"இந்தியா"வை பார்த்து பிரிட்டிஷாருக்கு பிறகு அதிகம் பயப்படுவது பாஜகவினர்தான்.. சு.வெங்கடேசன் கிண்டல்
சென்னை: இந்தியா என்ற பெயரை பார்த்து பிரிட்டிஷாருக்கு பிறகு அதிகம் பயப்படுவது பாஜகவினர்தான் என மதுரை எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளன. இந்த நிலையில் பாஜகவை ஆட்சிக் கட்டிலில் இருந்து இறக்க காங்கிரஸ், திமுக உள்பட 26 கட்சிகள் இணைந்து இந்தியா எனும் கூட்டணியை உருவாக்கியது. இந்த நிலையில் இந்தியா எனும் பெயரை பாரத் என மாற்ற மத்திய அரசு முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வரும் 9, 10 ஆம் தேதிகளில் தலைநகர் டெல்லியில் ஜி20 மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்கும் விருந்தினர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு டின்னரை அளிக்கிறார். இதற்கு அவர் விருந்தினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அந்த அழைப்பிதல்தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து வரும் அறிவிப்புகள், இது போன்ற அழைப்பிதழ்களில் இந்திய குடியரசுத் தலைவர் அதாவது President of India என குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் ஜி20 மாநாட்டுக்கான அழைப்பிதழில் President of Bharat என வெளியாகியுள்ளது. வரும் 18ஆம் தேதி நடக்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக விவாதங்கள் எழுந்துள்ளன.
“தமிழ்நாடு” என்ற பெயரை மாற்ற முயற்சித்தவர்கள்
— Su Venkatesan MP (@SuVe4Madurai) September 5, 2023
இப்பொழுது “இந்தியா” என்ற பெயரை மாற்ற முயற்சிக்கின்றனர்.
இந்தியாவைக் கண்டு பிரிட்டீஷாருக்கு பிறகு அதிகம் பயப்படுகிறவர்களாக பாஜக வினர் மாறியுள்ளனர்.
பெயர் மாற்றத்திற்கு பின்னால் இருப்பது தேசப்பற்றல்ல;
தேர்தல் பயம்.
இந்தியா வெல்லும். pic.twitter.com/D9CwxLmEZ5
இதற்கு காங்கிரஸ், திமுர உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளன. இந்தியா என்ற சொல் பாஜகவிற்கு கசக்கிறது. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்ற கதையாக இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் விமர்சித்திருந்தார். இதுகுறித்து மதுரை எம்பி சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: "தமிழ்நாடு" என்ற பெயரை மாற்ற முயற்சித்தவர்கள்
இப்பொழுது "இந்தியா" என்ற பெயரை மாற்ற முயற்சிக்கின்றனர்.
இந்தியாவைக் கண்டு பிரிட்டிஷாருக்கு பிறகு அதிகம் பயப்படுகிறவர்களாக பாஜகவினர் மாறியுள்ளனர். பெயர் மாற்றத்திற்கு பின்னால் இருப்பது தேசப்பற்றல்ல; தேர்தல் பயம். இந்தியா வெல்லும். இவ்வாறு தனது ட்விட்டர் பக்கத்தில் மதுரை லோக்சபா எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications