"ச்ச்சே, நான் பட்ட பாடு இருக்கே".. மனோகரன் தண்ணிய நிப்பாட்டிட்டாராமே.. "ஹைலைட்டே" அதான்.. செம ஹேப்பி
மதுப்பழக்கத்தை நிறுத்தி ஒரு வருடம் ஆகிவிட்டதால், அதை போஸ்டர் அடித்து பூரித்துள்ளார் மனோகரன்
சென்னை: இணையத்தில் போஸ்டர் ஒன்று வைரலாகி கொண்டிருக்கிறது.. இதற்கு முன்பு இப்படி ஒரு போஸ்டரை தமிழகம் கண்டது இல்லை.. அனைவரையும் ஈர்த்து வரும் அந்த போஸ்டரை பார்த்த இணையவாசிகள், வலிய வந்து மனோகரனுக்கு வாழ்த்துக்களை சொல்லி கொண்டிருக்கிறார்கள்.. யார் இந்த மனோகரன்?
சமீபகாலமாகவே சோஷியல் மீடியாவில் பல்வேறு சம்பவங்களின் வீடியோக்கள் வலம் வருவது அதிகரித்துவிட்டது.. வினோதமான, அல்லது சுவாரஸ்யமான அல்லது இதயத்தை உலுக்கக்கூடிய அல்லது இதயத்தை உருக்கக்கூடிய பல நிகழ்வுகளின் காட்சிகளாக வலம் வரும்.
சில சமயம் அச்சடித்து ஒட்டப்படும் போஸ்டர்களும் இணையவாசிகளை அவ்வப்போது கவர்ந்துவிடக்கூடும்.. முக்கிய நிகழ்வுகளை மையப்படுத்தி, வித்தியாசமான போஸ்டர்கள், பேனர்கள் மக்களை கவரக்கூடும்.

ஹேப்பி மனோகரன்
அப்படித்தான் இந்த போஸ்டர் வைரலாகி வருகிறது.. செங்கல்பட்டு மாவட்டம், ஆத்தூரை அடுத்துள்ளது பக்தவத்சலம் என்ற நகர்.. இங்கு வசித்து வருபவர் மனோகரன்... 53 வயதாகிறது... கல்யாணம் ஆகி 4 மகன்கள் இருக்கிறார்கள்.. மனோகரன் அதே பகுதியில் இளநீர் வியாபாரம் செய்து வருகி்றார். 19 வயதாக இருக்கும்போதே மனோகரன் குடிக்க ஆரம்பித்துவிட்டாராம்.. எப்படி குடிப்பழக்கம் தனக்கு ஒட்டிக்கொண்டது என்று தெரியவில்லை, ஆனால், 32 வருஷமாகவே குடிக்கு அடிமையாகிவிட்டேன் என்கிறார்.. இந்த குடிப்பழக்கத்தை கைவிட வேண்டும் என்று ஒருநாள் திடீரென முடிவெடுத்தார் மனோகரன்..

சபதம் சக்சஸ்
இதற்காக கடினமான முயற்சி, மனக்கட்டுப்பாடுகளுடன் கையாண்டார்.. இப்போது ஒரு வருஷமாகிவிட்டதாம்.. தண்ணி அடிப்பதே கிடையாதாம். அதாவது கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26ம் தேதிதான், தண்ணி அடிக்கக்கூடாது என்று மனோகரன் சபதம் எடுத்த நாள் ஆகும்.. அன்றுமுதல், மதுவை கைவிட்டு ஒரு வருடமாகி உள்ள சூழலில், நேற்றுமுன்தினம் 26ம் ஒரு வருட கால சபதத்தை நிறைவேற்றிவிட்டார்.. 32 வருடமாகவே குடித்து வந்தவருக்கு இந்த ஒரு வருடம் குடிக்காமல் இருந்தது மிகப்பெரிய சாதனை செய்ததை போல உணர்ந்தார்.. பூரித்தும் போனார்.. இதை கொண்டாடவும் முடிவு செய்தார்..

உபயதாரர்
அதற்காக போஸ்டர் அடித்து ஊரெல்லாம் ஒட்டிவிட்டார் மனோகரன். போஸ்டரில் "மனோகரன் குடியை மறந்து முதலாம் ஆண்டு தினம்" என்றும் குறிப்பிட்டுள்ளார். மனோகரன் தண்ணியை நிப்பாட்டியது கூட மேட்டர் இல்லை, இதில் ஹைலைட் என்னவென்றால், ஒரு உபயதாரர் மூலம் இந்த போஸ்டரை மனோகரன் ஒட்டியிருப்பதுதான். இந்த குடிப்பழக்கத்தால், வீட்டிலும், வெளியிலும் நிறையவே அவமானப்பட்டுவிட்டாராம் மனோகரன்.. மானம், மரியாதை எல்லாமே போய்விட்டதாம்.. சொந்த வீட்டிலும் கூட ஒருத்தரும் மனோகரனை மதிப்பது கிடையாது..

அந்தநாள்
மதுவுக்கு அடிமையாகி இருந்ததும், அடிக்கடி வீட்டில் தகராறு செய்வதும் சம்பாதிக்கும் பணத்தை மது குடித்தே அழித்து வந்துள்ளார்.. அதாவது ஒரு நாளைக்கு தண்ணி அடிப்பதற்காகவே, 300 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை செலவு செய்துவிடுவாராம்.. மதுஅருந்த பணம் இல்லாத சூழல் நேரிட்டதுமே, வீட்டு மனையை கொண்டுபோய் விற்றுவிட்டாராம்.. அதனால்தான், யாருமே இவரை மதிக்காமல் போயுள்ளார்கள்.. அதற்கு பிறகுதான், மதுஅருந்தக்கூடாது என்று சபதம் போட்டாராம்.. இப்போது ஒரு வருடமாக மதுப்பழக்கத்தை கைவிட்டுள்ள நிலையில், ஊருக்குள்ள மனோகரனுக்கு கெத்து கூடிவிட்டதாம்.. உடல் நலமும் சீராக இருப்பதாக சொல்கிறார் மனோகரன்.. மனோகரன் டைரி ஒன்றை எடுத்து, தான் இறுதியாக குடித்த நாளை குறித்து வைத்துள்ளார்..

வேற லெவல ஐடியா
குடியை மறக்க படாதபாடு பட்டதாக சொல்கிறார்.. அடிக்கடி மது குடிக்கும் எண்ணம் வருமாம்.. உடனே ஒரு டீயை வாங்கி குடித்துவிடுவாராம்.. இல்லாவிட்டால், தனக்கு பிடித்த உணவை சாப்பிடுவது என "டைவர்ட்" செய்து விடுவாராம்.. தான் திருந்தியது போல் மற்றவர்களும் மதுப்பழக்கத்தில் இருந்து திருந்த வேண்டும் என்கிற நோக்கத்தில்தான், "குடியை மறந்து முதலாம் ஆண்டு தினம்" என போஸ்டர் அடித்து ஊர் முழுவதும் ஒட்டியதாக சொல்கிறார்.. இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருவதுடன், 2ம் ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்திருக்கும் மனோகரனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து கொண்டிருக்கின்றன..!!
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications