"முஸ்லிம் வாக்குகள்".. மொத்தமாக அள்ள எடப்பாடியார் விடுத்த அம்பு.. செம அறிவிப்பு!
முஸ்லீம்களின் ஓட்டுக்களை அள்ள எடப்பாடியார் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார்
சென்னை: மிக முக்கிய அறிவிப்பு ஒன்றினை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.. இதனால் ஒட்டுமொத்த இஸ்லாமியர்களின் ஓட்டுக்களை அள்ள, ஒத்த அறிவிப்பை கொண்டு முயன்றுள்ளார் எடப்பாடியார்.!
Recommended Video
கடந்த வருடம் கொரோனா தாக்கத்திற்கு முன்பு வரை, அதிமுக அரசை மிகப்பெரிய அளவுக்கு அசைத்து பார்த்தது சிஏஏ விவகாரம்தான்..!
உண்மையிலேயே எடப்பாடியாருக்கு அது ஒரு தர்மசங்கடமான காலகட்டம் என்றே சொல்லலாம்.. சிஏஏ சட்டத்தை நிறைவேற்ற முயன்றபோது, மாநிலங்களவையில் போதிய பெரும்பான்மை கிடைக்கவில்லை.. ஆனாலும், அதிமுக அந்த சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தது.. அதனால்தான், அப்படி ஒரு சட்டம் நிறைவேற்றவே முடிந்து.. இதுதான் தமிழகத்தில் பெரும் அதிருப்தியை தந்துவிட்டது.. சிறுபான்மையின மக்கள் கொந்தளித்து போனார்கள்..

எடப்பாடியார்
ஆனால், எடப்படியாரோ, சட்டமன்றத்தில் பொங்கிவிட்டார்.. முதல்வர் எடப்பாடி இன்று சட்டப்பேரவையில் ஆவேசமாக பேசிய பேச்சு காணொலியாக வைரலாகி வருகிறது. "ஏங்க.. சிஏஏ பற்றி மக்களை ஏன் பதற்றப்படுத்துகிறீர்கள்? சிஏஏ-வால் யாராவது பாதிக்கப்பட்டிருக்காங்களா? எங்கே, ஒருத்தரை காட்டுங்க பார்க்கலாம்? என்று எதிர்க்கட்சிகளை பார்த்து கோபமாக கேள்வி எழுப்பினார்..

தீர்மானம்
இதற்கு பிறகுதான், தமிழகம் முழுக்க இஸ்லாமிய அமைப்புகள் அதிமுகவுக்கு எதிராக போராட்டங்களை நடத்தினார்கள்.. இதை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று எடப்பாடியைச் சந்தித்து நேரடியாக கோரிக்கை மேல் கோரிக்கை வைத்தனர்.. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது மேலும் கொதிப்பை தந்தது..

தொடர் போராட்டம்
இந்த தொடர் போராட்டங்களினால், தமிழகத்தில் உள்ள மத்திய உளவுத்துறை அதிகாரிகள் டெல்லிக்கு நோட்டீஸ் அனுப்பினர்.. மத்திய அரசுக்கு எதிராக நடக்கும் போராட்டத்தை அதிமுக அரசு ஒடுக்கத் தவறிவிட்டது என்று சுட்டிக்காட்டி தாக்கினர்.. இவ்வளவும் எடப்பாடியாருக்கு பெருத்த அதிர்ச்சியாகவே வந்து விழுந்தது.

அமைச்சர்கள்
அப்போதுதான் பாஜகவின் அடிமை அரசு என்ற ஒரு பெயர், தங்கள் ஆட்சிக்கு விழுந்து வருகிறது என்பது லேசாக புரிய ஆரம்பித்தது.. இந்த விஷயத்தில் மத்திய அரசை நாம் ஆதரித்திருக்க வேண்டாம் என்று அமைச்சரவைக் கூட்டத்திலேயே சில அமைச்சர்கள் கருத்து தெரிவித்ததும் முதல்வரை அப்போது யோசிக்கவும் வைத்தது. "நாம இந்த ஆட்சியில் எத்தனையோ நல்ல திட்டங்களை அறிமுகம் செய்திருக்கிறோம்.. ஆனால், இப்படி ஒரு கெட்டபெயர் வந்துவிட்டதே.. சிஏஏ விஷயத்தில் அவசரப்பட்டுவிட்டோம்... இப்படி இதை வைத்து காண்டு ஸ்டாலின் அரசியல் செய்யும்படி ஆகிவிட்டதே" என்று நொந்து போனார்.

முகமது ஜான்
இதற்கு பிறகுதான், மெல்ல தன் பிம்பத்தை மாற்றினார்.. அப்போது நடந்த, இடைத்தேர்தலில் பக்கத்திலேயே பாஜகவை நெருங்கவிடவில்லை.. சிறுபான்மை மக்களிடம் தனது இமேஜைக் காப்பாற்றிக் கொள்ள பலவித முயற்சிகளை எடுத்தார்.. காஷ்மீர் விவகாரம், முத்தலாக் விவகாரம் தலைதூக்கி இருந்த சமயம், மாநிலங்களவை வேட்பாளராக முகமதுஜானை அறிவித்து தன்னுடைய வெற்றியை நூலிழையில் பெற்றது அதிமுக..பிறகு ராஜ்ய சபா சீட்டு விவகாரத்தில் இஸ்லாமியர் ஒருவருரை வேட்பாளராக அறிவிக்க யோசினை நடந்தது.. சிஏஏ அதிருப்தியில் இருந்து தப்புவதற்காக மட்டுமல்லாமல், இந்த சட்டசபை தேர்தலை மனதில் வைத்தும்தான் இப்படி ஆலோசிக்கப்பட்டது..

இஸ்லாமியர்
இது சம்பந்தமாகவே இன்றைய தினம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார் தமிழக முதல்வர் எடப்படியார்.. சிஏஏ தொடர்பாக போராட்டம் நடத்திய அத்தனை பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அவை ரத்து செய்யப்படுவதாக கூறியுள்ளார்.. அந்த நேரத்தில் சட்டம் ஒழுங்கை காப்பாற்றவே, போராட்டக்காரர்கள் மீது வழக்கு பதியப்பட்டதாக காரணம் சொல்லப்பட்டிருந்தாலும், இன்று அத்தனையும் தவிடுபொடியாகி உள்ளது. ஒட்டுமொத்த இஸ்லாமிய வாக்குகளின் முடிவுகளை அள்ள எடப்பாடியாரின் மற்றொரு அஸதிரமாகவே இந்த வழக்கு ரத்து அறிவிப்பு பார்க்கப்படுகிறது..

முஸ்லிம்கள்
பொதுமக்களின் நலன் கருதி மேல் நடவடிக்கைகள் கைவிடப்படுகிறது என்று முதல்வர் தன் வாயாலேயே இன்று தெரிவித்தாலும், இது அதிமுகவின் நலன் கருதியே என்பதை மறுக்க முடியாது.. எத்தனையோ நல்ல காரியம் செய்தும், இந்த ஒருவிஷயத்தில் கெட்ட பெயர் வந்துவிட்டதே என்று முதல்வர் அன்று கவலைப்பட்டதற்கு இன்று ஒரு தீர்வு கிடைத்துள்ளது.. இதன் பலனை வரும் தேர்தலில் அறுவடை செய்கிறாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்!
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications