பாஜக ஒன்னும் "ராவணன்" கட்சி கிடையாது.. கொந்தளித்த சு.சாமி.. என்னாச்சு.. இதுதான் காரணம்!
பாஜக ஐடி விங் தலைவர் மீது சு.சாமி குற்றஞ்சாட்டி உள்ளார்
சென்னை: ஸ்டிரைட்டாக பாஜக ஐடி தலைவரையே போட்டு தாக்கி ட்வீட் பதிவிட்டுள்ளார் சுப்பிரமணிய சாமி.. அத்துடன், "காழ்ப்புணர்ச்சியுடன் எனக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் முயற்சி நடக்கிறது.. பாஜக ஒன்னும் ராவணன் கட்சியோ அல்லது துச்சாதனன் கட்சியோ கிடையாது.. இது கண்ணியமான கட்சி" என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.
பாஜகவில் இருந்தாலும், சேம் சைட் கோல் போட்டு கொண்டிருப்பவர் மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி... ஏதாவது பெரிய பொறுப்பு தனக்கு கிடைக்கும் என்று நீண்ட காலமாகவே எதிர்பார்த்து காத்திருந்தார்.
அதிலும் நிதியமைச்சர் பதவி மீது இவருக்கு ஒரு கண் இருக்கத்தான் செய்தது.. இப்போதும் இருக்கிறது.. அதனால், நிர்மலா சீதாராமன் உட்பட ஒருத்தரையுமே விட்டு வைக்காமல் சொந்த கட்சியையே விமர்சனம் செய்து வருவது இவரது ஸ்பெஷல்!

சு.சாமி
இப்போதும் அப்படித்தான் ஒரு ட்வீட் போட்டுள்ளார்.. இந்த ட்வீட் பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு குறித்து விமர்சித்து பதிவிட்டுள்ளார்... பொதுவாக, பாஜவுக்கு இந்த 2 முறை ஆட்சி காலத்தில் அதிகமாக கை கொடுப்பது ஐடி பிரிவுதான்.. கட்சியின் கொள்கைகள், செயல்பாடுகள், மோடியின் சாதனைகள், கடந்து வந்த வரலாறுகள் என இப்படி பலவிஷயங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்த்து வருவதில் ஐடி பிரிவுக்கு அதிக பங்கு உள்ளது.

அமித் மால்வியா
இதன் தலைவர் அமித் மால்வியா.. இவரது தலைமையின் கீழ் இயங்கும் பணியாளர்கள் தன்னை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளதாக சுப்பிரமணியன் சுவாமி பகீர் கிளப்பி உள்ளார்.. அந்த ட்வீட்டில், "பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு ரொம்ப மோசம்... அதன் உறுப்பினர்கள் சிலர் போலியான ஐடிக்களில் அக்கவுண்ட் தொடங்கி உள்ளனர்.. அதை வைத்து கொண்டு என் மீது தனிப்பட்ட தாக்குதலை தொடுத்து வருகின்றனர்.

பாஜக
என்னுடைய ஃபாலோயர்ஸ்கள் யாராவது இதற்கு கோபப்பட்டு பதிலடி தந்தால், அதுக்கெல்லாம் நான் பொறுப்பு கிடையாது.. பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு செய்யும் தவறுக்கு, கட்சி எப்படி பொறுப்பேற்காதோ, அது மாதிரிதான் இதுவும்" என்று பதிவிட்டுள்ளார். அதாவது, கிட்டத்தட்ட வார்னிங் போலவே இந்த பதிவு உள்ளது.. அதேசமயம், கட்சி தலைமையையும் ஒரு இடி இடிப்பதுபோல ஐடி பிரிவை குற்றஞ்சாட்டி உள்ளார்.

ஆதரவு
இந்த ட்வீட்தான் சோஷியல் மீடியாவில் பரபரப்பாக வைரலாகிறது.. இதற்கு பலரும் தங்கள் ஆதரவு, எதிர் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அதில் ஒருவர், "நீங்கள் விமர்சனங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டவர்... இது மாதிரி விஷயங்களை கண்டுக்க வேண்டாம்.. விட்டு தள்ளுங்க.. இதுக்கெல்லாம் முக்கியத்துவம் தந்து, உங்க டைம் வேஸ்ட் பண்ண வேண்டாம்" என்று சொல்லி உள்ளார்.

ராவணன் கட்சி
அதற்கு சு.சாமி பதிலளிக்கும்போது, "சரி, நான் கண்டுக்காம விட்டுடறேன்.. ஆனால் சம்பந்தப்பட்ட நபர் யார் யார் என கண்டறிந்து பாஜக அவர்களை களையெடுக்க வேண்டும்... இதுக்கு பின்னாடி மால்வியா என்ற நபரின் சூழ்ச்சி வேலைகள் இருக்கு.. காழ்ப்புணர்ச்சியுடன் எனக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். பாஜக ஒன்னும் ராவணன் கட்சியோ அல்லது துச்சாதனன் கட்சியோ கிடையாது.. இது கண்ணியமான கட்சி" என்று நீண்ட விளக்கத்தை காட்டமாக தெரிவித்துள்ளார்.

அதிர்ச்சி
இப்படி தேர்தல் வரும் சமயத்தில் சொந்த கட்சியையே சு.சாமி விமர்சித்துள்ளது பாஜக தரப்பை அதிர வைத்துள்ளது.. ஏதாவது பதவி தரும்வரை சு.சாமி இப்படித்தான் இருப்பாரோ என்ற பேச்சுக்களும் எழவே செய்கிறது.
-
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications