கோயிலை சீரமைக்க நிதி வசூல் ஒரு குற்றமா?.. கார்த்தி கோபிநாத் கைதுக்கு எதிராக வழக்கு.. சு.சாமி தடாலடி
சென்னை: ஒரு கோயிலை சீரமைக்க நிதி வசூல் செய்ததற்கு கார்த்திக் கோபிநாத்தை கைது செய்தது விதிமீறல் என்றும் இதற்காக போலீஸார் மீது நான் வழக்கு தொடுப்பேன் என்று பாஜக மூத்த நிர்வாகி சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் அனுமதி பெறாமல் பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் மதுரகாளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்த கோயிலில் சிலைகளை கடந்த ஆண்டு மர்ம நபர்கள் உடைத்ததாக எழுந்த புகாரால் பெரும் சர்ச்சை எழுந்தது. மாற்று மதத்தை சேர்ந்தவர்கள் சிலையை இடித்து தள்ளியதாக இந்து அமைப்பினர் புகார் தெரிவித்தனர்.

கார்த்தி கோபிநாத்
இந்த நிலையில் பாஜக ஆதரவாளரும் யூடியூபருமான கார்த்திக் கோபிநாத் சிறுவாச்சூர் கோயிலை புனரமைக்க போவதாக கூறி இணையம் மூலம் நிதி வசூல் செய்தார். இதுவரை அவர் ரூ 34 லட்சம் வசூல் செய்ததாகவும் அந்த தொகையை அவர் முறையாக பயன்படுத்தாமல் மோசடி செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

விசாரணை
இது தொடர்பாக ஆவடி போலீஸார் விசாரணை நடத்தி கார்த்திக் கோபிநாத்தை கைது செய்தனர். அவரிடம் இந்த மோசடி தொடர்பாக விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் கார்த்திக் கோபிநாத் கைதுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மூத்த நிர்வாகி எச் ராஜா, எஸ் ஆர் சேகர் உள்ளிட்டோர் கண்டன ட்வீட் போட்டுள்ளார்கள்.

அதிர்ச்சி
இந்த நிலையில் கார்த்திக் கோபிநாத் கைதை பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியும் கண்டித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் சென்னையை அடுத்த ஆவடி போலீஸாரால் விஸ்வ இந்து பரிசத் நிர்வாகி கார்த்திக் கோபிநாத் கைது செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.

கோயிலை புனரமைக்க
ஒரு கோயிலை புனரமைக்க நிதி வசூல் செய்துள்ளார். அது தவறா. கார்த்திக் கோபிநாத்தை கைது செய்தது அரசியலமைப்பு சட்டம் 25 ஐ மீறும் செயலாகும். இதனால் கார்த்திகை கைது செய்த போலீஸாருக்கு எதிராக வழக்கு தொடர்வேன் என சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஆதரவை கேட்டாரா
இந்த ட்வீட்டில் கார்த்திக் உங்களுடைய ஆதரவை கேட்டாரா, அவருக்காக நீங்கள் வாதாட போகிறீர்களா என சுப்பிரமணியன் சுவாமியிடம் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள். அதற்கு, அவர் எந்த ஆதரவையும் கேட்கவில்லை என்றார். மற்றொருவர், தமிழகத்தின் மீது நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். கார்த்திக் கோபிநாத்தை போன்ற நிறைய இளைஞர்கள் திமுக அரசால் துன்புறுத்தப்படுகிறார்கள்.

பாஜக எதையும் செய்யவில்லை
ஆனால் பாஜக எதையும் செய்வதில்லை. திமுகவை காட்டிலும் எதையாவது செய்ய வேண்டும் என தமிழக பாஜக முயற்சிக்கிறது. அவ்வளவுதான். அதை தாண்டி எதையும் செய்யவில்லை என்கிறார் இந்த வலைஞர். அவருக்கு சுப்பிரமணியன் சுவாமி பதிலளிக்கையில் கார்த்திக் கோபிநாத்திற்கு ஏற்கெனவே வழக்கறிஞர் இருந்தால், அவர்தான் இந்த கேஸை எடுத்து நடத்துங்கள் என என்னிடம் கூறினால் எடுத்து நடத்துவேன். ஏற்கெனவே தமிழக பாஜக அந்த பொறுப்பை எடுத்துக் கொண்டது. நான் எதையும் செய்ய முடியாது. எனவே பாதிக்கப்பட்ட நபரான கார்த்திக்தான் யார் வாதாட வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும் என்றார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications