Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"B பிளான்".. வலையை "வடக்கே" வீசிய ஸ்டாலின்.. முளைத்த "முதல் விதை".. பிரதமர் வேட்பாளரா? திகைத்த பாஜக

நடக்க போகும் எம்பி தேர்தலில், மற்ற கட்சிகளையும்விட திமுக அதீத ஆர்வத்தை வெளிப்படுத்த துவங்கி விட்டது

Subscribe to Oneindia Tamil

சென்னை: விரைவில் எம்பி தேர்தல் துவங்க உள்ள நிலையில், திமுக முதல் நபராக களமிறங்கி உள்ளது.. அதற்கான முதல் விதையும் கோவை மண்ணில் தூவப்பட்டுள்ளது.. இது உடன்பிறப்புகளை மகிழ்ச்சியில் திளைக்க செய்தும் வருகிறது.

எம்பி தேர்தலுக்கு தேசிய கட்சிகள் தயாராகி வருகின்றன.. அந்த வகையில் தமிழகமும் களத்தில் குதித்துள்ளது.. கூட்டணி பேச்சுவார்த்தைகள், சீட் விவகாரங்கள் போன்றவை குறித்த மறைமுகமான பேச்சுக்கள் அரசல்புரசலாக நடந்து கொண்டிருக்கின்றன.

தமிழகத்தை பொறுத்தவரை, திமுக கூட்டணி மட்டும்தான், இப்போதைக்கு உறுதியாகவும், வலுவாகவும் உள்ளதாக தெரிகிறது.. கடந்த முறை கைகோர்த்த கூட்டணியே, இந்த முறையும் தொடரும் என்றே நம்பப்பட்டு வருகிறது..

 யாத்திரை ப்ளஸ்

யாத்திரை ப்ளஸ்

மற்றொருபுறம் தேசிய அரசியலும் முதல்வர் ஸ்டாலினின் கவனம் குவிந்து வருகிறது.. பாஜகவுக்கு எதிரான வலிமையான கூட்டணியை அமைப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.. பலம்பொருந்திய பாஜகவை எதிர்க்க வேண்டுமானால் திமுக போன்ற கட்சியின் தயவு தேவை என்பதை காங்கிரஸ் கட்சியும் நன்கு உணர்ந்துள்ள நிலையில், திமுக - காங்கிரஸ் கூட்டணி நெருங்கியே காணப்படுகிறது.. இரு கட்சிகளுக்குள்ளும் நல்ல புரிதலும் நிலவி வருகிறது.. அதனால்தான், ராகுல்காந்தி பாதயாத்திரை நேரில் வாழ்த்து என்பன போன்ற நடவடிக்கைகளில் ஸ்டாலின் நேடியாகவே ஸ்பாட்டுக்கு சென்று வாழ்த்து சொல்லிவிட்டு போனார்...

 PTI ஸ்டாலின்

PTI ஸ்டாலின்


ஆக, ஒருபக்கம் தேசிய அரசியலில் பாஜகவுக்கு எதிரான களத்தை அமைத்துக் கொண்டே மறுபுறம், தமிழகத்தில் வலுவான கூட்டணியையும் ஸ்டாலின் கட்டமைக்க துவங்கி உள்ளார்.. தேசிய அளவிலான பாஜகவுக்கு எதிரான கூட்டணியில், பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை ஏற்கனவே பலமுறை அறிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.. அதேபோல 2 மாதங்களுக்கு முன்பு பிடிஐ-க்கு முதல்வர் ஸ்டாலின் ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதில், "வருங்காலத்தில், நீங்கள் ஒரு தேசிய தலைவராக வருவதற்கான வாய்ப்புகளை எப்படி பார்க்கிறீர்கள்?" என்று கேள்வி எழுப்பப்பட்டது.

 ஞாபகம் வருதே

ஞாபகம் வருதே

அதற்கு ஸ்டாலின், "கலைஞர் ஒருமுறை சொன்னதையே, நான் உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன், "என் உயரத்தை நான் அறிவேன்".. அதுபோல, என்னுடைய பலம் என்ன? வரம்புகள் என்ன? என்று இரண்டுமே எனக்கு என்ன என்று தெரியும்.. தேசிய அளவில் சமூக நீதிக்கான முயற்சியை திமுக ஏற்கனவே எடுத்திருக்கிறது.. அதற்கான முயற்சிகளுக்கு பங்களித்தும் வருகிறது.. ராகுல் காந்தி வைக்கும் கருத்துக்கள் மிகவும் வலிமையான கருத்துக்கள். அவர் பல விவகாரங்களில் ஆழமான, தீர்க்கமான நிலைப்பாடுகளை கொண்டு இருக்கிறார். நிலைப்பாடு அவர் தனது கொள்கையில் உறுதியாக இருக்கிறார்.

 ஹோப் ராகுல்

ஹோப் ராகுல்

இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை பண்பை அவர் மதிக்கிறார். மத வேறுபாட்டை எதிர்க்கிறார். ஒரு மொழியை திணிப்பதை அவர் எதிர்க்கிறார். அவரின் இந்த கொள்கைகள் பாஜகவின் கொள்கைகளுக்கு எதிரானவை. பாஜகவை தேர்தலுக்காக மட்டும் ராகுல் காந்தி எதிர்க்கவில்லை. கொள்கை ரீதியாகவும் எதிர்க்கிறார். அதனால்தான் ராகுல் காந்தியை பாஜக எதிர்க்கிறது. ராகுல் காந்தியின் வலிமையை இது காட்டுகிறது" என்று மனதார புகழ்ந்திருந்ததை இங்கு சுட்டிக்காட்ட வேண்டி உள்ளது.

 முதல் மணி

முதல் மணி

அதேபோல, நம் ஒன் இந்தியா தமிழுக்கு திமுக எம்பி ஆ.ராசா ஒரு சிறப்பு பேட்டி தந்திருந்தார்.. அப்போது, "பிரதமரை தீர்மானிக்கும் தலைவராக மு.க.ஸ்டாலின் இருப்பார்" என்பதை அழுத்தமாகவே சொல்லியிருந்தார்.. இடைத்தேர்தல் முடிந்து, எம்பி தேர்தலை எதிர்நோக்க தொடங்கியுள்ளதுடன், இதற்கான, முதல்மணிதான் கோவையில் நேற்று முன்தினம் அடிக்கப்பட்டுள்ளதாகவே செந்தில்பாலாஜியின் பேச்சின்மூலம் அறிய முடிகிறது.. ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில் அதிமுக உள்ளிட்ட பல்வேறு மாற்று கட்சியினர் 10 ஆயிரம் பேர் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தனர்.

 வழிகாட்டி

வழிகாட்டி

குறிப்பாக, அதிமுக முன்னாள் மாஜி செல்வராஜ் அதிகாரப்பூர்வமாக தனது ஆதரவாளர்களுடன் நேற்று முன்தினம் திமுகவில் இணைந்தார். இதைவிட முக்கியமாக, மநீம உறுப்பினர்களும் திமுகவில் இணைந்திருக்கிறார்கள். அப்போது பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, "வரும் எம்பி தேர்தலில் 40க்கு 40 தொகுதிகளிலும் முதலமைச்சர் அறிவிக்கும் வேட்பாளர்கள் வெற்றி வாகை சூட அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். ஒட்டு மொத்த இந்தியாவிற்கு வழிகாட்டியாக திகழ்ந்து கொண்டிருக்கும் முதலமைச்சர், நாளை இந்திய தேசத்தை ஆளக்கூடிய பிரதமராக ஆட்சி பொறுப்பு ஏற்க உள்ளார்" என்று பேசியிருக்கிறார்..

 பக்க பலம்

பக்க பலம்

அதேபோல, முதல்வர் ஸ்டாலின் இந்த விழாவில் பேசும்போதும், எம்பி தேர்தலை மையப்படுத்தியே பேசியிருந்தார்.. கடந்த முறை நாடாளுமன்றத் தேர்தலில் ஒரே ஒரு இடத்தைத்தான் இழந்தோம்... ஆனால், வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் அந்த ஒரு இடத்தையும் இழக்கக்கூடாது. 40க்கு 40 கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். நாடும் நமதே, நாளையும் நமதே. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மதச்சார்பற்ற கூட்டணி வெற்றி மட்டுமல்ல இந்தியா முழுமையும் இருக்கக்கூடிய அனைத்து மாநிலங்களிலும் நாம் மிகப்பெரிய வெற்றியை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபடுவதற்கு பக்கபலமாக அமையும்" என்றார்..

 வேண்டா விருந்தாளி

வேண்டா விருந்தாளி

இதுதான், பாஜக தரப்பை கடுப்பாக்கி கொண்டிருக்கிறதாம்.. அதிமுக - பாஜக கூட்டணி உரசல் நாளுக்கு நாள் அதிகமாகி வரும்நிலையில், இந்த விரிசல் அதிகமாக வேண்டும் என்றே திமுக தரப்பு விரும்புவதாக தெரிகிறது.. அதற்கேற்றவாறு, அதிமுக - பாஜகவுக்குள் பூசல்களும் குறையாமல் உள்ளது.. இடைத்தேர்தல் சமயத்தில் தங்களை வேண்டாத விருந்தாளி போல எடப்பாடி டீம் நடத்தியதாக, தமிழக பாஜக கருதுகிறதாம்.. அதேபோல, "ஒருங்கிணைந்த அதிமுக" என்று சொன்னதுடன், ஜெயலலிதாவையே சீண்டும்விதமாக அண்ணாமலையின் பேச்சுக்களால் அதிமுக தரப்பும் கொதித்து காணப்படுகிறதாம்.

 ஆட்டம் ஆரம்பம்

ஆட்டம் ஆரம்பம்

இதனால் அதிமுக தொண்டர்களை சமாதானப்படுத்துவது கடினம் என்றும் சொல்கிறார்கள்.. இப்படியே இரு தரப்பிலும் உரசல்கள் தொடர்ந்தால், அதிமுகவுக்கு நிகரான "பி பிளான்" ஒன்றையும் பாஜக, கையில் எடுக்கவும் தயங்காது என்கிறார்கள்.. இவைகள் எல்லாமே திமுகவுக்கு சாதகமாகி வரும்சூழலில், 40-க்கும் குறிவைத்து, ஆட்டத்தை துவங்கி உள்ளதும், எம்பி தேர்தலுக்கான மும்முரத்தில் இறங்கிவிட்டதும், அத்துடன், "பிரதமர் வேட்பாளர்" என்ற கேட்டகிரிக்குள் கருணாநிதி மகன் ஸ்டாலின் நுழைந்துள்ளதும், தமிழக அரசியலில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+