக பதிலடி கொடுக்க திமுகவும் வியூகம் வகுத்து வருகிறது. அதிமுகவும் எற்கனவே வெற்றி பெற்ற தொகுதிகள் என்பதால், இரண்டிலும் வென்று தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதன் காரணமாக மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல் களம் அனல் பறக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+