"இது" நடக்க போகுதாம்.. இன்னும் ரெண்டே நாள்தான்.. ஹோட்டல் ஓனர்கள் தந்த மெகா ஷாக்.. என்ன காரணம்?
ஹோட்டல்களில் உணவு பொருட்களின் விலை உயர போகிறதாம்
சென்னை: அடுத்த சில தினங்களில் இட்லி, தோசை, பொங்கல் விலை எல்லாமே உயர போகிறதாம்.. மக்களின் தலையில் இடியை தூக்கி போட்டுள்ளனர் ஓட்டல் ஓனர்கள்..!
சமீப நாட்களாகவே பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து காணப்படுகிறது.. பெட்ரோல் விலை உயர்வுக்கு பாஜக அரசுக்கு பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
ஆனால் பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணமே, முந்தைய அதாவது 8 வருடங்களுக்கு முன்பு ஆட்சி செய்த காங்கிரஸ்தான் காரணம் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் தந்திருந்தார்.

சுங்கக்கட்டணம்
இதனிடையே தமிழகத்திலும் சரி, தேசிய அளவிலும் சரி, பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.. இதற்கு நடுவில் சுங்கக்கட்டணம் உயர்ந்துவிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. பெட்ரோல் ஒருபக்கம், சுங்கக்கட்டணம் மறுபக்கம் என விலை உயர்வு நெருக்கி தள்ளுவதால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் உயர்ந்து வருகின்றன.

சிலிண்டர் விலை
இதனால், ஏழை, நடுத்தர மக்கள் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றனர்... இந்த அதிர்ச்சியை முழுமையாக அவர்களால் தாங்குவதற்குள், சிலிண்டர் விலை ரூ.268.50 உயர்ந்துவிட்டது.. சிலிண்டர் விலை ரூ.2,137லிருந்து ரூ.2,406 விலை உயர்ந்துள்ளதால், ஹோட்டல் ஓனர்கள் தலையில் இடிவிழுந்துள்ளதுபோல் ஆகிவிட்டது... டீக்கடைக்கார்கள் அதற்கு மேல் அதிர்ந்து உட்கார்ந்துள்ளனர்..

நெருக்கடி
அதனால், டீ விலையை ரூ.10ல் இருந்து ரூ.12 ஆகவும், காபி விலை ரூ.12ல் இருந்து ரூ.15 ஆகவும், பார்சல் டீ ரூ.25ல் இருந்து ரூ.30, பார்சல் காபி ரூ.35லிருந்து ரூ.40 ஆகவும் விலை உயர்த்த வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது.. அதுபோலவே, ஹோட்டல்களின் உணவு பொருட்களின் விலையையும் உயர்த்த ஓனர்கள் முடிவு செய்துள்ளனர்.. 20 சதவீதம் ஓட்டல் உணவு பொருட்களின் விலை உயர்த்த போகிறார்களாம்.

ஓட்டல்கள்
இது குறித்து சென்னை ஓட்டல்கள் சங்க செயலாளர் ராஜ்குமார் சொன்னதாவது சென்னையில் மட்டும் சுமார் 16 ஆயிரம் ஓட்டல்கள் இயங்கி கொண்டிருக்கின்றன.. உணவு பொருட்களை பொறுத்தவரை சிறிய ஓட்டல்களில் விலை குறைவாகவும், நடுத்தர கடைகளில் அதற்கு ஏற்பவும், உயர்தர ஓட்டல்களில் அதற்கு ஏற்பவும் விலைகள் நிர்ணயிக்கப்பட்டு, விற்பனை நடக்கிறது.

கேஸ் விலை
இப்போது கேஸ் விலை உயர்ந்துவிட்டடது.. ஒரே ஆண்டில் ரூ.2400 ஆக உயர்ந்துள்ளது. சமையல் எண்ணெய் லிட்டர் 120 ரூபாய் இருந்தது.. இப்போது ரூ.180 ஆகிவிட்டது.. அரிசி, பருப்பு போன்ற மூலப் பொருட்கள் அனைத்துமே விலை உயர்ந்து விட்டது.. ரூ.100க்கு உணவு தயாரித்தால் அதில் சமையல் எரிவாயுக்காக 16 சதவீதம் வரை செலவு ஆகிறது. அது மட்டுமல்லாமல் கட்டிடம் வாடகை, ஊழியர்கள் சம்பளம் என்று இப்படி ஏகப்பட்ட செலவுகள் இருக்கின்றன.. அதனால்தான் வேறு வழியில்லாமல் விலையை உயர்த்துகிறோம்.

விலை உயர்வு
வருகிற 6, 7ம் தேதிவாக்கில் ஓட்டல் உரிமையாளர்கள் கூட்டம் நடக்க உள்ளது.. அன்றைய தினத்தில் விலை உயர்வு முடிவு குறித்து பேசி முக்கிய முடிவு எடுப்போம்.. எப்படி பார்த்தாலும், உணவு பொருட்கள் விலை 10%வரை உயர்த்தப்படும்... 2 இட்லி ரூ.20க்கு விற்கப்பட்டால் அது ரூ.22 ஆக விலை உயரும்... விலை உயர்வை ஈடுகட்டும் வகையில் மத்திய அரசு உணவகங்களுக்கு மானிய விலையில் சிலிண்டர்கள் வழங்க வேண்டும்... அப்போதுதான் விலையேற்றத்தை தடுக்க முடியும்" என்றார்.












Click it and Unblock the Notifications