"கடவுள் நேர்ல வரமாட்டார்னு சொல்லுவாங்க.. முதல்வர்தான் எங்களுக்கு கடவுள்": சிந்துவின் தந்தை உருக்கம்!
சென்னை: கடந்த 2020ஆம் ஆண்டு வீட்டின் 3வது மாடியில் இருந்து தவறி விழுந்ததில் இரு கால் எலும்புகள் முறிந்ததால் மாணவி சிந்து படுத்த படுக்கையாகவே +2 தேர்வு எழுதினார்.
இதுகுறித்து அறிந்த முதல்வர் ஸ்டாலின், மாணவி சிந்துவின் முழு சிகிச்சைக்கான செலவையும் அரசே ஏற்கும் என்று நேற்று அறிவித்தார்.
இந்நிலையில், கடவுள் நேரில் வரமாட்டார் மனித உருவத்தில் வருவார் என்பார்கள் முதலமைச்சர் எங்களுக்கு கடவுள் என சிந்துவின் தந்தை உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

மாணவி சிந்து
சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த மாணவி சிந்து, கடந்த 2020-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வீட்டின் மூன்றாவது மாடியிலிருந்து தவறுதலாக விழுந்ததில், அவரது இரண்டு கால் மூட்டுகளும் கடுமையாக சேதமடைந்தன. முகத்தின் தாடையின் ஒரு பகுதி முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.
உயிருக்கு ஆபத்தான நிலையில் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிந்துவுக்கு 10-க்கும் மேற்பட்ட அறுவைச் சிகிச்சைகள் செய்யப்பட்டு காப்பாற்றப்பட்டுள்ளார். ஆனால், சிந்துவால் நடக்க முடியாது. நீண்ட நேரம் உட்காரவும் முடியாது.

படுத்த படுக்கையாகவே தேர்வு
இந்நிலையில், நேற்று முன்தினம் +2 தேர்வு தொடங்கிய நிலையில், சிந்து தேர்வு எழுதி வருகிறார். அவருக்காக பிரத்யேக படுக்கை வசதியுடன், தனி தேர்வு அறை தயார் செய்யப்பட்டு, அவர் சொல்லச் சொல்ல, மற்றொருவர் தேர்வை எழுதினார்.
சிந்துவின் அப்பா இருசக்கர வாகனத்தில் டீ வியாபாரம் செய்பவர். அவர் சிந்துவுக்கு தொடர் சிகிச்சை மேற்கொள்ள பொருளாதார வசதி இல்லாமல் தவித்து வந்துள்ளார்.

செலவை அரசே ஏற்கும்
இதைக் கேள்விப்பட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மாணவி சிந்துவின் மருத்துவச் செலவை அரசே ஏற்கும் என்று அறிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், " தடைகள் வரினும் சோர்ந்து போகாமல் எதையும் முயன்று பார்க்கும் மனவலிமையை சிந்துவைப் பார்த்து மாணவர்கள் கைக்கொண்டு, தேர்வுகளைத் துணிவுடன் எதிர்கொள்ள வேண்டும்!
மீண்டும் வாலிபால் ஆடவேண்டும் என்ற சிந்துவின் ஆசையை நிறைவேற்றத் தேவையான மருத்துவச் செலவுகளை அரசே ஏற்கும்" என்று தெரிவித்துள்ளார்.

மாணவி சிந்து நெகிழ்ச்சி
முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாணவி சிந்து, என் குடும்பம் ஏழ்மையான குடும்பம். டீ வியாபாரியான என் அப்பாதான் எனது மருத்துவச் செலவுகளை பார்த்து வருகிறார்.
என்னால் எழுந்து நடக்கமுடியுமா என நினைத்தேன். என் அப்பா நான் எழுந்து நின்றால் போதும் என நினைத்தார். ஆனால் அதற்கும் ஒரு படி மேலே முதலமைச்சர் என்னை மீண்டும் வாலிபால் விளையாட அரசே முழு செலவையும் ஏற்கும் எனக் கூறியுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

தந்தை உருக்கம்
மாணவி சிந்துவின் தந்தை சக்தி கூறுகையில், "நடக்க முடியாமல் என் மகள் மிகவும் கஷ்டப்படுகிறாள். அருகில் இருந்து பார்ப்பதற்கு மிகவும் கஷ்டமாக உள்ளது. நான் வியாபாரம் செய்து வரும் சிறிய தொகையில் மருத்துவச் செலவையும், குடும்பச் செலவையும் பார்த்து வருகிறேன்.
எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. கடவுள் நேரில் வரமாட்டார்; மனித உருவத்தில் வருவார் என்பார்கள். முதலமைச்சர் எங்களுக்கு கடவுளாக தெரிகிறார்" என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
-
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
திமுக தோல்விக்கு காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்.. கமெண்ட் செய்யுங்க -
ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்ட ரகசிய அறிக்கை: சேகர்பாபு மீது நடவடிக்கை எடுக்க தயங்கும் தலைமை - பின்னணி என்ன? -
தீர்ந்து போன சக்தியிடம் திருடிய காஞ்சு போன சக்தி.. விமர்சித்த ஸ்டாலின்.. தவெக கொடுத்த பதிலடி -
அண்ணா அறிவாலயத்தில் ஆட்டம் போட்ட மகளிரணி.. ரீல்ஸ் போடச் சொல்லும் ஸ்டாலின்! தவெகவைப் பார்த்து சூடு? -
ஆடிய ஆட்டமென்ன? குறுநில மன்னர்களாக அமைச்சர்கள்! அடங்காத மா.செ.க்கள்! ஆக்ஷனுக்கு தயாரான ஸ்டாலின்! -
கரூர் சம்பவத்தில் விஜய் மீது வழக்கு போட்டிருந்தால் இன்று நிலைமையே வேறு.. நாங்க ஏமாந்துட்டோம்! எவ வேலு -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட்












Click it and Unblock the Notifications