வெறும் ரூ.5000 செலுத்தினால்.. ரூ.25 லட்சம்.. செல்வமகள் சேமிப்பில் பிரம்மிக்க வைத்த தமிழகம்!
சென்னை: பெண் குழந்தைகளின் நலனுக்காக கொண்டு வரப்பட்ட செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின்கீழ், அதிக கணக்குகள் தொடங்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.இந்த திட்டத்தின் நன்மைகள் குறித்து இப்போது பார்ப்போம்.
இதுகுறித்து, அஞ்சல்துறை அதிகாரிகள் கூறும் போது, செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் இதுவரை 38.38 லட்சம் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின்கீழ், அதிக கணக்குகள் தொடங்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது.

செல்வமகள் சேமிப்புத் திட்டம் என்பது பிறந்த குழந்தை முதல் 10 வயதுக்குள் உள்ள பெண் குழந்தைகளுக்காக தொடங்கப்பட்ட சிறப்பு சேமிப்பு திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் மாதம்தோறும் ரூ.100 என்ற குறைந்த தொகையைகூட சேமிக்க முடியும் என்றார்கள்.
சரி செல்வமகள் சேமிப்பு திட்டத்தை கொஞ்சம் விரிவாக பார்ப்போம் : சுகன்யா சம்ரிதி யோஜனா என்ற பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கு ஆண்டுக்கு 7.6 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. பாதுகாப்பான முதலீடு மற்றும் சிறந்த சேமிப்பு திட்டம் என்பதாலும் பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணம் ஆகிய முக்கிய செலவுக்காகவும் பெற்றோர்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.
செல்வ மகள் திட்டத்தில் கணக்கைத் துவங்க தேவையான ஆவணங்கள்? 1. செல்வ மகள் திட்டம் கணக்கைத் துவங்குவதற்கான விண்ணப்பப் படிவம். 2. பெண் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் 3. பெற்றோர் அல்லது காப்பாளரின் அடையாள சான்றிதழ். இது பான் கார்டு, கூட்டுறவு அட்டை, ஓட்டுநர் உரிமம் அல்லது பாஸ்போர்ட் என ஏதுவாக வேண்டும் என்றாலும் இருக்கலாம். 4. பெற்றோர் அல்லது காப்பாளரின் முகவரி சான்றிதழ். இது கூட்டுறவு அட்டை, பாஸ்போர்ட், மின்சார கட்டண ரசீது, தொலைப்பேசி கட்டண ரசீது என ஏதுவாக வேண்டும் என்றாலும் இருக்கலாம்.
வருடத்திற்கு குறைந்தபட்சம் ரூ.1,000 முதல் அதிகபட்சம் வருடத்திற்கு ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்ய இயலும். ஏதேனும் அதிகப்படியான தொகையை டெபாசிட் செய்யும் தொகைக்கு வட்டி மற்றும் லாபம் ஏதும் இல்லை. கூடுதலாக டெபாசிட் செய்த தொகையை எப்போது வேண்டும் என்றாலும் திரும்பப்பெறலாம்.

மாதம் 2500 முதலீடு செய்தால் 12.68 லட்சம் ரூபாய்க்கு மேல் முதிர்வு தொகையாக கிடைக்கும். வெறும் ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால் கூட 5லட்சம் ரூபாய்க்கு மேல் முதிர்வு தொகையாக கிடைக்கும்.
நீங்கள் மாதம் 5 ஆயிரம் ரூபாய் உங்கள் மகளுக்கு செலுத்த முடியும் அல்லது ஆண்டுக்கு 60000 ரூபாய் செலுத்த முடியும் என்றால், 21 வருடம் முடிவில் 25 லட்சம் ரூபாய்க்கு மேல் கிடைக்கும். அரசு வழங்கும் எல்லா சேமிப்பு திட்டங்களையும் விட இதில் தான் வட்டி அதிகமாகும்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications