50 ரூபாய் பழைய நோட்டு இருக்கா? அதுல இந்த நம்பர் இருந்தாலே லட்சக்கணக்கில் பணம் அள்ளலாம் என போலி தகவல்
சென்னை: இந்த அரிய வகை நோட்டுக்கள் உங்களிடம் இருந்தால், அதை வைத்து, லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்று சோஷியல் மீடியாவில் மீண்டும் தகவல்கள் றெக்கை கட்டி பறக்கின்றன.
ஒருகாலத்தில் புழக்கத்தில் இருந்து, தற்போது மிஸ்ஸாகிவிட்ட அரியவகை ரூபாய் நோட்டுகளுக்கு தட்டுப்பாடு அதிகமாகிவிட்டது.. குறிப்பாக, 50 ரூபாய் பழைய நோட்டுக்கள், 10 ரூபாய் பழைய நோட்டுக்கள், 20 ரூபாய் பழைய நோட்டுக்கள், இவைகளை தவிர பழைய நாணயங்கள் போன்றவைகளுக்கு ஆன்லைனில் நல்ல கிராக்கி இருந்து வருகிறது.

பழைய ரூபாய்: பழைய 20 ரூபாய் நோட்டுக்களை எடுத்துக் கொண்டால், அதில் "786" என்ற விசேஷ நம்பர் அச்சிடப்பட்டிருக்கும். நோட்டின் முன் பக்கத்தில் மகாத்மா காந்தியின் போட்டோவும், இஸ்லாமிய மக்களிடையே புனிதமான எண்ணாக கருதப்படும் 786 என்ற இந்த நம்பரும் அந்த பிரத்யேகமான 20 ரூபாய் நோட்டில் இடம்பெற்றிருக்க வேண்டும்.
பழைய 20 ரூபாய் நோட்டினை, ஆன்லைனில் OLX -ல் விற்றால், 6 லட்சம் ரூபாய் பணம் வரை சம்பாதிக்கலாம் என்று கடந்த மாதம்கூட செய்திகள் வலம்வந்தன.
10 ரூபாய் : அதேபோல, 10 ரூபாய்களுக்கும் இதுபோலவே டிமாண்ட் இருப்பதாக சோஷியல் மீடியாவில் செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால், எல்லாவகையான பழைய 10 ரூபாய் நோட்டுக்களையும் விற்க முடியாது.. ஜீரோ நம்பர் இந்த நோட்டில் அதிகமாக இருக்க வேண்டுமாம்.. நம்பர் 9 அதிகம் கொண்ட 10 ரூபாய் நோட்டுகளுக்கு கூடுதல் டிமாண்ட் ஆன்லைன் வர்த்தகத்தில் உள்ளதாம். எனவே, பழைய 10 ரூபாய் நோட்டின் சீரியல் நம்பரில் 0 நம்பர் அதிகமாக இருந்தால் அந்த ரூபாய் நோட்டு அதிக விலைக்கு விற்பனையாகும்..
10 ரூபாய் நோட்டுகளை தந்து, 7 லட்சம் ரூபாய் வரை தற்போது வருமானம் பார்க்கலாம்... https://coinbazzar.com என்ற வெப்சைட்டில், பழைய 10 ரூபாய் நோட்டுகளை விற்கலாம் என்கிறார்கள்.
மவுசு அதிகம்: இப்போது பழைய 50 ரூபாய் நோட்டுகளுக்கான மவுசு சற்று அதிகமாகவே இருக்கிறதாம்.. இந்த பழைய 50 ரூபாய் நோட்டுக்கு 700000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என்கிறார்கள்.. இந்த பழைய 50 ரூபாய் நோட்டின் வரிசை எண் 786 ஆகவும், நோட்டின் முன்பக்கம் மகாத்மா காந்தியின் படமும் இருப்பது மிக மிக முக்கியமானதாகும்..
இந்த அரியவகை 10 அல்லது 20 அல்லது 50 ரூபாய் கிடைத்தால், நீங்கள் செய்ய வேண்டியது, OLX -ல் ஒரு விற்பனையாளராக பதிவு செய்ய வேண்டும்.. பிறகு, உங்களிடமுள்ள அரியவகையான ரூபாய் நோட்டை தெளிவாக போட்டோ எடுத்து, அதை அப்லோடு செய்ய வேண்டும். இந்த விளம்பரத்தை பார்க்கும் நபர்கள், உங்களை தொடர்பு கொள்வார்கள். ஆனால், ஆன்லைனில் இந்த நோட்டுகளுக்கு தற்போதுள்ள டிமாண்ட் + கஸ்டமர்களின் விருப்பத்தை பொறுத்தே பணம் கிடைக்கும்.
பழைய நோட்டு: அதேசமயம், இந்த பழைய ரூபாய் நோட்டின் விலை எவ்வளவு என்பது குறித்து OLX - ல் அதிகாரப்பூர்வமாக தகவல்கள் பதிவாகவில்லை.. அதேபோல, ஆன்லைன் மூலமாக ரூபாய் நோட்டுகளையும் நாணயங்களையும் விற்பனை செய்வதையும், வாங்குவதையும் ரிசர்வ் வங்கியும் ஆதரிக்கவில்லை.. எனவே, இந்த ஆன்லைன் விற்பனைக்கு நீங்கள் மட்டுமே முழு பொறுப்பு என்பதால், கவனமுடன் செயல்பட வேண்டும்.
நாணயங்கள்: இதில், நாணயங்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.. மாதா வைஷ்ணோ தேவி உருவம் கொண்ட நாணயம் மிகவும் சிறப்பு வாய்ந்தது என்கிறார்கள்.. இதற்கும் ரூபாய் நோட்டுக்களை போலவே, அதிக டிமாண்ட் ஆன்லைன் மார்க்கெட்டில் இருக்கிறதாம்..
இதுபோன்ற நாணயம் உங்களிடம் இருந்தால், அதை ஆன்லைனில் விற்று 6 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம். இதுபோலவே, காண்டாமிருகத்தின் படத்துடன் கூடிய 25 பைசா நாணயம் இருந்தால் அதையும் 4 லட்சம் ரூபாய் வரை விற்கலாம் என்றெல்லாம் சோஷியல் மீடியாவில் விளம்பரங்கள் அடிக்கடி வெளிவருவது குறிப்பிடத்தக்கது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications