பொறியியல் கல்வி படிக்க மாணவர்கள் ஆர்வம்..கலந்தாய்வு எப்போது..அமைச்சர் பொன்முடி சொன்ன தகவல்
சென்னை: பொறியியல் படிப்பதற்காக இந்த ஆண்டு அதிக அளவில் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு 18,610 விண்ணப்பங்கள் கூடுதலாக வரப்பெற்றுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். நீட் தேர்வு முடிவுகள் வந்த பிறகு பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தமிழ்நாட்டில் தொடங்கும் எனவும் அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் பி.இ., பி.டெக் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் முடிந்து ரேண்டம் எண்கள் வழங்கப்பட்டுள்ளன. தரவரிசை பட்டியல் விரைவில் வெளியாக உள்ளது. கலந்தாய்வு அடுத்த மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பிக்கும் தேதி முடிவடைந்தது, அதற்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. சென்ற ஆண்டை விட இந்தாண்டு 18,510 பேர் அதிகம் விண்ணப்பித்து உள்ளனர் என்றார்.
நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக பொறியியல் படிப்பிற்காக தொழிற்சாலைகளுடன் இணைந்து பாடத்திட்டங்களை மாற்றியுள்ளோம். இதன் காரணமாக மாணவர்கள் பொறியியல் படிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அரசு பள்ளிகளில் படித்து 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் சேருவதற்காக நடப்பாண்டு மாணவர்கள் அதிக அளவில் விண்ணப்பித்துள்ளனர். சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு 31,445 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அரசுப்பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். மாற்றுத்திறனாளி மாணவர்களும், விளையாட்டுத்துறை அமைச்சர் சலுகை அறிவித்துள்ளதன் அடிப்படையில் நடப்பாண்டு 5024 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழக முதல்வர் கடந்த 2 ஆண்டுகளில் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளதால் நிறைய மாணவர்கள் பொறியியல் படிக்க விண்ணப்பித்துள்ளனர். மாணவர்கள் அனைவருக்கும் இடம் கிடைக்கும். ஸ்கில் டெவலப்மெண்ட் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. பொறியியல் கலந்தாய்வு ஜூலை 2ஆம் தேதி தொடங்கும் அதற்காக ரேங்க் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. நீட் தேர்வு எழுதியவர்களுக்கு ரிசல்ட் வர உள்ளது. அதன்பிறகு கவுன்சிலிங் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றும் கூறினார் அமைச்சர் பொன்முடி. பொறியியல் கல்லூரிகளின் அடிப்படை கட்டமைப்பு குறித்தும் தரம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications