முன்பதிவு செய்த பயணிகள் டபுள் ஹேப்பி.. சென்னை டூ தென்மாவட்ட ரயில்களில் நேற்று நடந்த சூப்பர் மாற்றம்
சென்னை: சென்னையில் இருந்து தென்மாவட்டங்கள் செல்லும் ரயில்களில் டிக்கெட் பரிசோதகர்களும், ரயில்வே போலீசாரும் நேற்று அதிரடியாக நடவடிக்கையில் ஈடுபட்டனர்.. முன்பதிவு செய்யப்படாத டிக்கெட் எடுத்துவிட்டு ஸ்லீப்பர் கோக்சில் ஏறிய பயணிகள் பலர் அதிரடியாக இறக்கிவிடப்பட்டனர்.. இதனை பயணிகள் பலரும் பாராட்டினார்கள்..
சென்னையில் இருந்து திருச்சி, காரைக்குடி, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருவனந்தபுரம், கொல்லம், செங்கோட்டை உள்ளிட்ட தென்மாவட்ட ரயில்களில் எப்போதுமே கூட்டம் அதிகமாக இருக்கும்.. எத்தனை ரயில்கள் விட்டாலும் உடனே முன்பதிவு முடிந்துவிடும்... இதேபோல் சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக கோவை செல்லும் மேற்கு மாவட்ட ரயில்களிலும் டிக்கெட் அவ்வளவு எளிதாக கிடைக்காது. இதேபோல் கோவை வழியாக கேரளாவிற்கு செல்லும் ரயில்களிலும் 2 மாதத்திற்கு முன்பே டிக்கெட் முன்பதிவு முடிந்துவிடும்.. கடைசி நேரத்தில் டிக்கெட் புக்கிங் செய்வது என்பது தெற்கு ரயில்வே ரயில்களில் சாத்தியமே இல்லை..

ரயில்களில் ஸ்லீப்பர் கோச்களில் டிக்கெட் புக்கிங் வேகமாக முடிந்துவிடுவதால், பலர் முன்பதிவு செய்யாத பெட்டிகளில் ஏற டிக்கெட் எடுக்கிறார்கள்.. ஆனால் அவர்கள் ஸ்லீப்பர் மற்றும் சிட்டிங் உள்பட முன்பதிவு செய்த பெட்களில் ஏறிக்கொள்கிறார்கள். இதனால் முன்பதிவு செய்து பயணிக்கும் பயணிகள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
அண்மையில் ஒரு வடமாநில ரயிலில் ஸ்லீப்பர் கோச்சில் புக்கிங் செய்த பயணிகளுக்கு மோசமான சம்பவம் நடந்தது.. யாருமே உடகார்ந்து கூட செல்ல முடியாத அளவிற்கு முன்பதிவு செய்யாத பயணிக்ள அமர்ந்திருந்தார்கள்.. இது பற்றி வீடியோ வெளியான நிலையில், சமூக வலைதளங்களில் ரயில்வே குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்தது.

இந்நிலையில் தேர்தலை முன்னிட்டு பலரும் சொந்த ஊர் செல்ல நேற்று ரயில் நிலையங்களுக்கு படை எடுத்தார்கள்.. முன்பதிவு செய்து ஏறிய பயணிகள் வழக்கம் போல் ஏறினார்கள். அந்த பெட்டியில் முன்பதிவு செய்யாத பயணிகளும் ஏறினார்கள்.. குறிப்பாக ஸ்லீப்பர் கோச்சில் ஏறினார்கள். அவர்களை பரிசோதித்த டிக்கெட் பரிசோதகர்கள்.. ஆர்பிஎப் போலீசார் உதவியுடன் அடுத்த ரயில் நிலையங்களிலேயே இறக்கிவிடப்பட்டனர்.

எழும்பூரில் ஏறியவர்கள் தாம்பரத்திலும், தாம்பரத்தில் ஏறியவர்கள் செங்கல்பட்டிலும், செங்கல்பட்டில் ஏறியவர்கள் விழுப்புரத்திலும் இறக்கிவிடப்பட்டனர். விழுப்புரத்தில் கொல்லம் சென்ற ரயில் சுமார் 20 நிமிடங்களுக்கு மேல் இதற்காக நின்றது. பல பெட்டிகளிலும் இருந்தும் முன்பதிவு செய்யாத பயணிகள் இறக்கிவிடப்பட்டனர். திருச்சியில் ஏராளமான பயணிகள் இறக்கிவிடப்பட்டனர். முன்பதிவு செய்யாத பயணிகளை முன்பதிவு செய்த பெட்டிகளில் பயணிக்க டிக்கெட் பரிசோதகர்கள் அனுமதிக்கவில்லை.. ரயில்வே போலீசாரும் கடும் நடவடிக்கை எடுத்தனர். ரயில்வே அதிகாரிகள் இந்த அதிரடி நடவடிக்கையால் ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இறக்கிவிடப்பட்ட பயணிகள் மாற்று ரயில்களில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் ஏற்றி அனுப்பிவைக்கப்பட்டனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications