வீடு குளு குளுன்னு இருக்கனுமா? அதுவும் ஏசியே இல்லாமல் இயற்கையான முறையில்.. சூப்பர் டிரிக்ஸ்
சென்னை: வெயில் இப்போது உக்கிரமாக இருக்கிறது. இயற்கையான முறையில் உங்கள் அறையை குளு குளுவென வைப்பது எப்படி என்பது குறித்து பார்ப்போம். வெயில் காலம் என்பதால் பகலில் ஜன்னல் மற்றும் கதவுகளை மூடி வைத்துவிடுங்கள். இது சூடான காற்று உள்ளே வராமல் இருக்க உதவும். அதேநேரம் மாலையில், குளிர்ந்த காற்று உள்ளே வரும் என்பதால் அப்போது ஜன்னல்கள் மற்றும் கதவுகளை திறந்து வையுங்கள்.
வெப்பத்தை குறைக்க எந்தமாதிரியான ஸ்கிரீனை (திரைசீலைகளை) வீடுகளில் பயன்படுத்தலாம் : இந்த ஸ்கிரீன்கள் பகலில் சூரிய ஒளியைத் தடுக்கவும், அறை வெப்பமடைவதைத் தடுக்கவும் உதவும். பொதுவாக வெள்ளை நிறத்தில் திரைச்சீலைகளை ஸ்கிரீனாக பயன்படுத்தினால் சூரிய ஒளி வருவது குறையும்.
வெப்பத்தை குறைக்க ஈரமான துணியைப் பயன்படுத்தலாம்: கோடையில் வெயில் அதிகமாக உள்ளதால், வெப்பத்தில் உடல் புழுக்கமாக இருக்கும். ஈரமான துணியால் உங்கள் தோலைத் துடைத்து உடல் வெப்பநிலையைக் குறைக்கலாம். உங்கள் நெற்றியில் அல்லது கழுத்தில் ஈரமான துண்டை வைத்து குளிர்ச்சியடைய வைக்கலாம் அல்லது ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை குளித்து வெப்பத்தை குறைக்கலாம்.

வெப்பத்தை தடுக்க வீட்டில் எப்போதும் இயற்கை காற்றோட்டத்தையே விரும்புங்கள்: உங்கள் வீட்டு அறையின் எதிர் பக்கங்களில் ஜன்னல்களைத் திறப்பதன் மூலம் குறுக்கு-காற்றை உருவாக்கும். இது வெளியில் இருந்து குளிர்ந்த காற்றை இழுக்கவும் உதவும்.
இயற்கையான உங்கள் அறைகளை குளிரூட்டும் முறைகளைப் பயன்படுத்தலாம்: ஏசியைப் போல் காற்று வர, ஒரு சில்வர் சட்டியில் ஐஸ் கட்டிகளை நிரப்புகள், குளிர்ந்த தண்ணீரை முழுமையாக ஊற்றுங்கள். அதனை டேபிள் பேனுக்கு கீழ் வையுங்கள். அப்படி வைத்தால் பேனில் உள்ள காற்று ஐஸ் கட்டி உள்ள சட்டியில் பட்டு குளிர்ந்த காற்றாக வரும்.
இதேபோல் கோணிசாக்குகளை நன்றாக தண்ணீரில் மூழ்க வைத்து அதனை மாடியில் போடலாம். அப்படி போட்டால் சாக்கில் ஈரம் இருக்கும் வரை மாடியில் இருந்த வெப்பம் இறங்காது. எனவே கோணிச்சாக்குகளை நீங்கள் வசிக்கும் அறைகளுக்கு மேல் போட்டு குளிர்ச்சி அடைய வைக்கலாம்.

வெப்ப காலங்களில் நீங்கள் சீலிங் பேனை பயன்படுத்துவதை விட டேபிள் பேனை பயன்படுத்தலாம். ஏனெனில் வெப்பக்காற்று மாடியில் அதிகமாக இருக்கும், எனவே சீலிங் பேன் போட்டால், அதை அப்படியே உள்ளே இழுத்து , உங்கள் அறையை வெப்பமாக்கவே செய்யும் . எனவே ஐஸ் கட்டியுடன் தண்ணீரை நிரப்பிய சில்வர் சட்டியை டேபிள் பேனின் பக்கத்தில் வைத்து தூங்கினால் உங்களுக்கு குளிர்ந்த காற்று நிச்சயம் கிடைக்கும். வேண்டுமானால் வெட்டிவேரை சில்வர் சட்டிக்குள் போட்டுக்கொள்ளுங்கள். இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருக்கும்.
இது தவிர அறையை குளிர்ச்சியாக வைத்திருக்க ஜன்னலை திறந்து விட்டு அதில் ஈரத்துணிகளை போட்டால், வெளியில் உள்ள காற்று உள்ளே வரும் போது, குளிர்ந்த காற்றாக வரும்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications