கஜா புயல் நிவாரணப் பணி... ரூ.2 கோடி நிதி வழங்கியது சன் குழுமம்
சென்னை: சன் குழுமம் சார்பில் கஜா புயல் நிவாரணப் பணிக்கு ரூ.2 கோடி நிதி அளிக்கப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் சன் குழும நிர்வாகிகள் நிதி அளித்தனர்.
கடந்த 15-ம் தேதி இரவு தமிழகத்தில் கஜா புயல் கரையைக் கடந்தது. இதில், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்கள் சூறையாடப்பட்டன.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தமிழர்கள் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். அரசியல் கட்சிகள், நடிகர்கள், தொழில் அதிபர்கள் என பலர் உதவிகளை வழங்கி வருகிறார்கள். அந்த வகையில், ரூ.2 கோடி நிவாரண நிதியை, முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் சன் குழும நிர்வாகிகள் வழங்கினர்.
புயல் பாதித்து 12 நாட்கள் ஆகியும், சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனிடையே, மூன்று நாட்கள் ஆய்வு மேற்கொண்ட மத்தியக் குழு ஒரு வாரத்திற்குள் அறிக்கையாக தாக்கல் செய்யும் என கூறப்படுகிறது. மேலும், நாளை முதலமைச்சர் பழனிசாமி திருவாரூர், நாகை மாவட்டங்களை ஆய்வு செய்ய உள்ளார்.
கஜா புயல் பாதிப்பில் இருந்து, கொஞ்சம், கொஞ்சமாக சகஜ நிலைக்கு திரும்பி வரும் டெல்டா மாவட்டங்களில் மின் சீரமைப்பு பணிக்கு ரூ. 200 கோடியை மட்டும் மத்திய அரசு ஒதுக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்!












Click it and Unblock the Notifications