சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"ஜஸ்ட் 30 நிமிஷம் தான்".. சொன்னபடியே செய்து காட்டி.. திக்குமுக்காட வைத்த சோனு சூட்.. சபாஷ்!

கொரோனா நோயாளிகளுக்கு உதவுகிறார் நடிகர் சோனுசூட்

Google Oneindia Tamil News

சென்னை: "ஜஸ்ட் 30 நிமிஷம் வெயிட் பண்ணுங்க.. பெட் கிடைச்சிடும்" என்று உயிருக்கு போராடி வரும் நபருக்கு உறுதி தந்து, அதன்படியே 30 நிமிஷத்தில் படுக்கை வசதியை செய்து தந்துள்ளார் சோனு சூட்..!

இந்த முறை கொரோனா பரவல் அதிகமாகி உள்ளது.. அதுவும் 2வது அலை பயங்கரமாக மிரட்டி கொண்டிருக்கிறது.. மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

இப்படிப்பட்டு சூழலில்தான், தானாக முன்வந்து உதவி செய்து கொண்டிருக்கிறார் பாலிவுட் நடிகர் சோனுசூட்.. அடுத்தவருக்கு ஒரு பிரச்சனை என்றால், முதல் ஆளாக வந்து நிற்பவர் நடிகர் சோனு.. யார் என்ன உதவி வேண்டுமானாலும் இவரை நம்பி கேட்கலாம்.. முடியாது என்று சொல்ல மாட்டார்.. அந்த உதவியை கிடைக்க இறுதி வரை முயற்சிப்பார்.. பெரும்பாலும் அந்த உதவிகளை செய்தும் முடித்துவிடுவார்.

மலை ரயில் ரத்து.. களையிழந்த உதகை.. ஆனா இவங்கெல்லாம் ஊட்டிக்கு போகலாமாம்.. யாருனு தெரியுமா?மலை ரயில் ரத்து.. களையிழந்த உதகை.. ஆனா இவங்கெல்லாம் ஊட்டிக்கு போகலாமாம்.. யாருனு தெரியுமா?

 சொத்து

சொத்து

ஒருகட்டத்தில் தன்னுடைய முழு சொத்தையும் அடகு வைத்து, அந்த பணத்தை கொண்டு, கஷ்டப்படும் மக்களுக்கு உதவி செய்யும் அளவுக்கு உயர்ந்தார்.. அதனால்தான் நாட்டு மக்கள் இவரை நடிகர் என்பதையும் தாண்டி தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர். இப்படிப்பட்ட மனிதரையும் கொரோனா கொடியவன் விட்டுவைக்கவில்லை.. சோனுவுக்கு கொரோனா பாதிப்பு என்றதும் ரசிகர்கள் துடித்தே போய்விட்டனர்.

 உதவிகள்

உதவிகள்

இதை பற்றி இவரே ஒரு ட்வீட் போட்டிருந்தார்.. "2 நாளாக என் செல்போனை கீழே வைக்கவே முடியவில்லை... நாடு முழுக்க பலரிடம் இருந்து எனக்கு ஊசி வேண்டும், பெட் வேண்டும் என்று அழைப்புகள் வந்து கொண்டே இருக்கிறது.. ஆனால் இப்போ நான் என்ன செய்வேன்? உடனே எந்த உதவியும் செய்யமுடியாத சூழலில் நிர்கதியாய் கிடக்கிறேனே என்று வருத்தத்துடன் புலம்பவும் செய்தார்.

ட்வீட்கள்

ட்வீட்கள்

எனினும், தன்னைதானே இவர் தனிமைப்படுத்தி கொண்டார்.. அப்போதும், உங்களின் ஒவ்வொரு பிரச்னையிலும் துணை நிற்பேன் என்று தெம்பு தரும் ட்வீட்களையும் பதிவிட்டார்.. இப்போது ட்ரீட்மென்ட்டில் இருந்தாலும் சொன்னபடியே உதவிகளையும் செய்து கொண்டே இருக்கிறார்..

 பெட்

பெட்

இப்படித்தான் ஒருவர் சோனுவிடம் ஒரு உதவி கேட்டிருந்தார்.. அந்த நபரின் அப்பாவுக்கு 75 சதவீதம் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாம்.. குர்கான் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம்.. ஆனால், அங்கே அவருக்கு பெட் வசதி இல்லாமல் தவித்து வருவதாக சோனு சூட்டிற்கு தெரிவித்துள்ளார்.

சபாஷ்

சபாஷ்

அதற்கு சோனு சூட் உடனடியாக பதிலளித்துள்ளார்.. அரை மணி நேரம் பொறுங்க.. படுக்கை வசதி கிடைத்து விடும்... அதுக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறேன்... உங்கள் அப்பா சீக்கிரமா குணமடைய என் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டு பதிலளித்தார்... அத்துடன் நிற்கவில்லை... நிஜமாகவே சொன்னபடியே அந்த நபருக்கு உதவியும் செய்துள்ளார் சோனு சூட்... சபாஷ் சோனு..!

English summary
Sonu sood helps to facing trouble with medical facilities
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X