Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்ரீகாந்திக்கு சூப்பர் சான்ஸ்.. தம்பிதுரை பலே.. தேமுதிக குட் மூவ்.. இன்று ராஜ்யசபா வேட்புமனு தாக்கல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது.. திமுக மற்றும் அதிமுக ஆகிய 2 துருவங்களும் கூட்டணி கட்சிகளின் கோரிக்கைகளை சமாளித்து வேட்பாளர்களை இறுதி செய்யும் நெருக்கடியில் உள்ளன.. பிப்ரவரி 26 முதல் அதாவது இன்று முதல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கும் நிலையில் அரசியல் களம் டெல்லி நோக்கிய நகர்வுகளில் மும்முரமாகியுள்ளது..

தமிழகத்தை பொறுத்தவரை திருச்சி சிவா, என்.ஆர்.இளங்கோ, கனிமொழி சோமு, அந்தியூர் செல்வராஜ் ஆகிய திமுக எம்.பி.க்களும்.. அதிமுகவின் தம்பிதுரை மற்றும் அதிமுக ஆதரவோடு தேர்வான தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோரின் பதவிக்காலம் ஏப்ரல் 2-ஆம் தேதியுடன் முடிவடைகிறது..

Sreekanthi Rajya Sabha Election Tamil Nadu 2026 RS Polls 2026 Thambidurai AIADMK DMK-DMDK Alliance 2026

இன்று வேட்பு மனு தாக்கல்

இந்த 6 இடங்களுக்கான தேர்தல் மார்ச் 16-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில்.. இதற்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கி மார்ச் 5ம் தேதி வரை நடைபெறுகிறது.. மார்ச் 6ம் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு.. போட்டிகள் இருக்கும் பட்சத்தில் மார்ச் 16-ஆம் தேதி வாக்குப்பதிவும் அன்றே வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது..

அதிமுக கூட்டணியைப் பொறுத்தவரை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஏற்கனவே ஒரு இடத்தை உறுதி செய்துகொண்டுதான் கூட்டணிக்குள் வந்துள்ளார்..

தம்பிதுரைக்கு கன்பார்ம் போல

மீதமுள்ள ஒரு இடத்திற்கு மூத்த தலைவர் தம்பிதுரைக்கும் தமாகா தலைவர் ஜி.கே.வாசனுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.. மக்களவையில் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் மாநிலங்களவையில் தற்போதுள்ள 5 எம்.பி.க்கள் எண்ணிக்கையும் குறைந்தால் டெல்லியில் கட்சியின் செல்வாக்கு சரியும் என எடப்பாடி பழனிசாமி கவலைப்படுகிறார்..

இதனால் ஜி.கே.வாசனுக்கு பாஜக கோட்டாவில் வேறு மாநிலத்தில் சீட் பெற்றுத் தர அதிமுக தலைமை ஆலோசித்து வருவதாகவும்.. டிடிவி தினகரனின் கோரிக்கையை சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின் கவனிப்பதாக உறுதி அளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின்றன..

மறுபுறம் திமுகவிலும் இடப்பங்கீட்டுச் சிக்கல்கள் நீடிக்கின்றன.. திருச்சி சிவாவுக்கு ஒரு சீட் நிச்சயமாகிவிட்ட நிலையில், மீதமுள்ள 3 இடங்களுக்கு காங்கிரஸ் கட்சி கடும் பிடிவாதம் பிடிக்கிறது.. தங்களுக்கு 17 எம்.எல்.ஏக்கள் உள்ள நிலையில் ஒரு சீட் ஒதுக்குவதில் என்ன தயக்கம் எனக் கேள்வி எழுப்பி வருகிறது..

ஸ்ரீகாந்திக்கு சீட்

இதற்கிடையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பு, சட்டப்பேரவைத் தொகுதி எண்ணிக்கையைக் குறைத்தாலும் தனது மகள் ஸ்ரீகாந்திக்கு ஒரு ராஜ்யசபா சீட் தர வேண்டும் எனத் தூது அனுப்பி வருகிறது.. இது அன்புமணிக்கு போட்டியாக ஸ்ரீகாந்தியை டெல்லிக்கு அனுப்பும் ராமதாஸின் ராஜதந்திரமாகப் பார்க்கப்படுகிறது..

மற்றொரு சுவாரஸ்யமான திருப்பமாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திமுக தலைவரைச் சந்தித்ததன் பின்னணியில், சட்டப்பேரவை தொகுதி ஒதுக்கீட்டுடன் 1 மாநிலங்களவை சீட் என்ற டீலிங் இருப்பதாகவும் பேசப்படுகிறது.. ஆக, ஒரு ராஜ்யசபா சீட்டைத் தூண்டிலாக பயன்படுத்தி தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளும் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றன..

ராமதாஸின் கோரிக்கை

இதில் திமுகவில் என்.ஆர். இளங்கோ அல்லது அந்தியூர் செல்வராஜ் ஆகியோரில் ஒருவருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படலாம் அல்லது கட்சியின் தேர்தல் பணிகளில் தீவிரமாக இருக்கும் ஒரு புதுமுகத்திற்கு வாய்ப்பு வழங்கப்படலாம்.. குறிப்பாக, தேமுதிகவுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியின் அடிப்படையில் பிரேமலதா விஜயகாந்த் தரப்பில் முன்மொழியப்படும் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கக்கூடும்..

அதிமுக தனது டெல்லி பலத்தைத் தக்கவைக்க தம்பிதுரையை முன்னிறுத்தவே அதிக ஆர்வம் காட்டும்.. அதேநேரம், பாமக குடும்பத்திற்குள் நிலவும் அதிகாரப் போட்டியால் ஸ்ரீகாந்திக்கு சீட் தர வேண்டும் என்ற ராமதாஸின் கோரிக்கை, அன்புமணியின் இடத்தையே கேள்விக்குறியாக்கினால் அது கூட்டணியில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும்.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+