CSK-விற்கு ‘செக்' வைத்த சன் குழுமம்! ரஜினி பாடல் - பிஜிஎம் பயன்படுத்த தடை.. உயர்நீதிமன்றத்தில் தகவல்
சென்னை: வரும் 28 ம் தேதி முதல் ஐபிஎல் போட்டிகள் தொடங்க உள்ளன. இந்நிலையில் தான் சிஎஸ்கே அணி நடிகர் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர், கூலி, ஜெயிலர் 2 திரைப்படங்களில் பிஜிஎம் மற்றும் பாடல்களை பயன்படுத்தி சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிடக்கூடாது என்று சன் குழுமம் சார்பில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணையின்போது சிஎஸ்கே சார்பில் ரஜினி பட பாடல், பிஜிஎம்களை பயன்படுத்தமாட்டோம் என்று உறுதியளிக்கப்பட்டது. இதன் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.
விரைவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடங்க உள்ளது. வரும் மார்ச் 28 ம் தேதி முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆர்சிபி மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணிகள் மோத உள்ளன.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி உரிமையாளராக சன் குழுமம் உள்ளது. கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன் தான் அணியின் சிஇஓவாக உரிமையாளராக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் தான், ஒவ்வொரு அணிகளும் தங்களின் அணி சார்ந்த வீடியோக்கள், வீரர்களின் போட்டோக்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி ) வெளியிட்ட வீடியோவில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர், கூலி, ஜெயிலர் 2 திரைப்படங்களில் பாடல்கள், பிஜிஎம்கள் இடம்பெற்றிருந்தன.
சிஎஸ்கேவிற்கு எதிர்ப்பு
இந்த திரைப்படங்கள் சன் குழுமத்தின் சன்பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஏனென்றால் இந்த திரைப்படங்கள் சன்பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகளாகும். இதனால் காப்புரிமை அவர்களிடம் உள்ளது. இதற்கிடையே தான் ரஜினிகாந்தி்ன் 'ஹுக்கும்' பிஜிஎம், பாடல்களை பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிஎஸ்கேவிற்கு இ-மெயில் அனுப்பி வைக்கப்பட்டது. உரிய அனுமதியின்றி இந்த பாடல்களை சிஎஸ்கே பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது.
உயர்நீதிமன்றத்தில் வழக்கு
அதுமட்டுமின்றி சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று நீதிபதி செந்தில் குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சன் குழுமம் மற்றும் சிஎஸ்கே தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது.
காப்புரிமையை மீறக்கூடாது
சன் குழுமம் சார்பில் மூத்த வழக்கறிஞர் ரவீந்திரன் ஆஜரானார். அவர், ''சன் டிவி அனுப்பிய இ-மெயிலுக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் நிறுவனம் ஜெயிலர், கூலி, ஜெயிலர் 2 திரைப்படங்களில் பாடல்கள் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டது. எதிர்காலத்தில் காப்புரிமை மீறல் செய்யக்கூடாது '' என்று கூறினார்.
ஒப்புக்கொண்ட சிஎஸ்கே
இதற்க சிஎஸ்கே சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிஎஸ் ராமன், ''பாடல்கள் புரோமோக்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. உரியவர்களிடம் அனுமதி பெறாமல் எதிர்காலத்தில் இந்த பாடல்களை பயன்படுத்த மாட்டோம்'' என்றார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம் சிஎஸ்கே சார்பில் கூறப்பட்டதை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்யும்படி கூறி வழக்கு விசாரணையை மார்ச் 16ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
ரசிகர்கள் வருத்தம்
சிஎஸ்கே அணிக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதற்கு முக்கிய காரணம் தோனி தான். தோனியை வைத்து ரசிகர்கள் பலரும் ரஜினிகாந்தின் 'ஹுக்கும்' உள்பட பல பாடல்களை இணைத்து எடிட் செய்து வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். அதே பாணியை சிஎஸ்கேவும் கையில் எடுத்த நிலையில் தற்போது சிக்கலை எதிர்கொண்டுள்ளது. இதனால் ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications