Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

333 ரூபாயை தினமும் கட்டினால் பெரிய வட்டி.. RD போஸ்ட் ஆபீஸ் திட்டம்.. சூப்பரான தபால் அலுவலக சேமிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தினமும் ரூ. 333 முதலீடு செய்தால், திட்டத்தின் முடிவில் ரூ. 1700000 கிடைக்கும் சூப்பரான ஆர்.டி. போஸ்ட் ஆபீஸ் திட்டம் பற்றி தெரியுமா? ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில், ஒவ்வொரு மாதமும் 1000 ரூபாய், 2000 ரூபாய், 3000 ரூபாய், 4000 ரூபாய் அல்லது 5000 ரூபாயை முதலீடு செய்தால், திட்டம் முடியும்போது எவ்வளவு தொகை கிடைக்கும் தெரியுமா?

இந்திய தபால் துறையானது, பொதுமக்களின் சேமிப்பு பழக்கத்தினை ஊக்குவிப்பதற்காகவே, ஏராளமான முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.. அதிலும், வருமான வரி விலக்கு அளிக்கக்கூடிய சேமிப்பு திட்டங்களையும், அஞ்சலகங்கள் வழங்கி வருகின்றன... அந்தவகையில், அஞ்சல் அலுவலகத்தில் ஏராளமான திட்டங்கள் உள்ளன.

Recurring Deposit post office scheme


நம்பகத்தன்மை:
நீங்கள் செய்யும் முதலீடு முற்றிலும் பாதுகாப்பாக உள்ளதால், இந்த தபால் போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள் பொதுமக்களின் நம்பகத்தன்மையை பெற்று வருகிறது.

அந்தவகையில், குறிப்பிட்டு சொல்லக்கூடியது ரெக்கரிங் டெபாசிட் திட்டமாகும்.. நல்ல லாபத்தை தரக்கூடிய இந்த திட்டத்தில், நிலையான வட்டி வருமானம் கிடைக்கும்.. இப்போது ரெக்கரிங் டெபாசிட் திட்டத்திற்கு தபால் நிலையங்களில் வருடத்திற்கு 6.70% வட்டி வழங்கப்பட்டு வருகிறது.

டெபாசிட்:
இந்தத் திட்டத்தில் தினமும் ரூ.333 முதலீடு செய்தால், ஒவ்வொரு மாதமும் தோராயமாக ரூ.10,000 ஆகிறது. இதன் மூலம் வருடத்துக்கு 1.20 லட்சம் ரூபாய் மிச்சமாகும். அதாவது 5 வருட முதிர்வு காலத்தில் நீங்கள் ரூ.6 லட்சத்தை டெபாசிட் செய்வீர்கள். இப்போது கூட்டு வட்டியை 6.7 சதவீதமாகப் பார்த்தால், அது ரூ.1,13,659 ஆக இருக்கும், அதாவது உங்கள் மொத்த தொகை ரூ.7,13,659 ஆகிவிடும்.

ஆர்டி என்று சொல்லப்படும் ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில், மாதம் ரூ.100 முதலீடு செய்து உங்கள் கணக்கை திறக்கலாம்.. இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 5 வருடங்களாகும்.. உங்களுக்கு தேவையானால், அடுத்த 5-5 ஆண்டுகளுக்கும் நீட்டிப்பு செய்து கொள்ளலாம். அதிகபட்ச முதலீட்டு வரம்பு என்று எதுவுமே இதில் இல்லை..

முதலீடுகள்: தனியாக அல்லது கூட்டு கணக்கு தொடங்கும் வசதியும் 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தை பெயரிலும் கணக்கு தொடங்கலாம். இந்த திட்டத்தின் வட்டி விகிதமானது, காலாண்டு அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுகிறது.

இதில், ஒவ்வொரு மாதமும் 1000 ரூபாய், 2000 ரூபாய், 3000 ரூபாய், 4000 ரூபாய் அல்லது 5000 ரூபாயை முதலீடு செய்தால், திட்டம் முடியும்போது எவ்வளவு தொகை கிடைக்கும் தெரியுமா?

ஒரு தோராய கணக்கு:

ரூ.1000 முதலீடு செய்தால், ஆர்டி திட்டத்தில் ஒரு வருடத்தில் ரூ. 12,000 உங்கள் கணக்கிற்கு வரும். 5 ஆண்டுகளில் ரூ. 60,000 முதலீடு செய்வீர்கள். இதனை 6.7 சதவீதமாக சதவீதம் வட்டியாக கணக்கிட்டால், 5 ஆண்டுகளில் வட்டியில் மட்டுமே, ரூ. 11,366 கிடைக்கும். திட்டத்தின் முடிவில் மொத்தமாக ரூ. 71,366 கிடைக்கும்.

ரூ. 2000 ஆர்டி செய்தால், வருடத்துக்கு ரூ. 24,000 சேரும்.. 5 ஆண்டில் ரூ. 1,20,000 முதலீடு செய்வீர்கள். அப்படியானால், வட்டி விகிதத்தை 6.7 சதவீதமாக கணக்கிட்டால், 5 ஆண்டுகளில் வட்டியில் மட்டுமே, ரூ. 22,732 கிடைக்கும்.. திட்டத்தின் முடிவில் மொத்தமாக ரூ. 1,42,373 கிடைக்கும்.

ரூ. 3000 ஆர்டி செய்தால் வருடத்தில், ரூ. 36,000 சேரும்.. இது ஐந்தாண்டுகளில் ரூ. 1,80,000 முதலீடு செய்வீர்கள்.. 6.7 சதவீதமாக கணக்கிட்டால், 5 ஆண்டுகளில் வட்டியில் மட்டுமே, ரூ. 34,097 கிடைக்கும். மொத்தமாக ரூ. 2,14,097 கிடைக்கும்.

ரூ. 4000 ஆர்டி செய்தால் வருடத்தில் ரூ. 48,000 கணக்கிடல் சேரும். 5 வருடத்தில் ரூ. 2,40,000 முதலீடு என்றால், 6.7 சதவீத வட்டியில், 5 ஆண்டுகளில் ரூ. 45,463 வட்டியாகவும், மொத்தமாக ரூ. 2,85,463 கிடைக்கும்.

ரூ. 5000 முதலீடு செய்தால், 5 வருடத்திற்கு பிறகு மொத்தமாக 3,00,000 ரூபாயை முதலீடு செய்வீர்கள். 6.7 சதவீத வட்டி வழங்கப்பட்டால், மொத்த முதலீட்டுக்கு ரூ.56,830 வட்டி கிடைக்கும். முதிர்வு காலத்தில் 3,56,830 ரூபாயை மொத்தமாக பெற்றுக் கொள்ளலாம்.

ரூ. 6000 முதலீடு செய்தால், 5 வருடத்திற்கு பிறகு மொத்தமாக 3,60,000 ரூபாயை முதலீடு செய்திருப்பீர்கள்.. 6.7 சதவீத வட்டி வழங்கப்பட்டால், 68,197 ரூபாய் வட்டி மட்டுமே கிடைக்கும். முதிர்வு காலத்தில் 4,28,197 ரூபாயை மொத்தமாக பெறலாம்.

இந்த திட்டத்தில் கடன் வசதியும் உள்ளது.. ஒரு வருட காலம் செயல்பாட்டில் உள்ள கணக்குகளில், டெபாசிட் செய்யப்பட்ட தொகையில் 50 சதவீதம் வரை கடன் பெற முடியும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+