கோமியம் நல்லதா? மன்னிப்பு கேளுங்க! சென்னை ஐஐடி இயக்குநருக்கு மாணவர் கழகம் வலியுறுத்தல்
சென்னை: மாட்டு கோமியம் நல்லது என்றும், அதை குடித்தால் ஜுரம் சரியாகும் என்றும் சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி கூறியிருந்தார். அவரது கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள மாணவர் கழகம், அவர் பொதுவெளியில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
அதாவது, "சென்னை ஐ.ஐ.டி. இயக்குநரான காமகோடி, கோமியம் குடித்தால் ஜூரம் சரியாகுமென அறிவியலுக்கு எதிரான, ஆதாரங்கள் இல்லாத பிற்போக்கு கருத்தைப் பேசியிருக்கிறார். அறிவியல் படி கோமியம் என்பது மாட்டின் கழிவு. மேலும் ஏற்கனவே நோய்வாய்ப்பட்டிருக்கும் மாடாக இருந்தால் மனிதர்களுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய, நோயைப் பரப்பக்கூடிய நுண்ணுயிரிகள் அந்த மாட்டின் சிறுநீரில் இருக்கும்.

இதை மனிதர்கள் அருந்தினால் வயிற்றுப்போக்கு, காய்ச்சல், சுவாசக் கோளாறு உள்ளிட்ட பல நோய்கள் ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாக முடியலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கும் நிலையில், அறிவியலை ஊக்குவிக்கவேண்டிய இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநர் அறிவியலுக்கு எதிராகப் பேசியிருப்பதைத் தமிழ்நாடு மாணவர் கழகம் கண்டிக்கிறது. மேலும் தன் பேச்சுக்கான ஆதாரத்தை அவர் வெளியிட வேண்டும். தவறும் பட்சத்தில் தான் பேசியது தன்னுடைய சொந்த கருத்து என்றும், அறிவியல் படி தவறு என்றும் பொதுவெளியில் வருத்தம் தெரிவிக்க வேண்டும்" என தமிழ்நாடு மாணவர் கழகம் தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.
ஐஐடி இயக்குநர் பேசியது என்ன?:
தமிழ்நாடு முழுவதும் பொங்கல் விழாக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இப்படி இருக்கையில், சென்னை மாம்பலத்தில் உள்ள கோ-சோலையில் கடந்த 15ம் தேதி மாட்டு பொங்கல் கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்றிருந்த அவர், "கோமியம் சிறந்த மருத்துவ குணத்தை கொண்டது. இது ஜுரத்த கூட சரியாக்கும். பாக்டீரியா, பூஞ்சை பாதிப்புகளுக்கு எதிராக செயல்படுவதால் இதற்கு இந்த தனிச்சிறப்பு உண்டு. ஒருமுறை சந்நியாசி ஒருவருக்கு மிகுந்த காய்ச்சல் இருந்தது. அவர் கோமியத்தை குடித்தார். அவருக்கு 15 நிமிடங்களில் காய்ச்சல் விட்டுவிட்டது" என்று கூறியிருந்தார்.
உலகமே டெக்னாலஜி பின்னாடி ஒடிக்கொண்டிருக்கிறது. இந்தியாவும் உலக அரங்கில் தலைநிமிர்ந்து நடக்க ஐஐடி-க்கள் உதவிப்புரிய வேண்டும். ஆனால் அப்படிப்பட்ட ஐஐடியின் இயக்குநரே கோமியம் குறித்து இப்படி பேசலமாமா? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications