சுபாஷினிக்கு இது தேவையா? தாத்தா தலையில் தையல் பிரித்த நர்ஸ்? கடைசிவரை நம்பிய நெல்லை கவின் : பிரபலம்
சென்னை: "எனக்கும் கவினுக்குமான என்ன உறவு பற்றி யாருக்கும் தெரியாது.. யாரும் இஷ்டத்துக்கும் வதந்தியை பரப்ப வேண்டாம், தோன்றுவதையெல்லாம் பேசாதீங்க.. என்னுடைய அப்பா , அம்மாவுக்கு இதில் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது, இதை இத்துடன் விட்டுருங்க, விட்டுருங்க..." என்று கவினின் காதலி சுபாஷினி நேற்றைய தினம் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.. இந்த வீடியோ குறித்து, வழக்கறிஞர் தமிழ்வேந்தன் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.
AramNaadu என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த வழக்கறிஞர் தமிழ்வேந்தன், "இது காதலுக்கான கொலை.. இது சாதிக்கான கொலை.. சாதிக்கான கொலையானது பரிணாமம் அடைந்து ஆணவ கொலையாகியிருக்கிறது.. இப்போது இதில் அரசியலும் சேர்ந்துவிட்டது..

சுர்ஜித், அவரது அப்பா சரவணகுமார் கைதாகி உள்ளார்.. அம்மா இன்னும் கைதாகவில்லை.. பாளையங்கோட்டை போலீசாரே அம்மாவை கைது செய்வதே நல்லது.. இந்த விவகாரத்தை இன்னும் இழுத்து கொண்டே செல்வது, மேலும் பூதாகரமாகி, சட்டம் ஒழுங்கு பிரச்சனை அதிகமாகிவிடும்.
அடிப்படை உணர்வுக்கே கொலையா?
ஒரு மனிதனுடைய அடிப்படை உணர்வுதான் காதல்.. இந்த அடிப்படை உணர்வுக்கே கொலை செய்வோம் என்பதை எப்படி ஏற்றுக் கொள்வது? இந்த கொலையை நியாயப்படுத்தி பேசுவது அதைவிட மோசமானது..
ஒரு பெண்ணை ஏமாற்றி குழந்தை உருவாக்கி, ஏமாற்றிவிட்டார், இதனால் குடும்ப கவுரவம் போய்விட்டது என்றால்கூட பரவாயில்லை.. கவின், ஒரு பெண்ணை உயிருக்குயிராக நேசித்துள்ளார், அவ்வளவுதான். இன்று கவின் இறந்துவிட்டார். அவரது குடும்பத்துக்கு வேறு வாரிசும் இல்லை.. உலகத்திலேயே பெரிய சோகம் புத்திர சோகம்..
கமலா ஹாரிஸுக்கு போஸ்டர்
தடகள வீரராக இருந்தாலும்சரி, என்ன படிச்சாலும் சரி, உன் ஜாதி என்ன? என்பதே இங்கு முக்கியமாக பார்க்கப்படுகிறது..
கமலா ஹாரிஸை அவரது ஊரே மறந்துவிட்டது, ஆனால், இன்றும் கமலா ஹாரிஸுக்கு இங்கு போஸ்டர் அடித்து ஒட்டுகிறார்கள்.. நம்ம தமிழ்நாட்டிலிருந்து சென்ற பெண் என்ற உணர்வில்தான் இதை செய்கிறார்கள்.. இதன் அடுத்த பரிணாமம்தான் ஜாதி, இனவெறி, மொழிவெறி இதெல்லாம்.
ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் எல்லா சாதியிலுமே உண்டு.. ஆனால், அதற்கான முன்னெடுப்பை எங்கிருந்து எடுப்பதென்று தெரியாமல் உள்ளனர்.. கலப்பு திருமணம் செய்தால் சாதி ஒழியும் என்று சொன்னால், அதையும் ஏற்கவே முடியவில்லை.. கலப்பு மணம் செய்தாலும், கடைசிவரை பெரும்பாலானோர், அவரவர் விஷயங்களை தொடர்ந்து கொண்டுதான் இருப்பர்..
உண்மையான காதல்
எனக்கும் கவினுக்குமான காதல், எங்களுக்குதான் தெரியும் என்கிறார் சுபாஷினி.. இந்த வாக்கியம் உண்மையென்றால், இந்நேரம் கவின் உயிரோடு இருந்திருக்கணும், அல்லது கோமாவிலாவது மருத்துவமனையில் இருந்திருக்கணும்.. ஆனால், கவின் என்ற நபரை மார்ச்சுவரியில் வைத்துவிட்டு, "எங்கள் காதல் உண்மை" என்றால், இதென்ன கதையா இருக்கே? யாரை ஹம்பக் செய்றீங்க? சுபாஷினி தெளிவுபடுத்தவில்லை, பெரிய குழப்பத்தை உண்டு பண்ணியிருக்கிறார்.. எல்லாரையும் குழப்பி விட்டுள்ளார்..
சுபாஷினி காதல்
முதல்நாள் சுபாஷினி பேசும்போது, கவினை காதலிக்கவேயில்லை என்றார்.. இதை அன்றே சொல்லியிருந்தால், கவின் இறந்திருக்க மாட்டார்.. தொடர்பே இல்லாமல் சென்றிருப்பார்.. 28ம்தேதிதான் வரச்சொன்னேன், ஆனால் 27ம் தேதியே கவின் வந்துவிட்டார் என்று சுபாஷினி இப்போது சொல்கிறார்..
28ம் தேதிகூட கவினை ஏன் வர சொல்லணும்? கவினின் தாத்தா தலையில் தையலை பிரித்ததாக சொல்கிறார்.. சித்தா மருத்துவமனையில் எப்படி தையல் போட முடியும்? இங்கிலீஷ் மருத்துவத்தில்தான் தையல் போடுவார்கள்..
தாத்தா தலையில் தையல்
தாத்தா தலையில் தையலை பிரித்ததாக சொல்கிறார்.. முதல்ல நர்ஸ் யாராக இருந்தாலும்சரி, தையலை பிரிக்கக்கூடாது.. டாக்டர்கள்தான் பிரிக்க வேண்டும்.. அதிலும் மண்டையில் உள்ள தையல்களை நர்ஸ்கள் தொடவே கூடாது.. இதெல்லாம் சுபாஷினி பேசியதில் முரண்பாடாகவே உள்ளது..
27ம் தேதியிலிருந்து இப்போதுவரை, இந்த வழக்கின் பயணம் வேறுமாதிரியாக திசை திருப்பப்பட்டு வருகிறது.. அந்த பெண்ணின் பெயர் சுபாஷினி என்பதே நேற்றுதான் வெளியே வருகிறது.. எப்படி அந்த பெண்ணின் பெயரை மறைக்க முடிகிறது? என்றெல்லாம் கேள்வி எழுப்பி உள்ளார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications