சர்க்கரை அட்டைதாரர்களுக்கு குட்நியூஸ்... ரேஷன் கடைகளில் கைரேகைக்கு பதில் இனி முக அங்கீகாரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கே குட்நியூஸ் சொல்லி உள்ளார் உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன்.. ரேஷன் கடைகளில் கைரேகை விழவில்லையே என்று இனி யாருமே புலம்ப வேண்டிய அவசியமே இருக்காது.. இனி ரேஷன் கடைகளில் பொருள்கள் வாங்க கடை வாசலில் மணி கணக்கில் காத்து கிடக்க வேண்டிய அவசியமே இருக்காது.. தமிழக அரசு திடீர்னு எடுத்துள்ள இந்த சூப்பர் பிளான் என்ன தெரியுமா? அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்.

தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரேஷன் பொருட்களின் தரத்தை உயர்த்தவும், அவைகளிலுள்ள முறைகேடுகளை தடுக்கவும் உணவு வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன், ஏராளமான அதிரடி நடவடிக்கைகளை கையிலெடுத்துள்ளார்.

Ration Cardholders tn ration card Face Authentication Fair Price Shop Food Department

இதன் தொடர்ச்சியாக, சென்னையில் சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் வெங்கடரமணன், "இன்னும் ஒரு மாதத்திற்குள் ரேஷன் கடைகளில் தரமான அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தடையின்றி ரேஷன்தாரர்களுக்கு கிடைப்பது உறுதி செய்யப்படும். ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு விரைவாக புதிய கார்டுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

முக அடையாள ஸ்கேன்

அதேபோல ரேஷன் பொருட்களை பெறுவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களையும் உடனடியாக நீக வேண்டியுள்ளது.. இதற்காக "பேஷியல் ரெககனைசேஷன்" எனப்படும் முக அங்கீகாரம் (Facial Recognition) டெக்னாலஜியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

பயோமெட்ரிக் முறையில் ஏற்படும் தடங்கல்களைத் தவிர்க்கவும், முறைகேடுகளை முற்றிலுமாக ஒழிக்கவும் இந்த தொழில்நுட்பம் உதவும். இதுகுறித்து முதலமைச்சர் விஜய்யிடம் கலந்தாலோசித்து, அதற்கான தொழில்நுட்ப தரவுகளை ஆய்வு செய்த பிறகு விரைவில் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படும்" என்று உறுதியளித்திருந்தார்.

கிருஷ்ணகிரி - ரேஷன் கார்டு

இந்நிலையில், கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களைச் சந்தித்த உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ப. வெங்கடரமணன், பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகள் குறித்து, சில தகவல்களை மீண்டும் வெளியிட்டார்.

"மாநிலம் முழுவதும் இதுவரை சுமார் 20,000 புதிய ரேஷன் கார்டுகள் வெற்றிகரமாக விநியோகிக்கப்பட்டுள்ளது.. இனி புதிதாக விண்ணப்பிப்பவர்கள் அலைந்து திரிய தேவையில்லை. அவர்களின் புதிய அட்டைகள் நேரடியாக தபால் மூலமாகவே வீடுகளுக்கு வந்து சேரும் ..

கண் விழி ஸ்கேன்

ரேஷன் கார்டிலுள்ள அனைத்து உறுப்பினர்களின் விரல்ரேகையைப் பதிவு செய்யும் பணி தற்போது 97 சதவீதம் வரை நிறைவடைந்துள்ளது. இதில் முதியவர்கள் மற்றும் உழைக்கும் மக்களில் பலருக்கு கைரேகை சரியாகப் பதிவாகாத நிலை நீடிக்கிறது. இதற்காக முதற்கட்டமாக "கண் விழி ஸ்கேன்" (Iris scanning) செய்யும் முறை பயன்பாட்டில் உள்ளது.. அதேபோல "முக அடையாள ஸ்கேன்" (Face Scanning) முறையைக் கொண்டுவர நடவடிக்கைகள் முழுவீச்சில் நடந்து வருகிறது" என்று மீண்டும் உறுதி தந்துள்ளார்.

அமைச்சரின் இந்த நம்பிக்கை பேச்சு குடும்ப அட்டைதாரர்களுக்கு நிம்மதியை தந்து வருகிறது.. அப்படியானால், இனி கைரேகை தேய தேவையில்லை, கண் விழியைத் தேடத் தேவையில்லை, கேமரா முன்னாடி நின்றாலே போதும் என்ற நிலை விரைவில் வரவுள்ளது போலும். ரேஷன் விநியோகத்தை மேலும் எளிமையாக்கும் இந்த நவீன மாற்றம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பலத்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

பேஷியல் ரெககனைசேஷன் என்பது என்ன?

அமைச்சர் வெங்கடரமணன் சொல்லும் முக அடையாள ஸ்கேன் என்றால் என்ன? இதை எப்படி ரேஷன் கடைகளில் பயன்படுத்துவார்கள்? என்பதையும் பொதுமக்கள் தெரிந்து கொள்வது அவசியமாகும்.

இந்த "முக அங்கீகாரம்" தொழில் நுட்பம்தான், ரேஷன் கடைகளில் இப்போதுள்ள பயோமெட்ரிக் முறைக்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது. வயது முதிர்வு அல்லது கடின உழைப்பு காரணமாக பலருக்கு கைரேகை சரியாக பதிவாகாமல் போக வாய்ப்புள்ளது.. இதனால் பொருட்கள் வாங்குவதிலும் தாமதமும் சிரமமும் ஏற்படுகிறது..

ஆனால், இந்த முக அடையாள ஸ்கேன்படி, ரேஷன் கடைகளில் உள்ள கேமரா மூலம் பயனாளியின் முகத்தை ஸ்கேன் செய்தே அவரது விவரங்கள் துல்லியமாக உறுதி செய்யப்பட்டு பொருட்கள் வழங்கப்படும்... ஸ்மார்ட்போன்களில் முகத்தை காட்டி லாக் திறப்பதை போலவே, இந்த எளிய தொழில்நுட்பம், போலி கார்டுதாரர்கள் ரேஷன் பொருட்களை பெறுவதை தடுத்து முறைகேடுகளை ஒழிப்பதுடன், கைரேகை தடையின்றி பொதுமக்கள் மிக விரைவாகவும் பாதுகாப்பாகவும் பொருட்களைப் பெற்றுச் செல்ல வழிவகுக்கும்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+