சென்னை மக்களின் கவனத்துக்கு.. தாம்பரம் - சென்னை கடற்கரை இடையே மின்சார ரயில் சேவை நாளை ரத்து
சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தில் நடைமேம்பாலப் பணிகள் நடைபெறவுள்ளதால் தாம்பரம் - சென்னை கடற்கரை இடையேயான புறநகர் மின்சார ரயில் சேவை நாளை (ஜனவரி 5 ஆம் தேதி) காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சுற்றுலாப் பயணிகள், வெளிமாவட்ட மக்கள் என பயணிகளின் போக்குவரத்துக்கு பெரிதும் உதவியாக இருப்பது மின்சார ரயில் சேவை தான். தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த மின்சார ரயில் சேவையைப் பயன்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே தினமும் ஏராளமானோர் வியாபாரிகள், அலுவலகப் பணியாளர்கள், மாணவ, மாணவிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

ஒரு நாள் இந்த ரயில் சேவையில் பீக் நேரங்களில் சிறிது நேரம் பாதிப்பு ஏற்பட்டால் கூட மொத்த சென்னையே ஸ்தம்பித்து விடும் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு மின்சார ரயில் சேவையை இன்றியமையாததாக உள்ளது. கல்லூரிக்கு செல்பவர்கள், பணிக்கு செல்பவர்கள் என பலரும் மின்சார ரயில் சேவையை தான் நம்பியுள்ளனர்.
சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடம் மட்டுமின்றி பல்வேறு வழித்தடங்களில் குறிப்பிட்ட இடைவெளியில் மின்சார ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. மற்ற நாட்களை விட ஞாயிற்றுக்கிழமைகளில் பயணிகள் குறைவாகவே ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர். இதனால் ரயில் சேவைகளும் குறைவாக இயக்கப்படும்.
மின்சார ரயில் சேவையில் ஞாயிற்றுக்கிழமைகளில் தான் பராமரிப்பு பணிகளும் நடைபெறும். பயணிகள் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் விதமாக இந்த பராமரிப்பு பணிகள் வாரம் வாரம் மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில் தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் சென்னை கடற்கரை - தாம்பரம், தாம்பரம் - சென்னை கடற்கரை இடையே மின்சார ரயில் சேவை நாளை ரத்து செய்யபட்டுள்ளது.
தாம்பரம்- சென்னை கடற்கரை இடையேயான புறநகர் மின்சார ரயில் சேவை நாளை (ஜனவரி 5 ஆம் தேதி) காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் ரயில் நிலையத்தில் நடைமேம்பால பணிகள் நடைபெற உள்ளதால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த நேரத்தில் பல்லாவரம் - கடற்கரை, செங்கல்பட்டு - கூடுவாஞ்சேரி இடையே பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். அதேசமயம் காலை 7 மணி முதல் 11:00 மணி வரை சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டுக்கு மின்சார ரயில்கள் இரு திசைகளிலும் அட்டவணைப்படி இயக்கப்படும்.
பின்னர், மாலை 4 மணிக்குப் பிறகு வழக்கம் போல் மின்சார ரயில்கள் இயக்கப்படும். எனவே, புதுப்பிக்கப்பட்ட நேரத்தின்படி பயணிகள் தங்கள் பயணத்தைத் திட்டமிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications