கிராம சபை கூட்டத்தில் உதயநிதி.. ஸ்டாலினுடன் சேர்ந்து பயணம்.. தீவிர அரசியலில் இறங்குகிறாரா?
கடந்த சில நாட்களாக திமுக தலைவர் ஸ்டாலின் நடத்தி வரும் கிராம் சபா கூட்டங்களில் உதயநிதி ஸ்டாலினும் பங்கேற்பது பெரிய வைரலாகி உள்ளது.
Recommended Video

சென்னை: கடந்த சில நாட்களாக திமுக தலைவர் ஸ்டாலின் நடத்தி வரும் கிராம சபை கூட்டங்களில் உதயநிதி ஸ்டாலினும் பங்கேற்பது பெரிய வைரலாகி உள்ளது. இது பல கேள்விகளையும் எழுப்பி இருக்கிறது.
லோக்சபா தேர்தலுக்காக மாநில கட்சிகள், தேசிய கட்சிகள் எல்லாம் தீவிரமாக தயாராகி வருகிறது. தமிழகத்தில் லோக்சபா தேர்தலுடன் சேர்த்து 21 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
இந்த நிலையில் தேர்தலை முன்னிட்டு திமுகவில் சமீப காலமாக உதயநிதி ஸ்டாலின் முன்னிறுத்தப்படுகிறாரா என்ற கேள்விகள் எழுந்து இருக்கிறது.

கூட்டம்
கடந்த ஒரு மாதமாக திமுக தலைவர் ஸ்டாலின் கிராம சபை கூட்டங்களை நடத்தி வருகிறார். திருவாரூர் மாவட்டத்தில் தொடங்கிய இந்த கூட்டம் வரிசையாக நிறைய ஊர்களில் நடந்தது. தினமும் ஒன்றில் இருந்து ஒன்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் சென்று ஸ்டாலின் பேசி வருகிறார்.

கலந்து கொள்ளவில்லை
பொதுவாக இந்த கூட்டங்களில் எல்லாம் ஸ்டாலின் மட்டுமே கலந்து கொண்டார். அந்தந்த மாவட்ட திமுக நிர்வாகிகளும் இதில் கலந்து கொண்டனர். அதேபோல் சில சமயங்களில் மட்டும் திமுக எம்எல்ஏக்கள், முன்னாள் எம்பிக்கள் கலந்து கொண்டனர். இது ஒன் மேன் ஷோவாக, ஸ்டாலின் மட்டும் முன்னின்று பேசும் நிகழ்ச்சி ஆகும்.

உதயநிதி கூட்டம்
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக திமுகவின் கிராம சபை கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலினும் கலந்து கொண்டு வருகிறார். ஏற்கனவே திண்டுக்கல்லில் நடந்த கூட்டத்தில் உதயநிதி கலந்து கொண்டார். அதன்பின் ஆண்டிபட்டியில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். கடந்த ஒரு வாரமாக அவர் இந்த பணியில்தான் இருக்கிறார்.

இப்போது
இந்த நிலையில் தற்போது அவர் தூத்துக்குடியில் நடக்கும் கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டு இருக்கிறார். ஸ்டாலினை தொடர்ந்து அவர் மக்களிடம் பேசினார். மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவர் அங்கு இருந்த பலரை சந்தித்து பேசினார்.

என்ன நடக்கிறது
இந்த நிலையில் திமுகவில் உதயநிதி முன்னிறுத்தப்படுகிறாரா என்ற கேள்வி எழுந்து இருக்கிறது. அதே சமயம் தென் மாவட்டங்களில் மட்டும் உதயநிதி பேசுவது அங்கு அவரை திமுக லோக்சபா தேர்தலில் நிற்க வைக்க போகிறதா என்ற சந்தேகத்தையும் எழுப்பி இருக்கிறது. இல்லை உதயநிதி ஸ்டாலினின் பிரபலத்தைப் பயன்படுத்துகிறதா என்றும் கேள்வி எழுந்துள்ளது.
-
சென்னை அதிர்ச்சி.. தமிழகத்தின் கஜானா காலிக்கு காரணம் இவரா? விஜய் வெளியிட்ட "வொயிட் பேப்பர்" ரகசியம் -
OG திமுக இதுதான்.. ரெண்டு பேருமே பெரிய தலக்கட்டாச்சே! மணி & கோவை தட்டித் தூக்கும் திமுக! பரபர கொங்கு -
சேலத்தில் பெரியார் சிலை அவமதிப்பு.. கீழ்த்தரமான செயல் என திமுக கண்டனம் -
ஆட்டம் போடாதீங்க! சிறுபான்மை மக்களும் நிரந்தரமாக குட்பை சொல்லிடுவாங்க.. திமுகவை எச்சரித்த காங்கிரஸ் -
தவெகவை முடக்க இதுமட்டும்தான் ஒரே வழி.. திமுக பிடித்த ரூட்.. ஸ்டாலின் கையில் பிரம்மாஸ்திரம் -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
உதயநிதி வட்டத்தை காலி செய்யும் விஜய்.. ரெடியான மெகா பிளான்.. முதல் தூண்டிலே திமிங்கலத்திற்கு! -
அண்ணா அறிவாலயத்தில் ஆட்டம் போட்ட மகளிரணி.. ரீல்ஸ் போடச் சொல்லும் ஸ்டாலின்! தவெகவைப் பார்த்து சூடு? -
திமுக செய்த சாதனை.. உண்மையை ஒப்புக்கொண்ட TVK.. அப்போ பெண்களுக்கான 'இந்த' திட்டம் வருமா? வரதா? -
தவெகவுக்கு முக்கியத்துவம்?.. மாங்குடியில் ப.சிதம்பரம் செய்த சம்பவம்..அதிருப்தியில் திமுக நிர்வாகிகள் -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
"24 மணி நேரத்தில் 12 பாலியல் வன்கொடுமைகள்".. முதல்வரிடம் உதயநிதி சரமாரி கேள்வி












Click it and Unblock the Notifications