சர்க்கரை விலை இன்னும் ஏறுமா?இறக்குமதி வரி முதல் எத்தனால் வரை.. புட்டு புட்டு வைத்த அசோக் குலாட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சர்க்கரை விலை மார்க்கெட்டில் தாறுமாறாக உயர்ந்து வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தி. கொண்டிருக்கிறது.. பண்டிகை காலம் கிட்ட நெருங்கி வரும் நேரத்தில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் விலை உயர்வு குறித்து பிரபல வேளாண் பொருளாதார நிபுணர் அசோக் குலாட்டி, இந்தியா டுடேவுக்கு அளித்த பேட்டியில் முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளார். அது பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்..!!

அசோக் குலாட்டி தன்னுடைய பேட்டியில், "நாட்டின் சர்க்கரை உற்பத்தி குறைந்துள்ளது.. அதே நேரத்தில் ஸ்டாக்கிலும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.. மேலும் எத்தனால் தயாரிப்புக்காக கரும்பு திருப்பிவிடப்பட்டதும் சர்க்கரை விலை உயர்வுக்கு அழுத்தம் கொடுத்துள்ளது.

Sugar Price Rise Sugar Price India Ashok Gulati Sugar Import Duty Ethanol Impact

சர்க்கரை விலை உயர்வு

நாட்டில் சர்க்கரை உற்பத்தி சுமார் 10 சதவீதம் வரை சரிந்துள்ளது.. கடந்த காலங்களில் 8 மில்லியன் டன்னாக இருந்த தொடக்க கையிருப்பு இப்போது 5 மில்லியன் டன்னாக குறைந்து விட்டது.. இதனால் சர்க்கரை விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.. உற்பத்தி குறைந்துள்ள நிலையில், கரும்பின் ஒரு பகுதி எத்தனால் தயாரிப்புக்கு திருப்பிவிடப்பட்டிருப்பது பிரச்சனையை மேலும் அதிகமாக்கி விட்டது.

இறக்குமதி வரியும் பிரச்சனை

இதுபோன்ற சூழ்நிலை வரப்போகிறது என்பதை முன்கூட்டியே கணித்து, அதற்கேற்ற நடவடிக்கைகளை அரசு எடுத்திருக்க வேண்டும்.. பல மாதங்களுக்கு முன்னாடியே வெளிநாடுகளில் இருந்து சர்க்கரையை இறக்குமதி செய்ய அரசு அனுமதி கொடுத்திருக்க வேண்டும்.. ஆனால், அப்படி எதுவுமே நடக்கவில்லை..

அதுமட்டுமல்ல.. சர்க்கரைக்கு விதிக்கப்பட்டுள்ள 100 சதவீத இறக்குமதி வரியும் பிரச்சனையாக உள்ளது.. சர்க்கரை பற்றாக்குறை ஏற்பட்டபோது வெளிநாடுகளில் இருந்து சர்க்கரையை கொண்டுவருவதற்கு இந்த அதிகப்படியான வரி தடையாக இருந்தது.

அரசின் ஓவர் தலையீடு

விவசாய துறையில் சர்க்கரைத் துறை மட்டும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.. கரும்புக்கு என்ன விலை நிர்ணயிக்க வேண்டும்? சர்க்கரைக்கு என்ன விலை இருக்க வேண்டும்? சர்க்கரை ஆலைகள் சந்தையில் எவ்வளவு சர்க்கரையை வெளியிட வேண்டும்? இப்படி பல விஷயங்களிலும் அரசு தலையிடுகிறது...

உலகில் வேறு எந்த நாட்டிலும் இதுபோன்ற கட்டுப்பாட்டு முறை இல்லை.. அதனால் சர்க்கரை துறையில் தாராளமயமாக்கல் நடவடிக்கைகள் கொண்டு வரப்பட வேண்டும்.. அரசு தன்னுடைய கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும்.

விலை இன்னும் உயரும்

காரணங்கள் இப்படி நிறைய சொன்னாலும், பண்டிகை காலம் நெருங்கி விட்டது.. இந்த நேரத்தில் சர்க்கரைக்கான தேவை வழக்கத்தைவிட அதிகரிக்கவே செய்யும்.. ஏற்கனவே ஸ்டாக் குறைவாக இருக்கும் நிலையில், இறக்குமதியும் தாமதமானால் சர்க்கரை விலை இன்னும் உயரக்கூடும்" என்றெல்லாம் அசோக் குலாட்டி அந்தப் பேட்டியில் அலர்ட் செய்துள்ளார்.

ஒருவேளை இப்போது சர்க்கரை இறக்குமதி செய்யப்பட்டாலும், அந்த சர்க்கரை உடனடியாக சந்தைக்கு வந்து சேர்ந்துவிடாது.. அதற்கும் சில காலம் ஆகுமாம். எனவே, வரும் நாட்களில் சர்க்கரை விலை எந்த அளவுக்கு செல்லும் என்பது பொதுமக்களுக்கும், சர்க்கரை சந்தைக்கும் கலக்கத்தை, டென்ஷனை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+