ரிசல்ட் வந்து 2 மாசமாச்சு.. பிளஸ் 2 மார்க் ஷீட் எப்போது கிடைக்கும்? மாணவர்களுக்கு இனிப்பான செய்தி..!
சென்னை: 2023-24 ஆம் கல்வி ஆண்டுக்கான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தற்போது மாணவர்கள் தங்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இதேபோல தனித் தேர்வர்கள் தங்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் தேர்வு எழுதிய மையங்களில் பெற்றுக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த மார்ச் ஒன்றாம் தேதி முதல் 22ஆம் தேதி வரை பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நடைபெற்ற நிலையில் மொத்தம் ஏழு லட்சத்து 60 ஆயிரத்து 606 மாணவர்கள் தேர்வு எழுதினர்.

4,08,440 மாணவிகளும், மூன்று லட்சத்து 52 ஆயிரத்து 165 மாணவர்களும் அடங்குவர். ஒரு மூன்றாம் மாநில பாலினத்தவர் தேர்வு எழுதி, அவர் வெற்றியும் பெற்று இருக்கிறார்.
7,19,196 மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில், மாணவிகள் 96.44 சதவீதம் அதாவது மூன்று லட்சத்து 93 ஆயிரத்து 890 பேரும், மாணவர்களில் 92.37% அதாவது 300,25,35 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய ஒரே ஒரு மூன்றாம் பாலினத்தவரும் தேர்ச்சி பெற்றுள்ளார். மாணவர்களை விட 4.07 சதவீதம் மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்தாண்டு பொதுத் தேர்வை விட இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது.
இதனையடுத்து மாணவ, மாணவிகள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்று உயர் கல்வி மற்றும் நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பித்தனர். மேலும் மறுகூட்டலுக்கு விண்ணபித்தது, மறுதேர்வு உள்ளிட்டவையும் நடத்தப்பட்ட நிலையில், அந்த முடிவுகளும் வெளியானது. இந்நிலையில் மே மாதம் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், இதுவரை மாணவர்களுக்கு ஒரிஜினல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதனால் மாணவர்கள் சிரமத்தை சந்தித்த நிலையில், எப்போது வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
இந்நிலையில் 2023-24 ஆம் கல்வி ஆண்டுக்கான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தற்போது மாணவர்கள் தங்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்,"இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வெழுதிய தேர்வர்களுக்கு (மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவு உட்பட) அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் / மதிப்பெண் பட்டியல் 01.08.2024 அன்று முதல் வழங்கப்படும்.
பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியிலும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையத்திலும் அசல் (Original Mark Certificates) / மதிப்பெண் (Statement Of Mark) பெற்றுக் கொள்ளலாம். மேலும். விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்" என கூறப்பட்டுள்ளது.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications