சுக்கிரன் பெயர்ச்சி 2023: மீனத்தில் உச்சம் பெறும் சுக்கிரன்..மாளவியா யோகம் பெறும் 4 ராசிக்காரர்கள்
மீன ராசியில் உச்சம் பெற்று பயணம் செய்யப்போகும் சுக்கிர பகவானால் 4 ராசிக்காரர்களுக்கு மாளவியா யோகமும் 3 ராசிக்காரார்களுக்கு விபரீத ராஜயோகமும் கிடைக்கப்போகிறது.
சென்னை: மனிதர்களுக்கு சுகமும் சந்தோஷமும் தரக்கூடிய சுக்கிர பகவான் மீனம் ராசியில் உச்சம் பெற்று பயணம் செய்யப்போகிறார். இன்று முதல் உச்சம் பெற்று சஞ்சரிக்கும் சுக்கிர பகவான் சிலருக்கு மாளவியா யோகத்தையும் சிலருக்கு விபரீத ராஜயோகத்தையும் தரப்போகிறார். திடீர் பணவரவும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார் என்று பார்க்கலாம்.
மாளவியா யோகம் மகத்தானது. சுக்கிரன் ஒருவரின் ஜாதகத்தில் ரிஷபம் அல்லது துலாமில் ஆட்சியோ, மீனம் ராசியில் உச்சமோ பெற்றிருந்து அது கேந்திர ஸ்தான வீடுகளான 1,4,7,10 ஆம் இடமாக அமையப்பெற்றால் அந்த ஜாதகருக்கு மாளவியா யோகம் அமையும். இந்த மாளவியா யோகம் அமைந்த ஜாதகர்களுக்கு மண வாழ்க்கை அற்புதமாக இருக்கும், கணவன் மனைவி எப்போதுமே காதல் வாழ்க்கை வாழ்வாங்க, அவங்களுடைய நெருக்கம் அலாதியானது. எப்பவுமே சந்தோஷமாக இருப்பாங்க. குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் இருக்கும். வீடே லட்சுமி கடாட்சமாக இருக்கும். கோச்சார ரீதியாக சுக்கிரன் கேந்திர ஸ்தானங்களில் ஆட்சி பெற்று அமரும் போதும் இந்த சந்தோஷ சம்பவங்கள் நடைபெறும்.

சுக்கிரன் சுகபோகங்களின் அதிபதி. சந்தோஷங்களையும் சுகங்களையும் தரக்கூடியவர். இவர் ஆட்சி உச்சம் பெற்றிருக்கும் போது கொடுக்கும் பலன்கள் அலாதியானது. சில ஜாதகங்களில் நீசம் பெற்றிருந்தாலும் நீசபங்க ராஜயோக நிலையை பெறும் போது நல்ல பலன்களை தருவார். கடந்த ஒரு மாத காலமாக கும்பம் ராசியில் சுக்கிரன் பயணம் செய்தார். இன்று முதல் மீன ராசியில் உச்சம் பெற்று பயணம் செய்யப்போகிறார். இந்த சுக்கிர பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகத்தையும், சிலருக்கு மாளவியா யோகத்தையும் தரப்போகிறார்.
சுக்கிரனின் சொந்த ராசிகளான ரிஷபம், துலாம் ராசிகளில் ஆட்சி நிலையில் இருந்தாலும், பகை கொண்ட கிரகமான குரு, ஆட்சி செய்யும் தனுசு ராசியில் நட்பாகவும் மீனத்தில் உச்சமாகவும் இருக்கிறார். எதிரியின் வீட்டில் உச்சம் அடையும் ஒரே கிரகம் சுக்கிரன்தான். சுக்கிரன், தான் நின்ற ராசியில் இருந்து 7 ம் பார்வையாக கன்னி ராசியைப் பார்ப்பார்.
சுக்கிரன் அசுர குரு. யோகத்தையும் சுகத்தையும் தருவார் சுக்கிரன். அறுசுவை உணவை சுவைக்க வைப்பார். சொசுகு வாழ்க்கை வாழ வைப்பவர் அவர்தான். மாடி வீடு மெத்தை சுகம், கணவன் மனைவி சந்தோஷத்தையும் தரக்கூடியவர் அவரே. சுக்கிரன் ஒருவரின் ஜாதகத்தில் பலமாக இருந்தால் போதும் அவருக்கு சந்தோஷங்கள் அபரிமிதமாக இருக்கும். சுக்கிரன் பாதிக்கப்பட்டிருந்தால் மறைமுகமான நோய்களை தருவார். சிலருக்கு பாலியல் தொடர்பான நோய்களும் ஏற்படும். கணவன் மனைவி உறவும் பாதிக்கப்படும்.
பொதுவாக மாளவியா யோகம் என்பது மேஷ லக்கினத்திற்கு 7ம் இடத்தில் துலாம் ராசியில் ஆட்சி பெற்று இருக்கும் பொழுது, ரிஷப லக்கினத்திற்கும், மிதுன லக்கினத்தில் 10ல் உச்சம் பெற்றும், கடத்திற்கு 4ல் ஆட்சி பெற்றும், சிம்மத்திற்கு 10, கன்னிக்கு 7லும் துலாம் லக்கினத்திலும், விருச்சிக லக்கினத்திற்கு 7ம் இடத்தில் இருந்தால், தனுசுக்கு 4ம் இடத்தில் இருந்தால், மகரத்திற்கு 10ம் இடத்திலிருந்தால், கும்பத்திற்கு 4 இடத்தில் இருந்தால், மீனத்திற்கு லக்கினத்திலும் அமைகின்ற பொழுது மாளவிகா யோகம் ஏற்படும்.
மேஷ ராசிக்காரர்களே விரைய ஸ்தானமான 12வது வீட்டில் சுக்கிரன் உச்சம் பெற்று பயணம் செய்வதால் விபரீத ராஜ யோகம் தேடி வரப்போகிறது. கை நிறைய பணமும் குபேர யோகம் தேடி வரும். அதிர்ஷ்ட தேவதை நேரடி பார்வை உங்களுக்கு கிடைக்கப்போகிறது. சிம்ம ராசிக்காரர்களே
மிதுன ராசிக்காரர்களே சுக்கிரன் பத்தாம் வீட்டில் பயணம் செய்வதால் மாளவியா யோகம் கிடைக்கப்போகிறது. சமூகத்தில் மதிப்பு, அந்தஸ்து உயரும். உங்களுக்கு பண வருமானம் அதிகரிக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும். பெண்களுக்கு ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும்.
சிம்ம ராசிக்காரர்களுக்கு எட்டாவது வீட்டில் சுக்கிரன் உச்சம் பெற்று பயணம் செய்வதால் விபரீத ராஜ யோகம் கிடைக்கப்போகிறது. எப்போதோ கொடுத்த பணம் கைக்கு கிடைக்கும். திடீர் பண வரவு வந்து திக்குமுக்காட வைக்கும். சுகமும் சந்தோஷமும் அதிகரிக்கும்.
கன்னி ராசிக்கு 7வது வீட்டில் சுக்கிரபகவான் உச்சம் பெற்று பயணம் செய்யப்போகிறார். கேந்திராதிபத்திய தோஷம் என்றாலும் கவலை வேண்டாம் குரு உடன் இணைந்து பயணம் செய்கிறார். குரு பகவானின் பார்வையும் உச்சம் பெற்ற சுக்கிரனின் நேரடி பார்வையும் உங்கள் ராசிக்கு கிடைக்கப்போகிறது.
துலாம் ராசிக்காரர்களுக்கு 6வது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்கிறார். ஆறுக்கு உடைய இடத்தில் உச்சம் பெற்ற நிலையில் சுக்கிரன் பயணம் செய்வதால் உங்களுக்கு விபரீத ராஜயோகம் தேடி வரப்போகிறது. பல வழிகளில் பண வரவு வந்து திக்குமுக்காட வைக்கும்.
தனுசு ராசிக்காரர்களுக்கு 4வது வீட்டில் சுக்கிரன் உச்சம் பெற்று பயணம் செய்வதால் உங்களுக்கு மாளவியா யோகம் கைகூடி வரப்போகிறது. பெண்களுக்கு ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை கூடும். செய்யும் செயல்களில் திறமை வெளிப்படும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.
மீன ராசிக்காரர்களே உங்க ஜென்ம ராசியில் சுக்கிரன் உச்சம் பெற்று பயணம் செய்யப்போவதால் மாளவியா யோகம் தேடி வரப்போகிறது. பிரிந்து சென்ற உறவுகள் இணையும் காலம் இது. சந்தோஷ தருணங்கள் அதிகம் நடைபெறும் காலம் என்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் நிம்மதியும் சந்தோஷமும் சேரும் காலமாகும். பெண்களுக்கு பொன் நகை சேரும் காலம் என்பதால் முகத்தில் புன்னகை பூக்கள் பூக்கும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications