சீனியர் சிட்டிசன்களுக்கு ரயில் கட்டண சலுகை.. மத்திய அமைச்சரின் 'ஏளன' பதில்.. சு.வெங்கடேசன் கண்டனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டண சலுகை வழங்க வேண்டும் என்று எழுப்பப்பட்ட கோரிக்கைக்கு ரயில்வே அமைச்சர் குரூரமாக பதிலளித்துள்ளதாக மதுரை எம்.பி சு.வெங்கடேசன் குற்றம்சாட்டியுள்ளார்.

ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு என கட்டண சலுகை வழங்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த சலுகை நிறுத்தப்பட்டது.

கொரோனா தொற்று காலத்தில் ரயில்வே நிர்வாகத்திற்கு ஏற்பட்ட இழப்புகளை ஈடு செய்யவே இந்த கட்டண சலுகை நிறுத்தப்பட்டதாக ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியிருந்தார்.

கேள்வி

கேள்வி

இந்நிலையில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் கட்டண சலுகை வழங்க வேண்டும் என்று நேற்று (டிச.7) நாடாளுமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வியெழுப்பியிருந்தார். இதற்கு ரயில்வே அமைச்சரிடமிருந்து எழுத்துப்பூர்வ பதில் வந்திருக்கிறது. இந்த விவரங்களை சு.வெங்கடேசன் தற்போது டிவிட்டரில் பகிர்ந்திருக்கிறார். அந்த விவரங்கள் பின்வருமாறு, "மூத்த குடி மக்களுக்கான ரயில் கட்டண சலுகையை வழங்க கோரி நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை அளித்துள்ளதா ? எதற்காக அச்சலுகை வழங்கப்படவில்லை? என்று நான் கேள்வியெழுப்பியிருந்தேன். அதற்கு அமைச்சர் தரப்பிலிருந்து, "2019-2020ம் ஆண்டில் மானியங்களுக்காக ரூ.59,837 கோடி செலவிடப்பட்டுள்ளது. அனைத்து பயணிகளுக்கும் 53 சதவிகிதம்தான் கட்டணம் சராசரியாக வசூலிக்கப்படுகிறது. 47 சதவீதம் மானியம் அளிக்கப்படுகிறது. மாணவர்கள் மாற்றுத்திறனாளிகள் நோயாளிகளுக்கு சலுகை அளிக்கப்படுகிறது" என்று பதில் அளித்துள்ளார்.

பதில்

பதில்

இப்படி மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகை மறுக்கப்படுவதால் அவர்கள் பயணம் செய்வதைத் தவிர்க்கும் நிலைமை எழாதா? அவர்களின் சேமிப்புகள் கரையாதா? என்கிற கேள்விக்கு "ரயில்வே நிறைய வகையிலான ரயில்களை அதாவது துரந்தோ, வந்தே பாரத், தேஜஸ், காட்டிமேன், ஹம்சபார், எக்ஸ்பிரஸ், மெயில், பாசஞ்சர் என - இயக்குகின்றன. அவற்றில் வெவ்வேறு வகுப்பு பயணங்களும் - முதல், இரண்டாம், சாதாரண வகுப்பு - உள்ளன. ஆகவே மூத்த குடிமக்கள் அவரவர் விரும்புகிற வகையில் பயணம் செய்து கொள்ளலாம்" என்று பதில் தெரிவித்துள்ளார்.

 கண்டனம்

கண்டனம்


இது மிகவும் குரூரமான பதிலாகும். இவர்கள் சொல்கிற மானிய கணக்கு பழையதுதான். அப்போதும் மூத்த குடிமக்கள் கட்டண சலுகை வழங்கப்பட்டு வந்தது. ஆகவே மானியத்தை காரணம் காண்பிப்பது ஏமாற்றுகிற வேலை. மேலும், நாடாளுமன்ற நிலைக்குழு பயணிகள் வருமானம் அதிகரிக்க தொடங்கி இருப்பதால் இந்த மூத்த குடிமக்கள் பயணச் சலுகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது. இந்த ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரை பயணிகள் வருமானம் ரூ. 43,300 கோடி வந்துள்ளது என்றும் இதே காலத்தில் சென்ற ஆண்டு ரூ.24,600 கோடிதான் வருமானம் வந்தது என்றும் ரயில்வே அமைச்சகம் முன்பே செய்தி வெளியிட்டு இருந்தது.

 ஈவிரக்கமற்ற செயல்

ஈவிரக்கமற்ற செயல்

அந்த அடிப்படையில் பார்த்தால் பயணிகள் வருமானம் சென்றாண்டை விடவும் 2019-2020ஐ விடவும் இம்முறை கூடுதலாக ரூ.50,000 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கலாம். இந்த நிலையில் நாடாளுமன்ற நிலைக் குழுவின் பரிந்துரையையும் புறந்தள்ளி மூத்த குடிமக்களுக்கான பயண சலுகை மறுப்பது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. மூத்த குடிமக்கள் மருத்துவத்திற்காகவும் சுற்றுலாவுக்காகவும் செல்லும் பயணத்திற்கு பயண சலுகை மறுப்பது ஈவிரக்கமற்ற செயல்.

 நாகரிக சமூகம்

நாகரிக சமூகம்

இதை விட ரயில்களின் பலவகை, பயண வகுப்புகளின் பல வகைகளை சொல்லி அவற்றில் அவரவர் தெரிவு செய்து கொள்ளட்டும் என்று கூறி இருப்பது குரூரமானது. 'வக்கு இருக்கிறதுக்கு தகுந்த மாதிரி போய்க் கொள்', இல்லாவிட்டால் போகாமல் இரு என்று சொல்கிற தொனி அமைச்சரின் பதிலில் இருப்பது வருந்தத்தக்கது. ஒரு நாகரிக சமுகத்தின் பண்புகளில் ஒன்று மூத்த குடிமக்களின் நலன் பேணுவது என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும். கோரிக்கை வைத்தால் எள்ளி நகையாடுவது அழகல்ல.

 வேலையில்லா திண்டாட்டம்

வேலையில்லா திண்டாட்டம்

மூத்த குடிமக்கள் எந்த விதமான வருமானமும் இன்றி 78 சதவிகிதமானோர் தங்கள் குழந்தைகளை நம்பி உள்ளார்கள் என்று தேசிய மாதிரி ஆய்வு கூறுகிறது. குழந்தைகளோ வேலையில்லா திண்டாட்டத்தாலும், வருமானம் குறைவான வேலையாலும், விலைவாசி உயர்வாலும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் .இந்த நிலையில் மூத்த குடிமக்களுக்கான இந்த பயணச் சலுகை மறுப்பது மூத்த குடிமக்களை மேலும் உளவியல் சிக்கல்களுக்குள் தள்ளுவதற்கே வழிவகுக்கும். 14 கோடியே 43 லட்சம் மூத்த குடிமக்கள் நமது நாட்டில் உள்ளார்கள், இவர்களின் நலனை புறக்கணிக்கும் வகையில் ரயில்வேயின் இந்த முடிவு கடுமையான கண்டனத்திற்குரியது" என்று ரயில்வே அமைச்சரின் பதிலுக்கு சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+