"பட்டினப்பிரவேசம்".. திராவிட மாடல்தான், ஆனா, திமுக இந்துக்களுக்கு எதிரானது இல்லை.. சேகர்பாபு ஒரே போடு
திராவிட மாடல் ஆட்சி குறித்து எச் ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி தந்துள்ளார்
சென்னை: அடிபணிவது என்பது திராவிட ஆட்சியிலும் இப்போது நடைபெற்று வருகின்ற திராவிட மாடல் ஆட்சியிலும் கிடையாது.. தருமபுரம் ஆதீனம் பட்டின பிரவேச விஷயத்தில் பழமையை அழிய விடக்கூடாது, தொன்றுதொட்டு நடைபெற்று வந்த ஒரு விஷயத்தை மாற்றக் கூடாது என்கின்ற அடிப்படையில் ஆதீனங்களின் வேண்டுகோளை ஏற்று முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார் என்று அமைச்சர் சேகர்பாபு விளக்கம் தந்துள்ளார்.
Recommended Video
திமுகவை தொடர்ந்து விமர்சித்து வருபவரில் மிக முக்கியமானவர் பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா ஆவார்.. குறிப்பாக திராவிட மாடல் என்ற திமுகவின் முழக்கத்தை, பலவகைகளில் விமர்சித்து வருகிறார்.
ஒவ்வொரு முறை செய்தியாளர்களிடம் பேசும்போதும், "திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது... மாணவர்கள் ஒழுக்கம் இல்லாமல் போனதற்கு திமுகவே காரணம்.

கருப்பு சட்டைக்காரர்கள்
அரசியல் நாகரிகம் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு இருக்கும் என்றால் குறிப்பிட்ட சமுதாயத்தினரை பற்றி பேசிய பள்ளி கல்வி துறை அமைச்சரை பதவியில் இருந்து நீக்க வேண்டும்.. கருப்பு சட்டைக்காரர்களின் திருமணம் கடந்த உறவே திராவிட மாடல்.. திருமணம் கடந்த உறவிற்கு பல கிளைகள், பல இடங்களில் கடைகள் வைத்து இருக்கிறார்கள். ஒழுக்கமாக இருப்பது நேஷனல் மாடல்" என்றெல்லாம் தெரிவித்து வருகிறார்.

தமிழில் அர்ச்சனை
இந்நிலையில், இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு, எச்.ராஜாவுக்கு சரியான பதிலடியை தந்துள்ளார்.. சென்னை வியாசர்பாடியில் அமைந்துள்ள இரவீஸ்வரர் கோவிலையும் அதன் அருகில் இருந்த தெப்பக்குளத்தையும் ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து சேகர்பாபு பேசியதாவது: தமிழகத்தில் உள்ள திருக்கோவிலில் விருப்பம் உள்ள திருக்கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்து கொள்ளலாம் என இந்து அறநிலை துறை சார்பாக அரசாணை பிறப்பிக்கப்பட்டு இருந்தது... அதனடிப்படையில் விருப்பமுள்ள திருக்கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்பட்டு வருகின்றன.

அடிபணியாது
அதனடிப்படையில் சட்டப்பேரவையில் கூட தமிழில் அர்ச்சனை செய்தால் இதற்கு முன்னதாக இருந்த பங்கு தொகையை விட 60 சதவீதம் கூடுதலாக தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.. இதனால் தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம். அடிபணிவது என்பது திராவிட ஆட்சியிலும் இப்போது நடைபெற்று வருகின்ற திராவிட மாடல் ஆட்சியிலும் கிடையாது.. ஒரு காலத்தில் இந்துக்களுக்கு எதிரான கட்சி தான் திமுக என்று சொல்லி வந்தனர்.

தருமபுரம் ஆதீனம்
அப்படி சொன்னால் அது மிகை ஆகாது, அனைத்து மதத்திற்கும் சமமான ஆட்சிதான் நமது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது.. அதன் அடிப்படையில்தான் தருமபுரம் ஆதீனம் பட்டின பிரவேச விஷயத்தில் வேண்டுகோள் விடுத்ததன் அடிப்படையில், அதற்கு ஈடு கொடுக்க வேண்டும் பழமையை அழிய விடக்கூடாது, தொன்றுதொட்டு நடைபெற்று வந்த ஒரு விஷயத்தை மாற்றக் கூடாது என்கின்ற அடிப்படையில் மற்றும் ஆதீனங்களின் வேண்டுகோளை ஏற்று முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கணக்கெடுப்பு
கருத்து சுதந்திரம் என்பது முக்கியமானது.. அதனை தமிழக முதலமைச்சர் வரவேற்கிறார்.. அது அவர்கள் விருப்பம்.. மகளிருக்கான உரிமைத் தொகை கூடிய விரைவில் வழங்கப்படும்.. அதற்கான கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.. சொல்வதையும் செய்யும் சொல்லாததையும் செய்வதுதான் இப்போது நடைபெற்று வருகிறது.. அதன் வகையில் தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்த எல்லா அறிவிப்புகளும் செயல்படுத்தப்படும்" என்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications