சுபஸ்ரீ மரணம்.. பேனரை வைத்த முன்னாள் கவுன்சிலருக்கு திடீர் நெஞ்சுவலி.. ஆஸ்பத்திரியில் அனுமதி!
அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயபால் தலைமறைவானதாக தெரிகிறது
Recommended Video
சென்னை: சுபஸ்ரீ உயிரிழக்க காரணமான முன்னாள் கவுன்சிலர் மாயமானதாக கூறப்பட்ட நிலையில், தற்போது திடீர் நெஞ்சு வலி காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
குரோம்பேட்டையை சேர்ந்த 23 வயது சுபஸ்ரீ ஸ்கூட்டியில் வரும்போது, சாலையில் இருந்த பேனர் சரிந்து விழுந்ததில் கீழே நிலைகுலைந்து விழுந்தார். இதையடுத்து பின்னாடியே மின்னல் வேகத்தில் வந்த தண்ணி லாரி மோதி உயிரிழந்தார். இந்த சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து மக்கள் இன்னும் மீளவில்லை.
வழிநெடுகிலும் இந்த பேனர்களை வைத்தவர் ஜெயகோபால் என்பவர். இவர் அதிமுக முன்னாள் கவுன்சிலர். மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளரும்கூட.

விதிமீறல்
தன்னுடைய மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக வழியெங்கும் பேனர்கள் வைத்திருந்ததுடன், சென்டர் மீடியத்திலும் பேனரை விதிமீறி வைத்திருந்தார். இது குறித்து பரங்கிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான மனோஜை கைது செய்துவிட்டனர். ஆனால் சம்பந்தப்பட்ட கவுன்சிலரை கைது செய்யவில்லை.

வழக்கு பதிவு
பேனரை பிரிண்ட் செய்த அச்சகத்தாரை கூட விட்டு வைக்காத காவல்துறை, பேனரை வைத்த ஜெயகோபாலை ஆன் தி ஸ்பாட் கைது செய்யவில்லை என்பதை சுட்டிக்காட்டி மீம்கள் கூட வெளிவர தொடங்கின. பேனர் வைத்த ஜெயகோபால் மீது மாநகராட்சி உதவி பொறியாளர் கமல்ராஜ் பள்ளிக்கரணை போலீசில் புகார் செய்தார்.

ஜாமீன்?
இதையடுத்து மதியானம் 2.30 மணிக்கு விபத்து நடந்த நிலையில், சாயங்காலம் 6 மணிக்குதான் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அப்படியே வழக்கு பதிவு செய்திருந்தாலும், அது எளிதில் ஜாமீனில் வெளியே வரக்கூடிய செக்ஷனில்தான் போலீசார் கேஸ் பதிவு செய்துள்ளனர். அதாவது பொது மக்களுக்கு இடையூறு செய்தல் என்பன போன்று கேஸ் பதியப்பட்டு உள்ளது.

கைது நடவடிக்கை
ஆனால் இந்த விவகாரத்தில் கோர்ட் தலையிடும் என்றும், தானாக வந்து வழக்கை விசாரிக்கும் என்றும் எதிர்பார்க்கவில்லை போலும்.. அதனால் ஜெயபால் தலைமறைவாகி விட்டதாக சொல்லப்பட்டது. கோர்ட் நேரடியாக தலையிட்டு இருப்பதால், எந்நேரமும் கைது நடவடிக்கை பாயலாம் என்று பயந்தே ஜெயபால் தலைமறைவாகி இருக்கலாம் என்றும் கருதப்பட்டதுடன், மாயமான ஜெயபாலை தேடும் பணியில் போலீசாரும் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர்.

ஆஸ்பத்திரி
இந்நிலையில், ஜெயபாலுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதாம். இதன் காரணமாக, பள்ளிக்கரணை காமாட்சி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பேனர் வைத்த விவகாரம் முதல் காணாமல் போன ஜெயபால், கடந்த 2 நாட்களாக எங்கே இருந்தார் என்று தெரியவில்ல. ஆனால், இப்போது திடீரென நெஞ்சுவலி காரணம் சொல்லி ஆஸ்பத்திரியில் படுத்து கொண்டுள்ளது பல சந்தேகங்களை மக்களிடையே எழுப்பி வருகிறது.
-
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
"ஆதவ் அர்ஜுனா வாயை அடக்கிப் பேசணும்.. அதிமுகவை பற்றி பேச அருகதை இல்லை".. கேபி முனுசாமி தாக்கு! -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
பனையூரில் பின்வாசல் வழியாக நுழைய முயன்ற அதிமுகவினர்! ஒரே தள்ளுமுள்ளு! விஜய் ஆபீஸில் என்ன நடக்கிறது -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
விஜய் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றல.. எல்லாம் போச்சு.. அப்செட்டில் இருக்கும் அதிமுக புள்ளிகள்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார்











Click it and Unblock the Notifications