அரசுப் பள்ளி டு ஸ்காட்லாந்த்! நானோ டெக்னாலஜியில் கலக்கும் தமிழர் சுதாகர் பிச்சை!
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளியில் படித்த ஒருவர் ஸ்காட்லாந்தில் மிகப் பெரிய ஆராய்ச்சியாளராக இருக்கிறார்.
தமிழ்நாடு அரசு அயலகத் தமிழர் தினம் என்று ஒரு விழாவை ஆண்டு தோன்றும் நடத்தி வருகிறது. அதில் தமிழ்நாட்டிலிருந்து உலக முழுக்க சென்று சாதித்து வரும் தமிழர்கள் அழைக்கப்பட்டு, கவுரவிக்கப்படுகின்றனர்.

இந்த ஆண்டுக்கான விழா சில தினங்கள் முன்னர் தான் நடந்து முடிந்துள்ளது. அதில் கலந்து கொண்ட சுதாகர் பிச்சைமுத்து முதல்வர் ஸ்டாலின் கைகளில் விருது பெற்றுள்ளார்.
நமக்குக் கூகுள் சுந்தர் பிச்சைதான் தெரியும். யார் இந்த சுதாகர் பிச்சைமுத்து?
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளி படித்தவர்தான் இவர். இப்போது ஸ்காட்லாந்தில் உள்ள Heriot watt university இணைப் பேராசிரியர் இருக்கிறார். உலகையே புரட்டிப் போட உள்ள ஒரு அதிநவீன தொழில்நுட்பம் பற்றி ஆய்வு செய்து வருகிறார். அவரது ஆராய்ச்சி என்ன? அரசுப் பள்ளி டு ஸ்காட்லாந்த் பயணம் எப்படி? இப்படிப் பல விசயங்களைக் கேட்டோம்.
"தமிழ்நாட்டில் ஒரு தவறான நம்பிக்கை உள்ளது. அரசுப் பள்ளிகளில் படித்தவர்களுக்கு வாய்ப்புகள் குறைவாக இருக்கும். அவர்களால் வெளிநாடுகளுக்கு எல்லாம் சென்று சாதிக்க முடியாது என்று பலர் நம்பிக் கொண்டுள்ளார்கள். அது தவறான நம்பிக்கை. நான் அரசுப் பள்ளியில்தான் படித்தேன். அதன்பிறகு எனது பெ.ஹெச்.டி யையும் இந்தியாவில்தான் முடித்தேன்.

அதன்பிறகு நிறையத் தேட ஆரம்பித்தேன். முதுமுனைவர் ஆய்வு செய்ய முடிவு செய்தேன். நானோ டெக்னாலஜியில் ஆற்றல் பயன்பாடு என்பதுதான் எனது இலட்சியமாக இருந்தது. ஆகவே தென் கொரியா சென்றேன். அங்குப் போனபிறகுதான் உணர்ந்தேன்.
பல நாடுகளில் அரசுப் பள்ளிகளில் படித்துவிட்டு வந்தவர்களைப் பார்த்தேன். அது எனக்கு நம்பிக்கை தருவதாக இருந்தது. நான் தமிழ்நாட்டில் இடஒதுக்கீட்டில் படித்தேன். அதைப்போலவே வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு வடிவங்களில் இடஒதுக்கீடு என்ற முறை உள்ளது. அதன்மூலம் பலர் வந்திருந்தார்கள். அதையும் பார்த்தேன். பிறகு அங்கிருந்து ஜப்பான் அரசு விருதுக்கு விண்ணப்பித்தேன்.
ஆகவே திறன், பயிற்சி, வாய்ப்பு ஆகியவை சரியாக இருந்தால் யாராலும் சாதிக்க முடியும். உலகம் முழுக்க நான் பல நாடுகளில் பெற்ற அனுபவம் என்னவென்றால், மிக எளிய பின்புலத்தில் உள்ளவன்தான் ஆராய்ச்சி நோக்கி வருகிறான். அதுதான் உண்மை" என்றவர் தனது ஆராய்ச்சி குறித்துப் பேசத் தொடங்கினார்.

"இதை நான் பெருமைக்குரிய ஒரு தருணமாகத்தான் பார்க்கிறேன். தமிழ்நாடு அரசு செய்த உதவிகளால் படித்து வெளிநாட்டுக்குச் சென்றவன் நான். இன்றைக்கு என்னை அழைத்து அரசு கவுரவித்திருக்கிறது.
Heriot watt university நான் நானோ டெக்னாலஜி துறை சம்பந்தமாக நான் பணியாற்றி வருகிறேன். குறிப்பாகக் கழிவுநீரிலிருந்து ஹைட்ரஜன் வாயுவைத் தயாரிப்பது என்பது தொடர்பாகத்தான் நான் ஆய்வு செய்துள்ளேன்.
அதிலும் குறிப்பாகப் பசுமை ஹைட்ரஜன் வாயுவைத் தயாரிப்பது எப்படி என்பது தொடர்பாக ஆய்வு செய்துள்ளேன். வழக்கமாக இப்போது நடைமுறையில் உள்ள கெமிக்கல் மெத்தடாலஜி மூலம் கெமிக்கல் ரீஃபார்மிங் செய்கிறார்கள். அதில் கார்பன் டை ஆகிசைட் கலப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆகவே அதற்கு மாற்றாக Electrolysis technology கொண்டுவந்தார்கள்.
ஹைட்ரஜனை தயாரிப்பதற்கு தூய நீர் தான் தேவையாகிறது. அதாவது H2O. இதை நீங்கள் இரண்டாக உடைத்தால் ஹைட்ரஜனாகவும் ஆக்சிஜனாகவும் பிரிக்க வேண்டும். இதனை Water Splitting என்று சொல்வோம்.

அந்த முறையில் பிரிக்க தூய நீர் தேவை. அதாவது நாம் குடிநீராகப் பயன்படுத்தும் நீரின் தரத்தைவிட அதிக தரம் தேவை. ஆனால், தூய நீர் முறை என்பது கஷ்டமாக உள்ளது.
ஆகவேதான் கழிவுநீர் மூலம் இதைச் செய்ய முடியுமா என்று நானோ டெக்னாலஜி மூலம் ஆய்வு செய்துள்ளேன். இந்த முறையில் பல சாதகமான அம்சங்கள் நமக்குக் கிடைக்கும் என்று ஆராய்ந்துள்ளேன். இன்றைக்கு பேட்டரிக்கு அடுத்தபடியாக ஹைட்ரஜன் தான். உலகமே அதை நோக்கித்தான் பயணித்துக்கொண்டுள்ளது.
ஒரு கிலோ கிராம் ஹைட்ரஜனை எரித்தால் கார்பன் டை ஆக்சைட் வெளியேறாது. அதே நீங்கள் ஒரு கிலோ கிராம் பெட்ரோலோ, டீசலோ, மண்ணெண்ணெய்யோ எரித்தால், கிட்டத்தட்ட 8 மடங்கு கார்பன் டை ஆக்சைட்டை அது வளிமண்டலத்தில் உமிழும்.
ஆகவேதான் பெரும்பாலான நாடுகள் ஹைட்ரஜனை நோக்கிச் செல்கிறார்கள். பருவநிலை மாற்றத்தைச் சமாளிப்பதற்கான மாற்றாக ஹைட்ரஜனை கையில் எடுத்துள்ளார்கள். அதிலும் பசுமை ஹைட்ரஜன். ஹைட்ரஜனை நாம் உற்பத்தி செய்ய வேண்டும்.
ஆனால், அதன் மூலம் நமக்கு கார்பன் டைக் ஆக்சட் என்ற நச்சு வெளியேறக் கூடாது. அதுதான் நமது கான்செப்ட்.

இன்றைக்கு உலகமே தண்ணீர் பிரச்சினையைச் சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது. அப்படியான நிலையில் நன்னீர் மூலம் இந்த ஹைட்ரஜன் தயாரிப்பு தேவையைப் பூர்த்தி செய்ய முடியாது. கூடுதலான குடிநீர் பிரச்சினையை இது உருவாக்கலாம்.
அதை உணர்ந்ததால்தான் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் மூலம் ஹைட்ரஜன் தயாரிப்பதற்கான ஆய்வு தேவையாக இருந்தது. அதைத்தான் நான் செய்துவருகிறேன்.
நான் ஸ்காட்லாந்தில் இருக்கிறேன். அங்கே மிகப்பெரிய வருமானமே விஸ்கி தயாரிப்பு மூலமே கிடைக்கிறது. அங்கே அதிகப்படியான கழுவுநீரை வெளியேற்றும் விஸ்கி தொழிற்சாலைகள்தான் உள்ளன. பல பில்லியன் அளவுக்கான தண்ணீரை நாங்கள் இதற்குப் பயன்படுத்தினால், அதன்மூலம் மிகப்பெரிய பயன் கிடைக்கும்.
சுழற்சி பொருளாதார அடிப்படையில் கழுவுநீரைச் சுத்தப்படுத்தியதைப் போன்று ஆகும். அதேநேரத்தில் ஹைட்ரஜன் தயாரிப்பதற்கும் அது பயன்படும். எனவே இது டு இன் ஒன்று இலாபம் தரும் ஆராய்ச்சி.
இன்னும் இரண்டு ஆண்டுகளில் தொழிற்சாலைகளில் இந்தத் திட்டத்தை அறிமுகம் செய்து விடுவோம். அதற்கான ஆராய்ச்சி தற்போது முடியும் தறுவாயில் உள்ளது" என்கிறார் இந்தப் பச்சைத் தமிழர்.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications