Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"1000 ரூபாய்" வரப்போகுதாம்.. பிடிஆர் அன்னைக்கே சொன்னாரே.. தமிழக அரசு அதிரடி.. குஷியில் மாணவிகள்

1000 ரூபாய் கல்லூரி மாணவிகளுக்கு வழங்க திமுக அரசு தயாராகி வருகிறதாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சத்துணவு முட்டை டெண்டரில், கிறிஸ்டி நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டதற்கான தரவுகள், புகார்கள் ஏதும் அரசிடம் இல்லை என்று தெளிவுபடுத்தி உள்ள அமைச்சர் கீதா ஜீவன், ஒரு முக்கிய அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.

முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவிகளுடன் முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்தல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்றார்.. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கீதா ஜீவன் சொன்னதாவது:

 கீதா ஜீவன்

கீதா ஜீவன்

முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் இன்று கடைபிடிக்கப்பட்டது. முதியோர்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.. முதியோர்களுக்கான தனி கொள்கை வடிவமைக்கப்பட்டு வருகிறது விரைவில் வெளியிடப்படும்.. அடுத்த 5 ஆண்டுகளில் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் தொலைநோக்குடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.. முதியோர் இல்லங்களே கூடாது என்பதே அரசின் எண்ணம். ஆனால் சூழல் அப்படி இல்லை.. தனியாக இருப்பது முதியோர்களுக்கு பாதுகாப்பில்லை என்பதால், முதியோர் இல்லங்களைத் தேடி பலர் வருகின்றனர். முதியோர் உதவித்தொகை வழங்கும் பணி இனி விரைவுபடுத்தப்படும் தாமதம் இருக்காது,

 1000 உறுதித்தொகை

1000 உறுதித்தொகை

1-5 ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்வர் விரைவில் தொடங்கி வைப்பார்.. மாணவியருக்கு உயர்கல்வி உறுதித்தொகை ரூ.1,000 வழங்குவதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது. முதலாமாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்ட உடன், ரூ.1,000 உறுதித்தொகை நேரடியாக மாணவியரின் வங்கிக்கணக்குகளில் செலுத்தப்படும்.

 1000 ரூபாய்

1000 ரூபாய்

காலை சிற்றுண்டி திட்டத்துக்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகிறது.விரைவில் திட்டம் தொடங்கப்படும்.பள்ளி மாணவர்களுக்கான சீருடைகள் தைக்கும் பணி நடைபெற்று வருகிறது.. அது விரைவில் வழங்கப்படும். 18 வயதைக் கடந்து சிலர் காதல் திருமணம் செய்துகொள்வதும் குழந்தைத் திருமணம் என்றே கருதப்படுகிறது... குழந்தைத் திருமணத்தைத் தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.. விரைவில் நிலைமை மாறும் எண்ணிக்கை குறையும்

 முட்டை - முறைகேடு

முட்டை - முறைகேடு

சத்துணவு முட்டை டெண்டரில் கிறிஸ்டி நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டதற்கான தரவுகள், புகார்கள் ஏதும் அரசிடம் இல்லை.. தொடர்ந்து டெண்டர் கோரும் நிறுவனங்கள் பட்டியலில் கிறிஸ்டி நிறுவனமும் உள்ளது.. விலைப்பட்டியலைப் பொறுத்து டெண்டர் ஒதுக்கப்படும்... சத்துணவுப் பணியாளர் நியமனம் வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறும்.. அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி நடத்துவது குறித்த தெளிவான விளக்கத்தை கல்வித்துறை கொடுத்துவிட்டது.. சமூக நலத்துறை சார்பில் எல்கேஜி, யுகேஜி நடத்தப்படவில்லை" அமைச்சர் கீதா ஜீவன் தெளிவுப்படுத்தி உள்ளார்.

 பிடிஆர் அதிரடி

பிடிஆர் அதிரடி

அமைச்சர் பிடிஆர் இந்த அறிவிப்பை முதன்முதலாக அறிவித்திருந்தார்.. அதாவது, அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகள் உயர் கல்வியில் இடைநிற்றலைத் தடுக்கும் வகையில் மாதம் 1000 ரூபாய் அளிக்கப்படும் என்று பட்ஜெட்டில் நிதியமைச்சர் அறிவித்தார்.. இந்த அறிவிப்பு பெற்றோர் மற்றும் மாணவிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றது.. அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்விச் சேர்க்கை மிகக் குறைவாக இருப்பதைக் கருத்தில்கொண்டு, திருமண நிதியுதவித் திட்டம் உயர் கல்வி உறுதித் திட்டம் என மாற்றியமைக்கப்படுவதாகவும் அமைச்சர் பிடிஆர் தெரிவித்திருந்தார்.

 1000 ரூபாய்

1000 ரூபாய்

6 முதல் 12ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும், அதாவது, பட்டப்படிப்பு அல்லது பட்டயப்படிப்பு அல்லது தொழிற்படிப்பு இது எதுவானாலும்சரி, இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாதம் 1,000 ரூபாய், அந்த குறிப்பிட்ட மாணவிகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவே செலுத்தப்படும்.. இந்த திட்டத்தின் மூலம் சுமார் 6 லட்சம் மாணவிகள் ஒவ்வொரு ஆண்டும் பயன்பெற வாய்ப்புள்ளதாகவும், இதற்காகவே, வரவு-செலவுத் திட்டத்தில் 698 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் பிடிஆர் கூறியிருந்தார்.

 குஷியில் பெற்றோர்

குஷியில் பெற்றோர்

சமீபத்தில்கூட, செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இதை உறுதிப்படுத்தியிருந்தார்.. உயர்கல்வி உதவி தொகை திட்டம் இந்த கல்வியாண்டிலேயே தொடங்கப்படும் என்று கூறியிருந்தார்.. ஆனால், எப்போது அந்த திட்டம் அமலுக்கு வரும் என்று உறுதியாக கூறப்படவில்லை.. அநேகமாக மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் ஜூலை 15ம் தேதி அதாவது காமராஜர் பிறந்தநாள் முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.. இந்த திட்டத்தில் இன்னொரு ஹைலைட்டும் உள்ளது.. மாணவிகள் ஏற்கனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும்கூட, இத்திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் பெரும் குஷியை ஏற்படுத்தி வருகிறது..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+