கிருத்திகா உதயநிதி வீடியோ.. வெளியான முக்கிய மெசேஜ்! சட்டசபையிலேயே வாழ்த்திய விசிக ஆளூர் ஷாநவாஸ்
கிருத்திகா உதயநிதி விழிப்புணர்வு வீடியோவுக்கு விசிக பாராட்டு தெரிவித்துள்ளது
சென்னை: கிருத்திகா உதயநிதியின் செயலுக்கு, விசிக தன்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொண்டுள்ளது.
Recommended Video
திமுக இளைஞரணிச் செயலாளரும், எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா.. இவர் திரைப்பட இயக்குனர்.. சமூக அக்கறை நிறைந்தவர்..!
பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பொதுமக்களுக்காக நடத்தி கொண்டிருப்பவர்... இதற்காகவே எளிய மக்களை தேடி சென்று அவர்கள் பயன்பெறும் வகையில், ஆக்கம் தரும் செயல்பாடுகளுக்கு ஊக்கம் ஊட்டி கொண்டிருப்பவர். பெண்கல்வி, பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து பேசி வருபவர்..

கிருத்திகா
2 நாட்களுக்கு முன்பு கிருத்திகா, அவரே பேசி ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்.. அதில், "நாம யாருமே பப்ளிக் டாய்லெட் பக்கமே போக மாட்டோம்.. நான் நிறையமுறை, யார் என்றே தெரியாதவர்கள் வீட்டில் நின்று, அவர்கள் டாய்லெட்டை பயன்படுத்திக்கலாமா? என்று அனுமதி கேட்டுள்ளேன்.. இதற்கு ஒரு தீர்வு வரணும் என்பதற்காகத்தான் சென்னை மாநகராட்சி உள்பட பல்வேறு தொண்டு நிறுவனங்கள் இணைந்து, இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏப்ரல் 2,3 தேதிகளில் நடத்த இருக்கின்றன. மேப்பத்தான் சாந்தோம் உயர் நிலைப் பள்ளியில், ரீசைகிள் பின், சியர் ஆர்கனைசேஷன், டச் மினிஸ்ட்ரி, சென்னை மாநகராட்சி எல்லாரும் இணைந்து நடத்தக் கூடிய விழிப்புணர்வு நிகழ்ச்சிஅது..

கழிவறைகள்
இவர்கள் சென்னையிலுள்ள பொதுக் கழிவறைகளை அடையாளம் காண உள்ளனர், மேலும் பொதுக் கழிவறைகளை மக்கள் பயன்பாட்டுக்கு எப்படி கொண்டு வரலாம் என்பது குறித்தும் ஆலோசிக்க உள்ளோம்.. , உங்களுடைய கழிப்பறை அனுபவ கதையை #OnceinaLOO என்ற ஹேஷ்டேக் பதிவிட்டு உங்கள் சோஷியல் மீடியா பக்கத்தில் ஷேர் செய்ய வேண்டும்.. இதனால் கழிப்பறை குறித்த விழிப்புணர்வு பலரிடம் சென்றடையும்" என்று கூறியிருந்தார் கிருத்திகா. இந்த வீடியோவை தன்னுடைய ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டிருந்தார்.

கிருத்திகா
கிருத்திகாவின் இந்த முயற்சியை பலரும் வரவேற்றனர்.. தங்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்து வந்த நிலையில், விசிகவும் தன்னுடைய வாழ்த்தை கூறி, கிருத்திகாவை பாராட்டி உள்ளது.. இன்றைய தினம், பொது மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் பேசும்போது சொன்னதாவது:

கழிப்பிட வசதி
"தமிழகத்தில் சுற்றுலா துறையில் கழிப்பிட வசதிகளை மேம்படுத்த வேண்டும்.. இயற்கைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ஆங்காங்கே கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும்... அந்த வகையில் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் மனைவி கிருத்திகா உதயநிதி, கழிப்பிட கட்டமைப்புகளை மேம்படுத்துவது தொடர்பாக இணையதளத்தில் வீடியோ பதிவிட்டதை வரவேற்கிறேன்... கழிப்பிட கட்டமைப்புகளை உலகத் தரத்திற்கு தரம் உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஷாநவாஸ்
சிறுபான்மையினருக்கு எதிராக கலவரத்தை தூண்டி மதக் கலவரத்தில் ஈடுபடும் குற்றவாளிகளை தண்டிக்க தனி சட்டத்தை தமிழ்நாடு அரசு உருவாக்க வேண்டும். மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் செயலகத்திற்கு என்று தனியாக ஒரு யூடியூப் சேனல் உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று ஆளூர் ஷாநவாஸ் கேட்டுக் கொண்டார்.
-
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications