கொருக்குப்பேட்டையில் கோளாறு கொடுத்த எக்ஸ்பிரஸ்! சென்னையில் புறநகர் ரயில் சேவை பாதிப்பு
சென்னை: சென்னை கொருக்குப்பேட்டையில் எக்ஸ்பிரஸ் ரயில், என்ஜின் பழுது காரணமாக இடையில் நின்றதால், புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டிருக்கிறது. எண்ணூரிலிருந்து சென்னைக்குள் வரும் ரயில்களும், சென்னை சென்ட்ரலிலிருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில் சேவையும் இதனால் பாதிக்கப்பட்டன.
ஏற்காடு-சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை வழக்கம்போல சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. பயணிகளை இறக்கிவிட்ட இந்த ரயில், எண்ணூரில் உள்ள யார்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது கொருக்குப்பேட்டையில் எக்ஸ்பிரஸ் ரயிலின் என்ஜின் திடீரென பழுதாகியது. இதனால், ரயில் பாதியிலேயே நின்றுவிட்டது. நீண்ட நேரமாக முயன்றும் ரயிலை அங்கிருந்து அப்புறப்படுத்த முடியவில்லை.

இதனால் கும்மிடிப்பூண்டியிலிருந்து எண்ணூர், திருவொற்றியூர் மார்க்கமாக சென்னை சென்ட்ரலுக்கு வரும் புறநகர் ரயில் பாதியிலிலேயே நிறுத்தப்பட்டன. மறுபுறம், சென்னை சென்ட்ரலிலிருந்து பேசின் பிரிட்ஜ், கொருக்குப்பேட்டை வழியாக திருவொற்றியூர், எண்ணூர், கும்மிடிப்பூண்டி வரை செல்லும் ரயில் சேவையும் பாதிக்கப்பட்டன. இதனையடுத்து கொருக்குப்பேட்டையில் பாதியில் நின்றிருக்கும் எக்ஸ்பிரஸ் ரயிலை அப்புறப்படுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன.
ரயில் சேவை பாதிப்பால் வேலைக்கு செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். சமீப காலமாக ரயில் சேவையில் சிக்கல்கள் பல எழுந்திருக்கிறது பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications