"சிஸ்டம்" மாறுகிறது.. TNPSC தேர்வு குறித்து பிடிஆர் வெளியிட்ட சூப்பர் தகவல்.. என்னன்னு பாருங்க..!
டிஎன்பிஎஸ்சி தேர்வு முறை குறித்து நிதியமைச்சர் நல்ல செய்தி வெளியிட்டுள்ளார்
சென்னை: ''டிஎன்பிஎஸ்சி தேர்வு முறை, பயிற்சி, பதவி உயர்வு போன்ற அனைத்தையுமே மறு ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை அளிக்க, விரைவில் குழு அமைக்க உள்ளதாக நிதியமைச்சர் பிடிஆர் தெரிவித்துள்ளார்.. அத்துடன் சூப்பர் தகவல் ஒன்றையும் இது தொடர்பாக வெளியிட்டுள்ளார்.
சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. நேற்றைய தினம் கேள்வி நேரத்தின் போது காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கிள்ளியூர் ராஜேஷ் குமார்பேசும் போது கன்னியாகுமரி மாவட்டத்தில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு குறித்து பேசினார்.
''தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக கன்னியாகுமரி மாவட்டம் கல்வி அறிவு பெற்ற மாவட்டமாக உள்ளது. சுமார் 2 லட்சத்து 40 ஆயிரம் இளைஞர்கள் அரசு வேலை வேண்டும் என வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர்...

கன்னியாகுமரி
தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் அரசு பணிகளுக்கு பணியாளர்கள் தேர்வு செய்யப்படவில்லை. இப்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 தேர்வுக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் 50,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். குரூப் 4 தேர்வுக்கு 75,000 பேர் விண்ணப்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. கன்னியாகுமரி மாவட்டத்தில் போட்டி தேர்வுக்கு தயார் ஆகுபவர்களுக்கு பயிற்சி நிலையம் இல்லை.. அதனால், இங்கு ஒரு பயிற்சி நிலையம் அமைக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.

நிதியமைச்சர்
இதற்கு பதில் அளித்து பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசினார்.. அப்போது அவர் சொன்னதாவது: "பல வகையில் தகவல் அடிப்படையில் மேலாண்மை செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து சொல்லி வருகிறார்... அதற்கேற்பவே நாங்களும் தொடர்ந்து தகவல்களை சேகரித்து வருகிறோம்... அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் தனி சூழ்நிலை காணப்படுகிறது..

கன்னியாகுமரி
காரணம், கூடுதல் படிப்பு அறிவு, கூடுதல் நிர்வாகம், கூடுதல் பட்டதாரிகள் உள்ளனர்.. இதனாலேயே குறைவான வேலைவாய்ப்பு காணப்படுகிறது.. இதை திருத்தம் செய்ய தொழில் ரீதியாகவும், பொருளாதார வளர்ச்சிக்காகவும் தமிழக அரசு ஆய்வு செய்து கொண்டுதான் இருக்கிறது.. அவைகளில் பல பங்குகள் உள்ளன.. அதையெல்லாம் நாம் வேறு ஒரு நாளில் பேசலாம்...

நிதிச்சுமை
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் சார்பாக 2, 3 ஆண்டுகள் தேர்வு நடைபெறவில்லை. பல முறைகேடுகள் நடந்துள்ளன.. குளறுபடிகளும் நடந்துள்ளன. பல ஆண்டுகளாக டிஎன்பிஎஸ்சி தேர்வு ஆய்வு செய்யாமல் உள்ளது... இன்று 3 லட்சத்துக்கு மேல் காலி பணியிடங்கள் உள்ளன. சில இடங்களில் கூடுதலாகவே உள்ளனர்.. சில இடங்களில் யாரும் இல்லாமல் உள்ளனர்... இதற்கு நடுவில் நிதி சுமையும் உள்ளது. ஒரு குழு அமைத்து இதையெல்லாம் மறு ஆய்வு செய்ய உள்ளோம் என நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மகிழ்ச்சியில் மாணவர்கள்
அதன்படி நிபுணர்கள் ஆலோசனைபடி முதல்கட்டமாக சில தெளிவுகள் வந்துள்ளது. அடுத்த 6 மாதத்திற்குள், பரிந்துரைபடி திட்டத்தையே சிறப்பித்து, எந்தெந்த இடத்தில் எந்த தேர்வுகள் வைக்க வேண்டும் என்பதை முடிவுகள் செய்வோம்" என்றார். வரும் ஆண்டுகளில் அரசு பணிக்கான காலியிடங்கள் அதிகமாக இருக்கும் என்று நிதியமைச்சர் தெரிவித்திருப்பது, டிஎன்பிஎஸ்சி மற்றும் அரசு பணிக்கு படிக்கும் மாணவர்களிடையே பெருத்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications