கோடை வந்தாச்சு.. புதுசா ஏசி வாங்க போறீங்களா.. இந்த 5 விஷயத்தை தெரிஞ்சிக்காம போகாதீங்க
சென்னை: சம்மர் தொடங்கிவிட்டதால் வீடுகளில் ஏ.சிக்களின் பயன்பாடு அதிகரித்து விட்டது. ஏசிக்களின் விற்பனையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஏசி வாங்கும் முன்பாக மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விவரங்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.
கோடை காலம் துவங்கிவிட்டது. இதனால் வெயிலின் தாக்கத்தால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். அடிக்கும் வெயிலுக்கு வெளியில் இருந்து வீட்டிற்குள் புகுந்தால் கூட புழுக்கம் அதிகமாக உள்ளது. கோடை காலம் இப்போதுதான் துவங்கியுள்ளது. ஆனால் அதற்குள்ளாகவே வெப்ப நிலை 35 டிகிரிக்கு மேல் வாட்டி வதைக்கிறது.

இதனால், கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்க மக்கள் ஏசியை அதிகம் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். நடுத்தர மக்கள் மத்தியில் கூட ஏசி பயன்பாடு அதிகரித்து விட்டதால் கோடை காலம் துவங்கியதில் இருந்தே ஏசி விற்பனை கிடு கிடுவென உயர்ந்துள்ளது.
எந்த ஏசியை வாங்கலாம்: ஏசியை வாங்க நினைக்கும் பலருக்கும் எந்த மாதிரியான ஏசியை வங்குவது என்ற சில குழப்பங்கள் வருவதுண்டு.. எனவே ஏசியை வாங்கும் முன்பாக கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து இங்கே பார்க்கலாம்..
ஏசியை வாங்கும் முன்பாக நமக்கு எந்த ஏசி செட் ஆகும் என்று பார்க்க வேண்டும். அதாவது, கடைகளில் ஐந்து வகையான ஏசிக்கள் உள்ளன. விண்டோஸ் ஏசி, ஸ்பிலிட் ஏசி, இன்வெர்டர் ஏசி, போர்டபிள் ஏசி மற்றும் செண்ட்ரல் ஏசி என 5 வகை ஏசிக்கள் கிடைக்கின்றன. இதில் நமக்கு எதும் செட் ஆகும் என பார்க்க வேண்டும்.
குறைந்த மின் கட்டணம்: குறைந்த மின் கட்டணத்தை விரும்பும் மக்கள் இன்வெர்ட்டர் ஏ.சியை தான் வாங்குகிறார்கள். கம்ப்ரெசர் மோட்டார்களைக் கட்டுப்படுத்தும் புது டெக்னாலஜி இன்வெர்ட்டர் ஏ.சி.களில் பயன்படுத்தப்படுகிறது. அதிகமான மின்சாரத்தை எடுத்துக் கொள்ளாமல், அறையைக் குளிரச் செய்யும் என்பதுதான் இன்வெர்ட்டர் ஏசியின் பணியாகும்.
வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு: ஸ்பிளிட் ஏசியை விட விண்டோ ஏசி விலை குறைவாக இருக்கும். ஸ்பிலிட் ஏசி வைக்க கொஞ்சம் அதிக இட வசதி தேவைப்படும். விண்டோ ஏசி அமைப்பது எளிது என்றாலும் அதில் இருந்து கொஞ்சம் அதிகமாக சத்தம் வரும். ஸ்பிலிட் ஏசி அறை எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அதற்கு ஏற்ப குளிர்ச்சியை வழங்கும்.
ஸ்பிலிட் ஏசி உள்புறம் மற்றும் வெளிப்புறம் என இரண்டு பிரிவுகளாக பொருத்த வேண்டியிருக்கும். ஸ்பிலிட் ஏசி கொஞ்சம் காஸ்ட்லியானது. வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு விண்டோ ஏசியே சிறந்த சாய்ஸாக இருக்கும். ஏனெனில் அதை கழட்டுவது மற்றும் புதிய இடத்தில் அமைப்பது மிகவும் எளிதான விஷயம் ஆகும்.
வீட்டு அறைக்கு ஏற்றார் போல்: அதேபோல், ஏசி வாங்கும் போது நமது வீட்டின் அறை எவ்வளவு பெரியது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதற்கு ஏற்றார் போல், வாங்க வேண்டும். சந்தைகளில் 1 டன் மற்றும் 2 டன் என பல்வேறு வகைகளில் ஏசிக்கள் உள்ளன. 150 சதுர அடி அளவிலான மீடியம் சைஸ் அறைக்கு 1.5 டன் முதல் 2 டன் ஏசி போதுமானது.
ஏசிக்களின் செயல்பாடும் மற்றும் அதன் மின்பயன்பாடு ஆகியவற்றை பொறுத்து அதற்கு ஸ்டார் ரேட்டிங் கொடுக்கப்பட்டு இருக்கும். 1 முதல் 5 வரையில் ஸ்டார் ரேட்டிங் உள்ளது. எனவே, ஏசி வாங்க நினைப்பவர்கள் இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதிக ஸ்டார் கொண்ட ஏசிக்கள் அதிக எனர்ஜியை சேமிக்கும் திறன் கொண்டதாக இருக்கும்.
இந்த வசதிகள் இருக்கிறதா?: ஏசிக்களில் எந்த மாதிரியான வசதிகள் உள்ளன என்பதையும் பார்க்க வெண்டும். நாம் வாங்க இருக்கும் ஏசிக்களில் ஸ்லீப் மோட், கூலிங் டெம்பரட்சேர்ஸ், டஸ்ட் பில்டர்ஸ், 4 வே ஸ்விங், ரிமோட் ஆபரேஷன்ஸ் உள்ளிட்டவை இருக்கிறதா என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications